மேகக்கரை இல்லா
தூய வெளிர் நிறத்தில்
விரிந்த வானமாய்
பரந்து கிடக்கும்
எங்க ஊரு கண்மாய்
விடா மழைக்காய் வீட்டில்
சிறை இருக்கும் போதும்
ஆவலில் மனது
அசைபோடுவது
கண்மாய் நீரின்
கணம் பற்றித்தான்
குட்டி கடலாய்
கொட்டிகிடக்கும்
கண்மாயை கடந்திட
பயணித்த பறவைகள்
சுவர் மோதிய பந்தாய்
புறப்பட்ட இடம் திரும்பும்
மைய கண்மாயில் கால்பதித்து
மூழ்கி மண் எடுக்க
ஆம்சட்ரன்கால் கூட
ஆகதென்பது
அசையா நம்பிக்கை
பிரிந்திட மனதின்றி
கொக்கும் நாரையும்
ஒற்றைக்காலில் நின்று
அலகுகளை அலசி
நீர் கண்ணாடியில்
அழகு பார்த்து
பெருமை கொள்ளும்
காதல் சோடிக்கு பரிசு தந்து
போதை பார்வை பெற
நீர்த்திரை கிழித்து
மீன்க்கொத்தி பறவை
சாகசம் செய்யும்
எதிர் கரை தொட்டு
இமயம் தொட்ட வீரனாய்
தாவணிப் பெண்களின்
கனவுகளை களவாட
குற்றாலீஸ்வரன் முயற்சியில்
அரும்பு மீசைகள்
அணி வகுக்கும்
அரசமரக் குடை நிழலில்
காவலுக்காய் கணபதியும்
காற்றுக்காய் பெருசுகளும்
கிராமத்து கடற்க்கரையாய்
கண் மாயே கலகலக்கும்
பட்ட மரக்கட்டையில்
படகு பயணம் செய்து
நாயடி பட்ட தின்னும்
நினைவு படிமத்தில்
நிலைத்திருக்கிறது
பள்ளி குழந்தைகளின்
உற்சாகதுள்ளளோடு
மடை திறக்க ஓடி வரும்
தண்ணீரின் ஓசை
கிராம மனிதர்களின்
நள்ளிரவு தாலாட்டாய்
தன் நிலை தவற வைக்கும்
வான்முகம் விட்டு
சிதறிய வியர்வை
துளிகளை சேர்த்து
தண்ணீராய் தரம் மாற்றி
தானியம் விளைந்திட
தந்திரம் செய்யும்
அறிவியல் அறிவு கலந்த
அறிய திட்டம் இது என
ஆர்வம் மேலிட வனத்துறை
பூமி பெண்ணுக்கு
பசுமை ஆடை நெய்ய
நீர் வளர்த்த கண்மாய்குள்
இன்று காடு வளர்க்கிறது .
தூய வெளிர் நிறத்தில்
விரிந்த வானமாய்
பரந்து கிடக்கும்
எங்க ஊரு கண்மாய்
விடா மழைக்காய் வீட்டில்
சிறை இருக்கும் போதும்
ஆவலில் மனது
அசைபோடுவது
கண்மாய் நீரின்
கணம் பற்றித்தான்
குட்டி கடலாய்
கொட்டிகிடக்கும்
கண்மாயை கடந்திட
பயணித்த பறவைகள்
சுவர் மோதிய பந்தாய்
புறப்பட்ட இடம் திரும்பும்
மைய கண்மாயில் கால்பதித்து
மூழ்கி மண் எடுக்க
ஆம்சட்ரன்கால் கூட
ஆகதென்பது
அசையா நம்பிக்கை
பிரிந்திட மனதின்றி
கொக்கும் நாரையும்
ஒற்றைக்காலில் நின்று
அலகுகளை அலசி
நீர் கண்ணாடியில்
அழகு பார்த்து
பெருமை கொள்ளும்
காதல் சோடிக்கு பரிசு தந்து
போதை பார்வை பெற
நீர்த்திரை கிழித்து
மீன்க்கொத்தி பறவை
சாகசம் செய்யும்
எதிர் கரை தொட்டு
இமயம் தொட்ட வீரனாய்
தாவணிப் பெண்களின்
கனவுகளை களவாட
குற்றாலீஸ்வரன் முயற்சியில்
அரும்பு மீசைகள்
அணி வகுக்கும்
அரசமரக் குடை நிழலில்
காவலுக்காய் கணபதியும்
காற்றுக்காய் பெருசுகளும்
கிராமத்து கடற்க்கரையாய்
கண் மாயே கலகலக்கும்
பட்ட மரக்கட்டையில்
படகு பயணம் செய்து
நாயடி பட்ட தின்னும்
நினைவு படிமத்தில்
நிலைத்திருக்கிறது
பள்ளி குழந்தைகளின்
உற்சாகதுள்ளளோடு
மடை திறக்க ஓடி வரும்
தண்ணீரின் ஓசை
கிராம மனிதர்களின்
நள்ளிரவு தாலாட்டாய்
தன் நிலை தவற வைக்கும்
வான்முகம் விட்டு
சிதறிய வியர்வை
துளிகளை சேர்த்து
தண்ணீராய் தரம் மாற்றி
தானியம் விளைந்திட
தந்திரம் செய்யும்
அறிவியல் அறிவு கலந்த
அறிய திட்டம் இது என
ஆர்வம் மேலிட வனத்துறை
பூமி பெண்ணுக்கு
பசுமை ஆடை நெய்ய
நீர் வளர்த்த கண்மாய்குள்
இன்று காடு வளர்க்கிறது .
No comments:
Post a Comment