கன்னி களிப்பெனும் பெயரில்
என்னை கழிப்பதற்கு
உன்னை முன் காட்டி
ஆயுள் ஒப்பந்தத்துடன்
அனுப்பி வைத்தார்கள்
அறிமுக நொடிகளில்
நிறமும் உருவமும்
தரமறியும் தருனமாய் இல்லை
உடன் இருந்த நாளில்
முரண் மனிதன் நீ என
புரிதல் உருவானது
மனம் புரின்தொன்றாவது
மனம் புரிதல் என்பது
மனதில் மனம் வைக்காமல்
தினவெடுக்கும் உன் வயதுக்கு
தீனியாய் பார்க்கிறாய்
உறவு நெறியுனராமல்
உடல்களின் உராய்வையே
பேராய்வு செய்து
பீதி கொள்கிறாய்
ஆண் அடையாளம்முள்ள
யாரோடு பேசினாலும்
அகல கண் விரித்து
அதிர்வடைகிறாய்
கைகோர்த்து தோள் உரசி
கடை வீதி நடந்ததும்
பேருந்தில் இடம் பிடித்து
அருகமர்ந்து கொண்டதும்
காய் கறி வாங்க வந்து
பை சுமந்து வந்ததும்
கழிவறை கதவு வரை
உடன் வந்து போவதும்
அன்பின் அறுவடைக்கென
அகம் சிலிர்த்தேன் - நீ என்
அவயங்களை அடை காக்க
அகழியாய் இருந்திருக்கிறாய்
தடையும் கண்காணிப்பும்
சுயத்தை தூண்டிவிடும்
விட்டுவிடு கணவனே
அநாகரீக உன் அளவீடுகள்
அண்டை வீட்டானை
அழகனாக்கிட போகிறது
என்னை கழிப்பதற்கு
உன்னை முன் காட்டி
ஆயுள் ஒப்பந்தத்துடன்
அனுப்பி வைத்தார்கள்
அறிமுக நொடிகளில்
நிறமும் உருவமும்
தரமறியும் தருனமாய் இல்லை
உடன் இருந்த நாளில்
முரண் மனிதன் நீ என
புரிதல் உருவானது
மனம் புரின்தொன்றாவது
மனம் புரிதல் என்பது
மனதில் மனம் வைக்காமல்
தினவெடுக்கும் உன் வயதுக்கு
தீனியாய் பார்க்கிறாய்
உறவு நெறியுனராமல்
உடல்களின் உராய்வையே
பேராய்வு செய்து
பீதி கொள்கிறாய்
ஆண் அடையாளம்முள்ள
யாரோடு பேசினாலும்
அகல கண் விரித்து
அதிர்வடைகிறாய்
கைகோர்த்து தோள் உரசி
கடை வீதி நடந்ததும்
பேருந்தில் இடம் பிடித்து
அருகமர்ந்து கொண்டதும்
காய் கறி வாங்க வந்து
பை சுமந்து வந்ததும்
கழிவறை கதவு வரை
உடன் வந்து போவதும்
அன்பின் அறுவடைக்கென
அகம் சிலிர்த்தேன் - நீ என்
அவயங்களை அடை காக்க
அகழியாய் இருந்திருக்கிறாய்
தடையும் கண்காணிப்பும்
சுயத்தை தூண்டிவிடும்
விட்டுவிடு கணவனே
அநாகரீக உன் அளவீடுகள்
அண்டை வீட்டானை
அழகனாக்கிட போகிறது
No comments:
Post a Comment