Tuesday, November 15, 2022

தனிக்குடித்தனம் ( சிறுகதை)



தனிக்குடித்தனம்..

(சிறுகதை)


_மங்கலக்குடி 
நா. கலையரசன்_


                                    1.   

பூமிநாதனின் வீடு கால்களில் தீ. பற்றிக் கொண்டது போல் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது ஒவ்வருவரும் ஆளுக்கு ஒரு வேலை என சுறுசுறுப்பாக செய்து கொண்டிருந்தார்கள் பூமிநாதனின் மனைவி பத்மா ரிங்மாஸ்டரைப் போல இயக்கிக்கொண்டிருந்தாள் இத்தனை பரபரப்புக்கிடையே பூமிநாதன்செல்போனை வைத்து டிவி விவாதத்தை கேட்டுக் கொண்டு எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் இருந்ததை பார்க்க பத்மாவிர்க்கு கோபமாக வந்தது  "உங்களுக்கு அவசர ஆத்திரம் தெரியாது இன்னைக்கு  என்ன நடக்க போகுது அத புரிஞ்சுக்காம நீங்க வழக்கம் போல இப்படி செல்ல.. நோண்டிக்கிட்டு இருக்கிறது என்னவேலை" என்று கணவனை விரட்டினாள் "நீங்க எல்லாறும்தான் வேலை செய்றீங்களே இதுல நான் என்ன செய்யறது" பூமிநாதன் சொன்ன பதிலை கேட்டதும்"அதுக்கு இல்லங்க எத்தனை மணிக்கு வராங்க எத்தனை பேர் வர்றாங்க இதெல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டா  சமைப்பதற் கு ஈசியா இருக்கும் இல்லயா  ஆளுக கூட வந்துட்டா  செஞ்ச பதார்த்தம் போதலைன்னா 
செரமம் தானே  அத போன் போட்டு கேட்காமல் இப்படி உட்கார்ந்து செல்ல நோண்டிட்டு இருக்கீங்களேஅதான் கேட்டேன்"ஏறிட்டு பார்த்த பூமிநாதன் "ஏற்கனவே சொல்லிட்டேனம்மா. அவங்க கிட்ட கேட்டாச்சு மாப்பிள்ளை உள்பட 11 பேர் வருவாங்கன்னு உங்கிட்டயும் சொல்லியாச்சு  மறுபடியும் போன் பண்ணி கேட்கணுமா" சலித்துக் கொண்டார் பூமிநாதன் "அதுக்கு இல்லைங்க  ஒரு குறையும் வந்துட கூடாதுன்னு்தான் நான் யோசிக்கிறேன்" செல்போனை மூடி வைத்து விட்டு நன்றாக பத்மாவை பார்த்து"அதெல்லாம் ஒரு குறையும் வராது நீ போய்  சமையலறையில்  என்ன செய்றாங்க ஏது செய்றாங்கன்னு பாரு".. என்று பூமிநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய மகன் சுந்தர் வந்து சேர்ந்தான் அவனிடம் "தம்பி நம்ம ராமமூர்த்தி அண்ணன் கிட்ட பால் சொல்லி இருக்கேன் அதை போய் நீ வாங்கிட்டு வந்துரு" அருகே வந்து நின்று "எவ்வளவு பால் வாங்கணும்" என்று கேட்டான்"ரெண்டு லிட்டர் சொல்லி இருக்கேன்" இடையில் தலையிட்ட பூமிநாதன் "அதான் பிரிட்ஜில பால் பாக்கெட் இருந்ததே"என்றார் "அது பாக்கெட் பாலுங்க நான் சொல்றது பசுமாட்டுப்பால் செய்றது செய்றோம் உருப்படியா செய்வோமே"என்றதும் "ஏதோ செய்" என செல்போனில்மூழ்கினார். சுந்தர் தனது நண்பனை அழைத்துக் கொண்டு பால் வாங்குவதற்காக சென்றான் அப்போது தோளில் ஹேண்ட் பேக்கோடு வந்த ஹேமாவை பார்த்த பத்மா "வாடிதங்கம் வாடி சீக்கிரம் வா எங்கே லேட்டா வருவியோன்னு படபடப்பா இருந்தேன் போய் டக்குனு  பிரஷ்ஷாயிட்டுவா  சேலை ஜாக்கெட் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் அதை எடுத்து கட்டிக்கிட்டு ரெடியாகு"" சரி மா" என்றவள் அவளது ரூமுக்குள் சென்றாள் ஹேமாவின் பின்னாலேயே வந்த பத்மா ரூமிற்குள் வந்ததும் "இங்க பாரு இதுவரைக்கும் எத்தனையோ மாப்பிள்ள வந்தாக போனாக ஒன்னும் கை கூடல அதுக்கு காரணம் என்னன்னு தெரியல அது நீ தனியா பேசுனதாகூட இருக்கலாம் அதெல்லாம் போகட்டும் இன்னைக்கும் நான் மாப்பிள்ளையோட தனியா பேசணும்  கினியா பேசணும்னு ஏதாவதுசொண்ணேன்னு வையி வந்தவங்க போனதுக்கு பின்னாடி உன்னை கொன்னே போற்றுவேன் மனசுல வச்சுக்க" என்று மகளை எச்சரிப்பது போல் சொன்னாள் ஹேமா  சிரித்தபடி "அம்மா நீ ஏன் இப்படி சொல்ற நீ சொன்ன மாதிரியே நீ கொடுக்கிற சேலைய கட்டிக்கிறேன் நீ கொடுக்கிற பூவை வச்சுக்கிறேன் நீ கொடுக்கிற காப்பியை கொண்டுபோய் கொடுத்து நீ சொன்ன மாதிரியே எல்லாரையும் கும்பிட்டுநின்டுறுக்கேன் இது எத்தனை தடவை உனக்கும் தெரியாது எனக்கும் எண்ணிக்கை தெரியாது ஆனா நீ சொன்னதை நான் செஞ்சேனா இல்லையா வாழ போரவ நான் மாப்பிள்ளையோட தனியா பேசணும்னு சொல்றது என்ன தப்பு நாங்க காலம் பூரா வாழப்போரவங்க இல்லையா அவரோட கலந்து பேசி அவரை நான் புரிஞ்சுக்க வேணாமா அதுக்காகத்தான் பேசுறேன் இதை நீ தடுக்காத" என்று அம்மாவின் கன்னங்களை தாங்கி பிடித்து அசைத்தவாறு சொன்னான் "உனக்கு வயசாகிட்டே இருக்குடி வாழையவும் பொண்ணையும் பருவத்திலேயே நட்டுவைக்கணும் .கட்டிவைக்கணும்னு சொல்வாங்க காலத்தில கல்யாணம் பண்ணாம வச்சிருந்தா பின்னாடி மாப்பிள்ளை கிடைக்கிறது ரொம்ப செரமம் டி பொண்ணுங்களுக்கு வருஷம் கடந்துறுச்சின்னா  வயசாயிருச்சுன்னு ஒதுக்கி விட்டுருவாங்க அப்புறம் மாப்பிள்ளை கிடைக்காது இப்ப வர்ற மாப்பிள்ளை நல்லா படிச்சவரு கை நிறைய சம்பாதிக்கிறார் நிம்மதியா சந்தோஷமா வாழலாம் அதனால இந்த மாப்பிள்ளைய பார்த்து ஓகே சொல்லீருடி எங்களுக்கும் வயசாகுதா இல்லையா புரிஞ்சுக்கடி அம்மாவ"கெஞ்சுவது போல் பேசிய அம்மாவை பார்த்து
 "அம்மா நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுது எனக்கு மட்டும் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை இல்லையா என்ன ஆனாலும் கூட என்னைய புரிஞ்சிக்கிறவரா இருக்கணுமா இல்லையா அதனால நான் சில விஷயங்களை மாப்பிள்ளையோட தனியா பேசுரேங்குறேன் அதை மட்டும் தடுக்காத மற்றபடி நீ சொல்ற எல்லாத்தையும் நான் செய்றேன்" என்று முடித்தாள் "சரி பார்த்துக்கோ நான் சொல்றத சொல்லிட்டேன் சீக்கிரம் ரெடி ஆகு" என்று வேகமாக வெளியேவந்து சமையல் அறைக்கு சென்றுபார்த்தாள் எல்லாம் ரெடி ஆயிடுச்சா என்று விசாரித்தாள் சமையலறையில் பக்கத்து பக்கத்தில் வீட்டுக்காரர்கள்பத்மாவின்
தோழிகள் ஹேமாவின் மீது பிரியமாக இருப்பவர்கள் ஹேமாவை பெண் பார்க்க வரும் போதெல்லாம் சமையலுக்கு வந்து உதவுவது அவர்கள்தான் வழக்கம் போல இன்றும் அதேபோல வந்து பத்மா சொன்னபடி ஸ்வீட் .கார வகைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் "எல்லாம் ரெடி ஆயிடுச்சா"என்று விசாரித்தபடி "சாப்பிட்டு பார்த்திங்களாடி ஏதாவது குறை வந்துவிடப்போறது" என்று படபடப்பாக செய்து வைத்திருந்த ஒவ்வொரு பலகாரத்தையும் சுவைத்துப்பார்த்தால் அத்தனையும் அற்புதமாக இருந்தது அப்போது சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காந்திமதி சொன்னாள் "அக்கா ஹேமாவுக்காகவோ இல்லையோ இந்த ஸ்வீட்டு.காரத்துக்காவது மாப்பிள்ளை இந்த பொண்ண கட்டிக்கிடுவார் பாருங்க" என்று சிரித்தாள் கூட இருந்தவர்களும் சேர்ந்து சிரித்தார்கள் பத்மாவுக்கு பெருமையாக இருந்தது  நேசமான தோழிகள் அதுவும் பக்கத்து பக்கத்து வீடுகளில் இருப்பவர்களாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி என்று யோசித்தாள் "சரிடி நீங்க ரெடியா இருங்க மாப்பிள்ளை வீட்டுக்காரர் கள் புறப்டுட்டாகளா.. எத்தன மனிக்கு வருவாக ..என்று விசாரிச்சுட்டு வர்றேன்" என்றபடி பத்மா வெளியே வந்தாள் இதிலே அவளின் தங்கை மகனான மகேந்திரன் நின்று கொண்டிருந்தான் "மகி.. எலை.. வந்திருச்சா பாத்தியா சூரியா கிட்ட சொல்லி இருந்தேன் கொண்டு வந்துட்டாரான்னு பாரு"  அவனுக்கு ஒரு வேலையை சொல்லிவிட்டு மீண்டும் கணவன் பூமிநாதன் இருந்த இடத்திற்கு வந்தாள் அவனைப் பார்த்ததும் அவனிடம் அருகில் நின்று ரகசியமாக "இங்க பாருங்க உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசுங்க வழக்கம் போல இந்த மாப்பிள்ளை கிட்டயும் தனியா பேசுறேன்னு சொல்லி ஏதாவது சொதப்பிட போறா நீங்க சொன்னா அவ கேட்பா மாப்பிள்ளையோட எதுவும் பேசவேணாம் எல்லாரும் உக்காந்து பேசுறப்போ ஏதாவது கேட்கணும்னா கேக்கட்டும் மத்தபடி அவ தனியா எல்லாம் கூட்டிட்டு போய் பேச வேணாம்னு நீங்க பேசுஙக" பத்மா சொன்னதை கேட்டதும் மெதுவாக தலையை உயர்த்தி அவள் முகத்தை பார்த்தவர் "ஏன் பத்மா.. வர்ற மாப்பிள்ளையோட ஹேமா பேசுறதுனால உனக்கென்ன பிரச்சனை" என்றார் "அதுக்கில்லைங்க மாப்பிள்ளையோட அவ ஏதோ பேசறா அவங்களுக்கு பிடிக்காத எதையோஇவ பேசரான்னு எனக்கு படுது நல்ல மாப்பிள்ளை நல்ல குணம்னு எல்லாரும் சொல்றாங்க குடும்பமும் நல்ல குடும்பம் எந்தபிக்கல் புடுங்கலும் இல்லாம நம்ம பொண்ண சந்தோஷமா வாழுவா அப்படிப்பட்ட இடம் இதையும் எதையாவது பேசி கெடுத்துருவாளோன்னு பயமா இருக்குங்க  நீங்கதான் கொஞ்சம் பேசுங்களேன்" பூமிநாதனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை "பத்மா நீ ஏன் இப்படி பதட்டப்படற இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் விவரமாத்தான் வளர்றாங்க பெத்தவங்க தான் எதை நினைச்சாலும் பயப்படரோம் நீ ஒன்னும் கவலைப்படாத நம்ம பொண்ணு தைரியமானவ விவரமானவ அவ தப்பா எதுவும் பேசமாட்டான்னு நான் நம்புறேன் அதனால நீ ஆக வேண்டியாதப் பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க"  பால். எலை எல்லாம் வந்து சேர்ந்தது சமையலும் தயாராகி விட மாப்பிள்ளை வீட்டாரை எதிர்பார்த்து அனைவரின் பார்வையும் வாசலிலேயே மையம் கொண்டு இருந்தது இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல வாசலில் இரண்டு கார்கள் வரிசையாக வந்துநின்றது அதிலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இறங்கி தாம்பூல தட்டுகளுடன் வீட்டிற்குள் நுழைந்தார்கள் அவர்கள் அனைவரையும் வரவேற்று அமர வைத்து சம்பிரதாயபடி ஒவ்வொன்றையும் செய்தார்கள் பெண் பார்க்கும் படலமும் துவங்கியது ஹேமாஇயல்பாகவே கண்களை உறுத்தாத அழகுதான் என்றாலும் இன்று அவளை விசேஷமாக அழகு படுத்த வேண்டும் என்கிற பத்மாவின் அக்கறையால்இளம் சிவப்பு நிறத்தில் பட்டுப் புடவை கட்டி  கைகளில் தட்டில் தேநீர் குவளைகளை வைத்து அவளை கொடுக்க வைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் கொடுத்த பிறகு பொதுவாக ஒரு இடத்தில் நின்று அனைவரையும் கைகளை கூப்பி வணங்கினாள்  மாப்பிள்ளையின் தகப்பனார் "பரவால்லம்மா நீ உக்காரு" என சோபாவை காட்டினார் ஆனாலும் ஹேமா தனது தந்தைக்குப் பின் நின்று கொண்டிருந்த தாயோடு வந்து சேர்ந்து நின்றாள் வழக்கமான பேச்சுகளுடன் பெண்ணை தங்களுக்கு பிடித்து விட்டது என மாப்பிள்ளை முகிலனோடு வந்த அனைவரும் வழிமொழிந்தார்கள் மாப்பிள்ளையின் தாய் தந்தைக்கும் பிடித்துப் போக "ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சயத்தை வைத்துக்கொள்வோம்" என்று பேசினார்கள் எல்லாம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தபோது இடையில் தலையிட்டு "நீங்க எல்லாரும் புடிச்சி இருக்குன்னு சொல்லிட்டீங்க ஆனா கட்டிக்க போற பொண்ணுக்கு மாப்பிள்ளைய புடிச்சிருக்கான்னு கேக்கலையே முதல்ல பொண்ணு கிட்ட கேளுங்க" என்றார் மாப்பிள்ளையோடு வந்திருந்த உறவினர்களில் ஒருவர் அப்போதுதான் அனைவருக்கும் நினைவு வந்தது போல "ஆமாமாபொண்ணையும் கேக்கணும்ல" என்றனர் அனைவரும் ஹேமாவையே பார்க்க அவள் சிரித்தபடி "என் முடிவ நான் சொல்றதுக்கு முன்னால மாப்பிள்ளையோட  தனியா பேசணும்" என்றாள் பத்மாவின் முகத்தில் இருள் கம்மியது பூமிநாதன் லேசாக சிரித்துக்கொண்டார் "ஓரிருவர் தயங்கினாலும் பெரும்பான்மையானவர்கள் தாராளமாக பேசட்டும் என வழிவிட்டார்கள் வழக்கம் போல மாப்பிள்ளை முகிலனுடன்  ஹேமா மாடிக்கு போனாள் பூமிநாதனும் பத்மாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் மற்றவர்கள் மாடியில் அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பது பற்றி அவரவர் புரிதலுக்கு ஏற்ப கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் உடன் வந்திருந்த ஒருவர் "அந்த காலத்தில் எல்லாம் நாங்கள் பொண் பார்க்கவே போவதில்லை அம்மா அப்பா பாப்பாங்க  அக்கா தங்கச்சிகூட  பார்த்திருப்பாங்க மத்தபடி எங்களுக்கு பொண்ணு கருப்பா சிவப்பாங்கரதுகூட கல்யாணத்தன்னைக்கு மணமேடைல பார்த்தால்தான் ஆனா இன்னைக்கு அப்படியா  முன்னாடியே பாக்குறது செல்போன் நம்பர் வாங்கிக்கிட்டு விடிய விடிய பேசுறதுன்னு எவ்வளவோ நடக்குது" என பெருமூச்சுவிட்டார் "இதில் என்ன தப்பு இருக்கு காலத்துக்கும்ஒன்னா வாழ போறவங்க கூடி கலந்து பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கரது நல்லது தானே" என்றார் முகிலனின் தந்தை "அதுவும் சரிதான்" என்று பலர் ஆமோதித்தனர் அனைவர் பார்வையும் மாறி மாறி மாடிப் படிகளிலேயே இருந்தது சிறிது நேரத்தில் இருவரும் 
மாடியிலிருந்து இறங்கி வந்தார்கள் ஆர்வமாக இருவர் முகத்தையும் பார்த்தவர்கள் ஏதாவது சொல்வார்கள் என எதிர்பார்த்தார்கள் வந்ததும் மாப்பிள்ளை முகிலன் பத்மாவையும் பூமி நாதனையும் பார்த்து கைகூப்பி "உங்களுக்கு நாங்க ஊருக்கு போயிட்டு பதில் சொல்றோம்" என்று சொல்லிவிட்டு தாய், தந்தையை பார்த்தான் அவர்கள் இருவரும் எழ அனைவரும் எழுந்து விட்டார்கள் "சாப்டுட்டு போலாமே" பூமிநாதன்அவர்களை சாப்பிட அழைத்தார் "ஒண்ணும் பிரச்சனை இல்லைசார் ஸ்வீட் காரம் சாப்பிட்டாச்சு காபி குடிச்சாச்சு அடுத்து ஒரு நல்ல செய்தியோடு வந்து லஞ்சே சாப்பிட்டு போகிறோம்" என்று சிரித்தபடி விடை பெற்றார்கள் இரண்டு கார்களும் கண்ணை விட்டு மறைந்ததும் நேராக வந்த பத்மா ஹேமாவை பார்த்து "இதையும் கெடுத்துட்டியாடி அப்படி என்ன தாண்டி பேசுவ ஒவ்வொரு மாப்பிள்ளையும் உன்ன பார்க்கும்போது இருக்கரதுக்கும் தனியா கூட்டிட்டு போய் பேசினதுக்கு பின்னாடி வந்து பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அப்படி என்ன பேசி தொலையுற அதையாவது சொல்லித் தொலை" என்று அடித்தொண்டையில் கத்தினாள் பூமிநாதன் தலையிட்டு "பத்மா ஏன் இப்படி கத்துற அவளுக்கு எல்லாம் தெரியும் இது அவ வாழ்க்கை அவ முடிவு செய்யட்டும் இடையில தேவையில்லாம பேச நாம யாரு வாய மூடிட்டு பேசாம இரு" என்றதும் "என் மேல கோவமா அப்பா" தந்தையை பார்த்தாள் ஹேமா "உன் மேல எப்படிடா கோபப்படுவேன் நீ செய்யறது தான் கரெக்ட் நாங்க பெத்த புள்ளைக்கு கல்யாணம் பண்ணி சீக்கிரம் பேரன் பேத்திகளை பார்க்க ஆசைப்படுவோம் அந்த ஆசையில வர்ற அவசரத்தில தான் என்ன ஏதுன்னு யோசிக்காம யாருக்காவது பிள்ளைகளை கட்டி கொடுத்து காலமெல்லாம் கண்ணீர் விடுற பெத்தவங்களா நாங்க இருக்க விரும்பல எங்களுக்கு எங்க பொண்ணு வாழ்க்கை முக்கியம் அதே நேரம் அந்த வாழ்க்கை அவளுக்கு புடிச்ச வாழ்க்கையா இருந்தா எங்களுக்கு ரொம்ப சந்தோசம்  நீ சரியா தான் செய்வே அந்த நம்பிக்கை அப்பாவுக்கு இருக்கு  நீ போ" மகளைப் பார்த்து சிரித்தார் ஹேமா தனது அறைக்குள் சென்று உடைகளை மாற்றத் தொடங்கினாள் ..அசையாமல் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டு விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த  பத்மாவை பார்த்து ஆதரவாக அவள் தோள்களை தடவியபடி "இங்க பாரு பத்மா__ பிள்ளைகளை பெத்தமா ..வளத்தமா ..படிக்க வெச்ச மா ..ஒரு வேலையை பார்த்து கொடுத்தோமா.. அதோட நம்ம வேலை முடிஞ்சது கல்யாணம் பண்ணி வைக்கிறதும் நம்ம வேலைதான் ஆனா அது கல்யாணம் பண்ணிக்கப் போற வங்களுக்கும் புடிச்சிருக்கணுமுல்ல அத விட்டுட்டு நாம சொல்றவங்களைத்தான் அவங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி பிடிவாதம் புடிக்கிறது சரி இல்லை புரிஞ்சுக்க.. கட்டிக்கிற போற மாப்பிள்ளை கிட்ட அவ எதையோ எதிர்பார்க்கிறா அந்த எதிர்பார்ப்பு கல்யாணம் பண்ணிக்கப்போற அவள பொருத்தவரை  கரெக்ட்டு தானே நீ ஏன் கவலைப் படுற நிச்சயமா நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நடக்கும் அதுவும் அவ விருப்பப்படியே  நடக்கும் நிம்மதியா போய் தூங்கு" என்றவாறு தனது அறையை நோக்கி நடந்தார் பூமிநாதன் "என்னதான் அப்படி பேசுவா" என யோசித்தபடி இருந்தாள் பத்மா எத்தனை நேரம் அப்படி யோசித்தாலோ தெரியவில்லை அமர்ந்திருந்த சோபாவிலேயே உறங்கி விட்டாள் 


                                          2


மறுநாள் அதிகாலை ஐந்தரை மணிக்கு ஹேமா எழுந்து விட்டாள் சிறிது நேரம் அறைக்குள்ளேயே இருந்து வீட்டின் தட்பவெப்ப நிலையை கவனித்தாள் நேற்று நடந்த நிகழ்வுக்கு ஒரு போர்மேகம் சூழ்ந்திருக்கும் என்பதை  அறிவாள் இருந்தாலும் அது போராக மாறிவிடாமல் தப்பித்து கரையேறி விட்டால் மாலையில் வந்து தாயை சமாளித்து விடலாம் என்று யோசித்தாள்  நேற்று வீட்டில் எந்த சம்பவமும் நடக்காதது போல காட்டிக்கொண்டு காலையில் எழுந்து குளித்து முடித்து அலுவலகத்திற்கு செல்ல ஆயத்தமானால் ஹேமா  தனது அறையை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த தந்தையிடம் "குட் மார்னிங் பா".. என்றவள் தந்தையின் புன்னகையை பதிலாக பெற்றுக்கொண்டு "தம்பி எழுந்துட்டானா" விசாரித்தபடி அவன் அறையை எட்டிப் பார்த்தாள் அவனும் புறப்பட்டுக் கொண்டிருந்தான் அவனை துரிதமாக புறப்பட வைத்து இருவரும் சமையல் அறைக்குள் வந்தார்கள் அம்மா இவர்களை கண்டு கொள்ளாமலேயே செய்து தந்த காலை உணவை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கான டிபன் பாக்ஸ்களை எடுத்துக்கொண்டு புறப்படும் முன்பாகஅம்மாவின் அருகில் மெதுவாக சென்றவள் அவள் திரும்புவதற்கு முன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு 
டாட்டாம்மா என்றபடி அவள் திட்டுவதை காதில் வாங்காமல்  வெளியே ஓடி வந்து விட்டாள் அப்பாவிடமும் சொல்லிக்கொண்டு வாசலுக்கு வந்தவள் தின்னையில் நின்ற  ஸ்கூட்டியை தம்பி சுந்தரை இறக்க வைத்து இருவரும் ஸ்கூட்டியில் புறப்பட்டார்கள் சுந்தர் ராமநாதபுரம் நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி மேக்ஸ் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்தம்பியை  கல்லூரியில் விட்டு விட்டு அவள் பணியாற்றும் ஆர்டிஓ  அலுவலகத்திற்கு செல்வதும் மாலை வரும்போது அவனை அழைத்து வருவதுமாக அவள் பணி இருந்தது வண்டியில் செல்லும்போது மனதிற்குள் அம்மா நேற்று பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது பாவம் அவள் தனக்கு திருமணம் செய்து வைத்து பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில்  பரிதவிப்பது தெரிகிறது ஆனாலும் தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை அதே சமயம் அம்மாவை பார்க்கவும் பாவமாக இருந்தது மாலையில் வந்து அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்ற முடிவோடு தம்பியை கல்லூரியில் இறக்கிவிட்டு தனது அலுவலகத்திற்கு சென்றாள் இவளது வருகைக்காக அலுவலக வாசலில் உள்ள தேநீர் கடையில் அவருடைய நெருக்கமான தோழி முத்தமிழ் நின்று கொண்டு இருந்தாள் இருவரும் கல்லூரி தோழிகளாக இருந்து இன்று அலுவலகத்திலும்  தோழிகளாக தொடர்கிறார்கள் தனது தாய்க்கு அடுத்து சகலத்தையும் பரிமாறி கொள்பவளாக முத்தமிழ் இருந்தாள் ஹேமா அவளை பார்த்ததும் கையசைத்துக் கொண்டு அவளை நெருங்கினாள் அவளை கண்டதும் நெருங்கி வந்து அவளின் கைகளை பற்றி கொண்டு இழுத்துச் சென்று இருக்கைகளில் அமர வைத்த படி "ரெண்டு.. டீ "என்று சொல்லிவிட்டு ஹேமாவின் முகத்தை பார்த்து "நேத்து என்னடி ஆச்சு "ஆர்வமாக கேட்ட முத்தமிழை பார்த்து "நீ நினைக்கிற மாதிரிஒன்னும் ஆகல வழக்கம்போல ஊத்திக்கிச்சு"இது வழக்கமானதுதான் என்றாலும்"என்னடி சொல்ற.
 ஏன் மாப்ள உன்ன புடிக்கலைன்னு சொல்லிட்டாரா.. ஏன் .எதுக்கு. எதனால. பதட்டமானால் அவளை ஜாடையாக பார்த்தபடி ஹேமா "இப்படி மொத்தமா கேட்டா எப்படி ஒவ்வொன்னா கேளு" சிரித்தாள் "அது சரி ..என்ன பிரச்சனை" விழிகள் விரிய அவளையே பார்த்தாள் "வழக்கம்போல நான் அவரோடு பேசினேன் அவரு
ஊருக்கு போய் பதில் சொல்றதா சொல்லிட்டு போயிட்டார்" அருகில் இருந்த மரத்தில் கதறிக் கொண்டிருந்த காக்கையை பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் தோள்களை தட்டி "உன்னத்தான்டி கேட்கிறேன் சொல்லு ஏன் உன்னைய பிடிக்கலையாம். அழகு படிப்பு. வேலை .இதுல எதையும் உன்கிட்ட குறை காண முடியாது வசதியில வேணும்னா சொல்லலாம் ஆனா  அதையெல்லாம் விசாரிச்சிட்டு தானே பொண்ணே பார்க்க வந்திருப்பாங்க அப்போ அதெல்லாம் காரணம் இல்லைதானே வேற என்ன".. அவளை நிமிர்ந்து பார்த்த ஹேமா"ஒரு வேலை நானவரோடபேசினதுனால கூட இருக்கலாம்"சிரித்த ஹேமாவை எரிச்சலாக பார்த்த முத்தமிழ் "சிரிக்காதடி. பொண்ணு பாக்கவர்ர மாப்பிள்ளைங்க எல்லாம் இப்படி கதறி ஒடர அளவுக்கு என்னதாண்டி பேசரே"... சிரிப்பை நிறுத்திவிட்டு முத்தமிழை பார்த்து"என்னடி சிரிக்கக் கூட விட மாட்டேங்குற இப்ப என்ன நான் மாப்பிள்ளையோட என்ன பேசினேன்னு உனக்கு தெரியனும் அவ்வளவு தானே சொல்றேன் அன்னைக்கு என்ன நடந்ததுன்னா" அவளை ஜாடையாக பார்த்தபடி வானத்தைப் பார்த்தாள்..
                                           

                                              3

ஹேமாவும் முகிலனும் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தார்கள் ஆச்சரியப்பட்டான் முகிலன் மாடியில் டெல்டா மாவட்ட பகுதிகளில் கம்பெனி  நடவு செய்வார்களே அதுபோல வரிசை வரிசையாக தொட்டிச் செடிகள் வைக்கப்பட்டு பார்க்கவே அழகாக இருந்தது அதிலும் கீரை வகைகளோடு துளசி. கற்பூரவல்லி ஆடாதொடை. என மூலிகை செடிகளும் நிறைந்து இருந்தது ஒரு மாடியில் வந்து நிற்பது போல் இல்லாமல் ஏதோ ஒரு இயற்கை சூழ்ந்த இடத்தில் நிற்பது போல இருந்தது இன்னொரு பக்கம் சிறந்த ஓவியர் வரைந்த நிழல்படம் போல சீராகவும் உயரமாகவும் இருந்த வீடுகள் மேலிருந்து பார்க்கும் போது மனதை ஈர்த்தது அப்படியே நடந்து மாடியின் தடுப்புச் சுவர் அருகே நின்று அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தான் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தது இரவு சூரியனை மறைத்து கொண்டி ருந்த நேரம் என்பதால் வாகனங்களின் ஹெட்லைட்டுகளின்ஒளி வரிசை அணிவகுப்பு போல அழகாக இருந்தது முகிலன் தடுப்புச் சுவரில் சாய்ந்தபடி திரும்பி நின்று ஹேமாவை பார்த்தான் பார்த்தான் என்பதை விட பார்வையாலேயே அவளை விழுங்க முயல்பவனைப் போல பார்த்தான் ஹேமாவுக்கு கோபம் எட்டிப்பார்த்தது "இந்த ஆண்கள் எப்படித்தான் யோசிக்கிறார்களோ.. புதிதாக பார்க்கிற ஒரு பெண்ணை இப்படி கூச்சமே இல்லாமல் மேலிருந்து கீழ் வரை பார்க்கிற இந்த அநாகரிகத்தைத்தான் ஆண்பிள்ளத்தனம்  என்கிறார்கள் என்ன அசிங்கம் இது.. இதுபோல ஒரு பெண் பார்க்க முடியுமா பார்த்தால் அவள் ஒரு மாதிரி என வாய் கூசாமல் பேசுவார்கள்  சே.." என தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவளை தனது செறுமலால் தன்னை கவனிக்க வைத்து "இந்த மாடி எவ்வளவு நேர்த்தியா அழகா இருக்கு" பாராட்டியதும் "நான் வேலைக்கும்  தம்பி காலேஜுக்கும் போனதுக்கப்பரம் என்னோட அப்பா அம்மா சேர்ந்து இப்படி ஒரு தோட்டத்தை  மாடியில் உருவாக்கி இருக்காங்க" செடிகளை தடவி கொடுத்தபடி நின்று பேசிய ஹேமாவை பார்க்க ஒரு ஓவியம் போலவே தெரிந்தாள் "அற்புதமா இருக்கு மாடியில கொஞ்ச நேரம் நின்னா மனசு லேசா ஆகிடும் போல இருக்கு" மூச்சை பெரிதாக இழுத்து வெளியில் விட்டபடி "சரி என்னமோ பேசணும்னு சொன்னியே அது என்ன சொல்லு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" அவனைப் பார்த்து சிரித்து விட்டு "அப்படி என்ன சந்தோஷம்" அவளை நேரடியாகப் பார்த்தபடி "எனக்கு பெண் பார்க்கத்துவங்கி பார்த்த முதல் பெண்ணே எனக்கு ரொம்ப பிடித்ததும் பெண்ணுக்கும் என்னை பிடித்ததும் தான்" அத்தனை பற்களும் தெரிய சிரித்தான் முகிலன் அந்த சிரிப்பு அவன் முகத்திற்கு அழகாகவே இருந்தது "நான் புடிச்சிருக்குன்னு இதுவரை சொல்லவே இல்லையே" கேலியாகச் சிரித்தாள் "அதெல்லாம் சொல்லிடுவே" அங்கு கிடந்த சிறு கல்லை எடுத்து தூக்கி போட்டபடி நின்றவனை பார்க்க கோபம் வந்தது "அதெப்படி இந்த ஆண்களுக்கு முதல் முதலாக பார்க்கும் பெண்ணைக்கூட ஒருமையில் பேச முடிகிறது" என மனதிற்குள் கருவிக்கொண்டால் இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல் "அது என் கேள்விகளுக்கு பதில் வருவதிலிருந்து தான் தெரியும்" அவளின்  அருகில் வந்து நின்றவன் "சரி சரி கேளு" என்றதும் ஒரு முறை தங்களைச் சுற்றி பார்த்துவிட்டு "எனக்கும் பிடித்து நமக்கு திருமணம் நடந்தால் நான் உங்கள் வீட்டுக்கு வர மாட்டேன்"என்றபடி அவனை கவனித்தால் அவன் பதறியபடி "பின்னே நான் உன் வீட்டுக்கு மாப்பிள்ளையா வரணுமா சே.. சே.. அது முடியாது என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் கேவலமா பேசுவாங்க" என்றபடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் "அப்போ நான் உங்க வீட்டுக்கு வர்றது  மட்டும் நல்ல விஷயமா என்னோட பிரெண்ட்ஸ் என்ன கேலி செய்ய மாட்டாங்களா" நக்கலாக சிரித்த ஹேமாவை கோபமாக பார்த்தான் "அதுதானே காலங்காலமாக நடக்கிற முறை அதுல என்ன கேவலம் இருக்கு" அவனைப் பார்த்து லேசாக சிரித்தபடி "முறைன்னு சொன்ன பல வழக்கங்கள் கேள்வி கேட்கப்பட்டு மாறி இருக்கு அது மாதிரி இதுவும் மாரணும்னு நான் நினைக்கிறேன்" கொஞ்சம் சிடுசிடுத படி "சரி அடுத்து என்ன சொல்ல வர்ற எல்லாத்தையும் மொத்தமா சொல்லிரு" அவளை நேராக பார்த்தான் அவன் கொஞ்சம் பதட்டத்தில் இருப்பதை உணர்ந்து "சரி சொல்றேன் நான் கல்யாணம் ஆனதும் உங்க வீட்டுக்கு வர மாட்டேன் நீங்களும் எங்க வீட்டுக்கு வர வேண்டாம் தனியா ஒரு வீடு எடுத்து தங்கலாம் உங்க சம்பளத்தை உங்க வீட்டுக்கு செலவு செய்ரத நான் கேட்க மாட்டேன் அதே மாதிரி என் சம்பளத்துல எங்க வீட்டுக்கு நான் செலவு செய்வேன் அதை நீங்க கேள்வி கேட்கக் கூடாது நமக்கு குழந்தைகள்னு வரும்போது ரெண்டு பேரும் சேர்ந்து பாத்துப்போம் இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா கல்யாண தேதிய முடிவு செய்வதில் எனக்கு ஆட்சியபனை இல்லை" நிறுத்தாமல் பேசி முடித்ததும் அவனைப் பார்த்தாள் அவன்
நெற்றி வேர்த்து இருந்தது இப்படி அவள் சொல்வாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை அவள் பேசுவதெல்லாம் புதிதாக தெரிந்தது இவள் நமக்கு ஒத்து வருவாளா என்கிற சந்தேகமும் அவனுள் எழுந்தது இருந்தாலும் அவளுக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என நினைத்து "நானும் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்" என்றவன் அவள் உடன் வருகிறாளா என்று கூட பார்க்காமல் கீழே இறங்கி வந்தான்
    
                                         4
 
முத்தமிழ் ஹேமாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் "என்னடி பண்ணி வச்சிருக்கே இதெல்லாம் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா அதோட இதெல்லாம் சரியாவருமாடி" குழப்பமாக பார்த்தாள் "ஏன்முடியாது' ஹேமா பேசி முடிக்கும் முன் தனிக்குடித்தனம். சம்பளம் தர மாட்டேன். என்னோட குடும்பத்துக்கு  செலவு செய்வேன்னு பேசுறத யாரு ஏத்துப்பா இது எங்கே நடக்கும்" அப்பாவியாய் கேட்ட முத்தமிழை அருகே இழுத்து உட்கார வைத்துக் கொண்டு "இங்கே பாருடி எங்க அப்பாவும் அம்மாவும் என்னை பெத்து .வளர்த்து .படிக்க வைச்சு. வேலை வாங்கி கொடுத்தா ...நான் சம்பளம் வாங்கினதும்.. இப்ப வந்த புருஷன் கிட்ட குடுத்துட்டு கும்பிடு போடணுமா என்னால முடியாது.. என்னோட படிப்பு வேலைக்குன்னு எங்க அப்பா வாங்கின கடனை அவர் வாங்குற பென்ஷன்லருந்து  கட்டிக்கிட்டு வாராரு என் தம்பி இப்ப தான் காலேஜுக்கு போறான் அவன் படிப்ப முடிச்சு வேலை கிடைக்கிற வரை நான் தானே இந்த குடும்பத்தை பார்த்துக்கணும் அதை நான் விட முடியாது பெத்தவங்களை பார்த்துக்கிறது க்கு ஆம்பளப்பிள்ளை எப்படியோ அதே மாதிரி தான் பொம்பளபிள்ளைகளுக்கும் பொறுப்பு இருக்கு நான் அதைத்தானே செய்றேன்" நிதானமாக சொன்னாள்" நீ சொல்றது என்னமோ சரிதான் ஆனா இது சரின்னு வேற யாரும் ஒத்துக்கவா போறாங்க"என்றவளிடம்"ஒத்துக்கிற வரைக்கும் பேசுவோம்" சத்தமாக சிரித்தாள் ஹேமா "என்னடி இப்படி பேசுற தனிக்குடித்தனம்னு வேற சொல்ற" ஹேமாவின் பேச்சை ஜீரணிக்க முடியாமல் பேசினாள் "அதுல நான் உறுதியா இருக்கேன் நான் உங்க வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னதும் அப்போ நான் உங்க வீட்டுக்கு வரணுமா அது அசிங்கம்னு சொல்றான்  எத்தனை திமிரு உன் பாட்டி என் பாட்டின்னு காலங்காலமா பொம்பள போயி ஆம்பள வீட்ல வாழ்றோமே அது ஏன் பொம்பளைங்களுக்குஅது அசிங்கமா தெரியாதா.. ஆம்பளைங்கற திமிரு அதுதான் நான் தனி வீடுன்னு சொன்னேன் அதோட என்னோட சம்பளத்துல என்னோட பெத்தவங்களுக்கு செலவு செய்ரதுக்கு அவங்க வீடுன்னா50 பேருக்கிட்ட அனுமதி கேட்க வேண்டி வரும் தனி குடும்பம்னா புருஷன் கிட்ட கேட்டா மட்டும் போதும் அதனாலதான் தனி குடித்தனம்னு நிபந்தனை போட்டேன் நான் பின்னால செய்யப் போறதையும் சொன்னேன் அதுல என்ன தப்பு" அவளைஇடித்தாள் "ஏண்டி அப்ப கல்யாணம் ஆனதும்   தனிக்குடுத்தனம்னு புருஷனை இழுத்துகிட்டு போறதை எல்லாம் சரீன்ற மாதிரில்ல சொல்ற" அவள் தோளைத்தட்டி "ஹேமா அவங்க எதுக்காக தனிக்குடித்தனம் போனாங்கன்னு எனக்கு தெரியாது ஒரு செடியை புடுங்கி இன்னொரு இடத்தில் கொண்டு போய் நடும்போதுகூட அந்த செடியிருந்த இடத்து மண்ணையும் கொஞ்சம் வேரோடு சேர்த்து எடுத்துக்கிட்டு போய் நடுவாங்க ஆனா பொம்பளைக்கு அது கூட இல்லையே பிறந்து வளர்ந்த வீட்டை ஒரு கயிற கட்டுன உடனேயே விட்டுட்டு போகணும்னா அதுல என்ன நியாயம் இருக்கு ஆனா ஆம்பளை மட்டும் காலுக்கு கீழே வேரு ஓடி இருக்கிற மாதிரி பொண்டாட்டிக்கு வீட்டுக்கு வர மாட்டாரு அப்படி யாராவது போனா அவரை கேவலமா பேசுவாங்கன்னா இதை சரி செய்ய வேணாமா" வந்து விழும் வார்த்தைகளில் ஹேமாவின் கோபத்தை உணர்ந்த முத்தமிழ் "நீ பேசறது எல்லாம் சரிதான்னு தோணுது ஆனா இது சரின்னு ஏத்துக்கிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்க யார் வருவா" இறங்கி பேசினாள் "நிச்சயம் வருவான் நான் யோசிக்கறதையே தானும் யோசிக்கிற மாதிரி ஒருத்தன் வருவான் தைரியமா இரு... வந்ததும் முதல்ல உனக்குத்தான் சொல்லுவேன்" ஆறுதலாகச் சொன்னாள் "சரி புறப்படலாம்" என எழுந்து நடந்த ஹேமாவுடன் சேர்ந்து நடந்தாள் முத்தமிழ் இப்படி  பலமுறை நடந்து சென்றிருந்தாலும் இன்று என்னவோ பெருமிதமாக இருந்தது ஹேமாவை அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி உடன் நடந்தால் முத்தமிழ்...



Wednesday, November 2, 2022

உறவுக்காரி. (சிறுகதை).

உறவுக்காரி                                 

சிறுகதை 

_மங்கலக்குடி நா கலையரசன்_

சேகர் வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தான் "வசந்தி எவ்வளவு நேரம் புறப்படுவே..நேரம் ஆக ஆக கூட்டம் சேந்துட்டா இன்னைக்கு பொழுது அங்கேயே போயிரும்.. சட்டுனு கிளம்புறியா... இல்லையா" கதறி கொண்டு இருந்தவன் முன்னாள் சேலை முந்தானையை சரி செய்தபடி வந்து நின்ற வசந்தியை மேலும் கீழுமாக பார்த்தான் சேகர் "ஏலா..நாம லவ் பண்ணும் போது கூட நீ இவ்வளவு மேக்கப் பண்ணலையடி இப்ப என்னடான்னா அசத்திரியே ...நாம முதல்லருந்து லவ் பண்ண ஆரம்பிக்கலாம் போலயே" ..கேலி செய்த கணவனை சாடையாக பார்த்தபடி இதுக்கு தான் இப்படி மேக்கப் பண்றது அப்போல்லாம் கல்யாண ஆசையில நா..அழகா தெரிஞ்சு இருப்பேன்  இப்ப நம்ம பொண்டாட்டி தானே ...இரண்டு புள்ளைய பெத்தவ தானேன்னு கவனிக்காம விட்றக் கூடாதுல்ல அதுக்கு தான் புருஷன் கவனம் நம்மல விட்டு மாறக்கூடாதுன்றதுக்காகத்தான் 
 நடுத்தர வயசு பொம்பளைங்க கவனம் செலுத்தி மேக்கப் பண்றது ஆம்பளைகளுக்கு எப்போதுமே பொம்பளைகளை பார்த்தா  சதைப்பிண்டமாத்தான்தானே தெரியுது மனுஷியா என்னைக்கு பார்த்து இருக்கிய.." சொல்லியபடி முந்தானையை இடுப்பில் சொருக முயன்ற படி நின்றாள்" ஏன் சிரமப்படுற இரு நான்சொறுகி விடுகிறேன்" என்றபடி நெருங்கி வந்த கணவனை விலக்கிவிட்டு "போதும் சாமி உங்க உதவி ..நீங்க இங்க ஆரம்பிச்சா எங்கேபோய் முடியும்னு எனக்கு தெரியும்அப்பவே நேரம் ஆச்சுன்னு கத்துனவர் தானே நீங்க இப்போ உதவிக்கு வாறியலோ கிளம்புங்க" அவனை தள்ளிவிட "வீட்டுல ஒரு வேலை பார்க்கிறது இல்லைன்னு புகார் பண்றது உதவி செய்றேன்னுவந்தா அதை உதாசீனம் பண்றது நல்லா இருக்குடி உங்க ஊரு நியாயம்" அவளின் கன்னத்தை தட்டினான் "ஐயா ஞாயஸ்தரே.. 
பொறப்டலாமா நேரமாகுது" ஏற்கனவே எடுத்து வைத்திருந்த
பர்ஸ்.கட்டைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்ட முயன்றாள் வசந்தி பின் பக்கமாக வந்து அவளை கட்டிக் கொண்டான் சேகர் "வாசல்ல நின்னுகிட்டு என்ன இது வம்பு" திமிரினாள் வசந்தி "வாசல் என்ன வாசல் என் பொண்டாட்டிய பஜார்ல வச்சு கூட கட்டிப்பிடிப்பேன் எவன் கேட்பான்" அவளை விடுவிக்காமல் கட்டிக்கொண்டு காது அருகில் பேசி காது மடலை சூடாக்கினான் "விடுங்க கடைக்கு போறதா இல்லையா முடி எல்லாம் களையிது தள்ளிப்போங்க" கைகளை பிரிக்க முயற்சித்தாள் "கடைக்குத்தானே போகலாம்லா" முனங்கினான்  கடுப்பானாள் வசந்தி "என்ன பண்றீங்க"சிடு சிடுத்தாள்" ஒன்னும் இல்ல இன்னைக்கு ரெண்டு பேரும் கடைக்கு போரதுக்கு லீவு தானே போட்டுருக்கோம்" எரிச்சலாக "ஆமா"அவனை சிரமப்பட்டு நிமிர்ந்து பார்த்தாள்" கடை தான் ராத்திரி எட்டு ஒன்பது மணி வரைக்கும் இருக்கும்ல மெதுவா போகலாமா" ரகசியம் பேசினான் அவன் நோக்கம் புரிந்து போனதால் தன் பலத்தை எல்லாம் சேர்த்து அவன் கைகளை பிரித்து விட்டு தள்ளினாள் அவன் தடுமாறி நின்றான் "நானே ஒவ்வொரு மாதமும் அந்த தேதி வர்ற வரைக்கும் திக்கு திக்குன்னு இருக்கேன் இதுல பகல்ல வேற கொன்னு போட்டுருவேன் வண்டிய எடுங்க "தலை முடியை ஒதுக்கிவிட்டு சரி செய்து கொண்டால் "எதுக்கு நீ 
இப்புடிபயப்படுற எங்க ஆத்தா எத்தனை புள்ளைய பெத்தா நீ என்னமோ ரெண்டுபெத்து கொடுத்துட்டு பத்து பெத்தா மாதிரி பேசுற" கடுகடுத்தான் "ஆமா பெத்த ரெண்டுக்கு கூட வேண்டியதைச் செய்ய முடியல இதுல பத்து 
பெத்தாக போங்க" நின்றால் மறுபடியும் ஏதாவது செய்வான் என பயந்தவள் வீட்டை பூட்டி விட்டு படி  இறங்கி தெருவிற்கு வந்தாள் கடுப்பாக பைக்கை திண்ணையில் இருந்து இறக்கியவன்" இடுப்பு வலிக்கு பயந்தவளுக்கு
எகிரிப்பேசுறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை" என முனங்கியவாறு பைக்கை இறக்கி பைக்கில் ஏறிஉற்காந்தான் அவன் முனங்கியது வசந்திக்கும் கேட்டது "ஆமா சாமி உங்க ஆத்தா மாதிரி நான் தைரியசாலி இல்ல இனி பல்ல இலிச்சுக்கிட்டு பக்கத்துல வந்தால்ல இருக்கு" கடுகடுத்தவாறு வண்டியில் ஏறி அமர்ந்தாள்  சேகர் பதறிப் போனான் "இது என்னடா வம்பு தொடர் பட்டினி கிட்னியை பாதிக்குமே"என யோசித்து "இந்த பாருடா.. கோபத்தை நான் உன்னையா சொன்னேன் நாம வசதி இல்லாம இடுப்பொடுஞ்சு கிடக்குமே அந்த அர்த்தத்தில தான் சொன்னேன்.. பெத்திருக்கிற ரெண்டுக்கும் வேண்டியதை செஞ்சா போதும்" பைக் தெருவைக் கடந்து சாலைக்கு வந்தது "கடை திறந்து இருப்பாங்களா என்னன்னு தெரியலையே" முகத்தை திருப்பி வசந்தியை பார்த்தான் "ஏன் அதெல்லாம் திறந்துருப்பாங்க  புறப்பட்டு வந்துட்டு அப்புறம் என்ன யோசனை" முதுகில் தட்டினாள் "அது இல்ல லா ..ஒரு டீ க்கீ.. குடிச்சிட்டு போலாமான்னு தான்"இழுத்தான் செல்வம்" எப்ப பாரு டி.. டி... ன்னு அலையிறது சுகர் வந்த பின்னாடியும் அந்த டீ பைத்தியம் மட்டும் உங்களுக்கு குறையவே மாட்டேங்குது முதல்ல கடைக்கு போரோம் அப்புறம் வந்து டீ குடிப்போம்" விரட்டினாள் "நகையை திருப்பத்தானே போறோம் ஏன் பறக்குற" எரிச்சலாக சொன்னதும் "உங்களுக்கு என்ன தெரியும் கடத்தெருவுல பார்த்து உங்க தங்கச்சி அழுதது இன்னும் என் கண்ணையும் காதையும் விட்டு போகல அவளோட புருஷனும் மாமியாரும் அந்த பாடு படுத்துறாங்க அவளை" குரல் கம்ம அவள் பேசியது சேகரை சங்கடப்படுத்தியது "நாம தான் நகையை திருப்பி தர்றமுண்ணு  சொல்லியிருக்கோமே அப்புறம் என்ன" சமாதானப்படுத்த முயன்றான்"திருப்பித்தர்றது வேற ஆனா அவ நகையை நாம வாங்கி அடமானம் வச்சது நியாயமா சொல்லுங்க" சேகருக்கு அது சரியில்லை என்றே பட்டது என்றாலும் "நாம என்ன நமக்காகவா அடகு வச்சோம் பிரசவத்துக்கு வந்தவளுக்கு பிரசவம் பார்த்தோம் கொரோனா நேரம் வேலை வெட்டி இல்ல அதனால செயினை வாங்கி அடகு வச்சு பிரசவ செலவு பார்ப்தோம் ஆனாலும் அதை நாம திருப்பி தந்துருவோம்னு தானே சொன்னோம்" அவளை திரும்பி பார்த்தான் "அதோட அந்த நகை என்ன நாம போட்ட நகை தானே" சொன்னவுடன் அவள் முகத்தை பார்த்தான் "என்ன பேச்சு இது? அவ கல்யாணத்துக்கு நாம போட்டது இப்ப அது அவங்க நகை நாம அடகு வைத்திருக்கக் கூடாது சிரமத்துல வெச்சோம் அதை உடனே திருப்பி கொடுக்கிறது தான முறை கொடுக்கலைன்னா கேட்கத்தானே செய்வாங்க அது நம்ம பொண்ணுக்கு மரியாதை இல்லை அதை புரிந்து பேசுங்க" அவள் சொன்னது நியாயமாகப்பட்டது அவனுக்கு" சரி சரி அதுதான் திருப்ப போறோம்ல்ல கொண்டு போய் கொடுத்துட்டு வந்துரு சரியா சரி.. இப்ப டீ "....என இழுத்தவன் அவள் முறைத்ததும் "சரி சரி வரும்போது குடிப்போம் சரிதானே" அவன் சிரிக்க அவனோடு அவளும் சிரிக்க திடீரென பிரேக் போட்டு நின்றான் என்ன என்பது போல் அவள் பார்க்க அந்த இடம் பரபரப்பாக இருந்தது ரோட்டில் இருபுறமும் நின்ற மக்கள் ஓடிவந்து ரோட்டில் நடுவில் கூட ...பதட்டமானது அந்த இடம் என்ன என விசாரித்தார்கள் "யாரோ ஒரு பெரிய ஒரு மயங்கி விழுந்துட்டார்" என்று ஒருவர் சொல்ல வேகமாக கூட்டத்தை விளக்கிக் கொண்டு நடுவில் சென்று பார்த்தார்கள் அங்கே ஒரு ட்ரை சைக்கிளில் ஒரு பெரியவர் மயங்கி சரிந்து கிடந்தார் உடல் எல்லாம் வேர்த்து நெஞ்சை பிடித்துக் கொண்டு கிடந்தார் கூடிய சனம் சோடா வாங்கி வந்து தெளித்தது 108க்கு போன் செய்தது பிறகு என்ன செய்வது என தெரியாமல் நிற்க சேகரும் வசந்தியும் கூட்டத்திற்குள் நுழைந்து  பெரியவரை பார்க்க பார்க்க பதட்டம் வந்தது அவர் வாய் உலர  துவங்கினார் வசந்தி சாமி வந்தவளை போல "ஏங்க எல்லோரும் இப்படி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி 108 எப்ப வரது அவருக்கு நெஞ்சு வலி போல இருக்கு ட்ரை சைக்கிள்ல பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம்" எனகதறினாள் சிலர் விலகிப் போனார்கள் சிலர் சேகருக்கு உதவினார்கள் பெரியவரை ட்ரை சைக்கிள் ஏற்றி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள் உடனடியாக சிகிச்சையை தொடங்கியது மருத்துவர் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து "யார் அந்த பெரியவரோட உறவினர்" என்று கேட்டதும் கூடியிருந்த அனைவரும் வசந்தியை காட்டினார்கள் அவளும் சேகர்முகத்தை பார்த்து விட்டு டாக்டரிடம் வந்தாள் "நான் உறவு இல்ல சார் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தது நான்தான் என்ன சார் சொல்லுங்க" அவர் முகத்தை பதட்டத்துடன் பார்த்தாள்"ஒண்ணும்இல்லை அம்மா அவருக்கு பிளட்டெஸ்ட் .இஜிசி. எக்கோ பாக்கணும் அதுக்கு பணம் கட்டணும் அதுக்கு பின்னால தான் சிகிச்சையே தொடர முடியும்" மருத்துவர் சொன்னதை கேட்டதும் சேகரைப் பார்த்தாள் பிறகு "பணம் கட்டிடறேன் சார் நீங்க பாருங்க" செல்வத்துடன் சென்று பணத்தைக் கட்டி ரசீதை கொண்டு வந்து கொடுத்ததும் சிகிச்சை துவங்கியது பெரியவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் பெல்ட் என அவருடைய பொருள்களை கொண்டு வந்து வசந்தியிடம் தந்தார்கள் இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வாங்கிக் கொண்டார்கள் சிறிது நேரம் கழித்ததும் அவர் யார் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள அவர் சட்டை பாக்கெட்டை சோதனை செய்ய அதில் 150 ரூபாய் இருந்தது சில பேப்பர்கள் இருந்தது அவரை தெரிந்து கொள்ளும் வகையில் எதுவும் இல்லை பிறகு நர்ஸ் கொடுத்த உள்ளங்கைக்குள் அடங்கும் செல்போனை எடுத்து கால் ரிஜிஸ்டருக்கு போய் கடைசியாக அவருக்கு வந்த போன் எண்ணுக்கு அழைத்தான் சேகர் "அத்தா.. சொல்லுங்க".. என்றது எதிர்முனை குரல் உடனே உடனடியாக  குறுக்கிட்ட சேகர்.. "அம்மா நான் திருவாடானையில இருந்து குணசேகரன் பேசுறேன் உங்க அப்பாவோட போன் தான் இது லேசா தல சுத்துதுன்னு சொன்னாரு அவர ஹாஸ்பிடல் சேர்த்து வச்சிருக்கோம் நீங்க யாராவது வந்தா நல்லா இருக்கும்" என்றதும்   பதறிப் போனது எதிர் குரல் "அல்லாவே இப்பதானே பேசிட்டு போன வச்சேன் அதுக்குள்ளேயே இப்படி ஆகிப்போச்சே.. ஐயா என் பேரு கதீஜா பேகம் எங்க அத்தா தான் அவரு அவர் பேரு இஸ்மாயில் எங்க ஊரு கவலை வென்றான் நான் இப்போ சிறு கம்பையூர்ல இருக்கேன் உடனடியா எங்கஅம்மாவுக்கு சொல்றேன் நானும் கிளம்புறேன் அதுவரைக்கும் கொஞ்சம் அத்தாவ பார்த்துக்கிருங்க "என்று இறைஞ்சுவது போல் பேசினாள்"நீங்க ஒன்னும் பயப்படாதீங்கம்மா நிதானமா புறப்பட்டு வாங்க நீங்க வர்ற வரைக்கும் நா. ஹாஸ்பிடல்ல இருக்கேன்" போனை கட் பண்ணியதும் வசந்தியை பார்த்தான் "கவலைவென்றான்னு சொன்னா மருதாந்த பக்கத்துல இருக்குற ஊரு சிறு கம்பையூர்னா  வெள்ளையபுரம் பக்கத்துல இருக்கு அவங்க வர கொஞ்சம் நேரம்தான்  ஆகும் 
வசந்தி. என்ன செய்வோம் "என்று கேட்டான் உடனே வசந்தி "நாம எப்படிங்க மத்தவங்க மாதிரி இப்படியே விட்டுட்டு போக முடியும் யாராவது ஒருத்தர் அவங்க குடும்பத்தில இருந்து வரட்டும் அப்புறம் போகலாம் .. லீவு போட்டது போட்டுட்டோம் கொஞ்சம் இருந்துட்டு போகுமே "என்றான் சரி வா வெளில போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்" என்று இருவரும் மருத்துவமனைக்கு வெளியில் இருந்த டீக்கடைக்கு வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் மருத்துவமனை பெஞ்சில் வந்து அமர்ந்தார்கள் சேகர் வசந்தியின் முகத்தைப் பார்த்தான் புருவங்களை சுருக்கி அவள் எதையோ யோசிப்பதாக உணர்ந்தான் "என்னலா.. என்ன யோசிக்கிற" என்று அவள் தோளை தட்டி கேட்டான் "ஒன்னும் இல்லங்க ஆறு மாசமா போராடி இப்போ தான் உங்க தங்கச்சி நகையை திருப்பலாம்னு  வந்தோம் அதுக்குள்ள இப்படி  செலவாயிருச்சே இந்த 3500 ரூபாய நாம எப்ப தயார் பண்றது" என்றாள் கவலையாக பேசிய வசந்தியை பார்த்து "ஏலா.. அவங்க குடும்பத்திலிருந்து வர்றவங்க இந்த காசை  தந்திர மாட்டாங்களா" அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவளையே பார்த்தான் "தந்திரக் கூட செய்யலாம் தான் ஆனா நாம இப்பவே வச்சுட்டு வேலையைப்பாருன்னு  சொல்ல முடியாதே பாவம் அவங்க வசதியானவங்களோ இல்ல நம்மள மாதிரி கஷ்டப்படுறவங்களோ யாருக்கு தெரியும் வரட்டும் பார்ப்போம்" என்றாள் சேகருக்கும் இப்போது அந்த கவலை ஒட்டிக்கொண்டது தங்கையின் நகையை திருப்புவதற்காக தனது பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்டதை கூட தவிர்த்து விட்டு இந்த காசை சேர்த்து வைத்துத்தான் நகையை திருப்ப வந்தார்கள் இதற்கே ரெண்டு வருடத்திற்கு மேல் ஓடி விட்டது இப்போது இந்த 3500-ரூபாய் செலவை எப்படி சமாளிப்பது யோசித்தபடியே வசந்தியை திரும்பி பார்த்தான் அவளும் எங்கேயோ வெறித்து பார்த்தபடி இருந்தாள் "ஏலா.. என்ன செய்யலாம்" என அவளிடமே கேட்டான் "என்ன செய்ரது நடக்கிறது நடக்கட்டும் இதயும் சமாளிப்போம் நமக்கு செலவு இருக்குங்கிறதுக்காக கையில காச வச்சிக்கிட்டு ஒரு உசுரு துடிக்கிறத எப்படிங்க பார்த்துட்டு இருக்க முடியும் ம்...ரெண்டு வருஷம் பொருத்தவங்க ரெண்டு மூணு மாசம் பொறுக்க மாட்டாங்களாபாப்போம்" என்று பெருமூச்சு விட்டாள்  நகையை எப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறோம் அதுவரை எப்படி சமாளிக்க போகிறோம் என  எதையெதையோ பேசிக் கொண்டிருந்தார்கள் நேரம் போய்க் கொண்டே இருந்தது வேகமாக ஒரு ஆட்டோ வந்து மருத்துவமனை வாசலில் நின்றது இரண்டு பெண்கள்  பதறியபடி உள்ளே ஓடி வந்து அங்கிருந்த மருத்துவமனை ஊழியரிடம் விசாரித்தார்கள் பார்க்க வசதி இல்லாதவர்களைப்  போல் தான் இருந்தார்கள் அந்த ஊழியர் சேகரையும் வசந்தியையும் கைகாட்டினார்கள் அவர்கள் நேரடியாக இவர்களிடம் வந்து சேர்ந்தார்கள் "அண்ணே நீங்க தான் போன் பண்ணீங்களா  நான் அவரோட பொண்ணு இது எங்க அம்மா அத்தா  எங்கே அண்ணா இருக்காரு" என்று வழியும் கண்ணீரோடு கேட்டாள் அந்த பெண் "ஒன்னும் இல்லம்மா அப்பா நல்லா இருக்காரு ஐ சியூ வில தான் வச்சிருக்கிறாங்க பதட்டப்படாமல் வாங்க பார்ப்போம்" என்று  இருவரையும் அழைத்துக்கொண்டு ஐ சி யு இருக்கும் இடத்திற்கு சென்றார்கள் கண்ணாடி வழியேதான் உள்ளே படுத்து இருந்த அவரை பார்க்க முடிந்தது அவர் அமைதியாக தூங்கிக் கொண்டிருப்பதாக நர்ஸ் ஒருத்தி வேகமாக வெளியே வந்து சொன்னாள் "ஒன்னும் இல்ல சார் இப்போ நல்லா இருக்காரு கவலைப்படரதுக்கு ஒன்னு மில்லை நீங்க டாக்டர் வந்ததும் அவரோட பேசுங்க" என்றாள் "அவரப் போய் பார்க்கலாமா" என்று அவரின் மனைவி பதர்நிஷா கேட்க உடனே அந்த நர்ஸ் "அம்மா டாக்டர் வந்து பேசி அவர் பாக்கச் சொன்னா அப்புறம் நீங்க பார்க்கலாம்" என்றதும் அருகே கிடந்த பெஞ்சில் அமர்ந்து அழுகத் தொடங்கினால் அந்த அம்மா அவளுக்கு ஆறுதல் சொல்லியபடி அவருடைய மகள் அவரைத் தேற்றிக் கொண்டிருந்தாள் சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து ஐசியூவிற்குள் நுழைய முயல்வதற்கு முன்பு ,"நீங்க" என்று அவர்களைப் பார்த்து கைகாட்டி சேகரைப் பார்த்தார் "அவங்க தான் அவரோட மனைவி  மகள்" என்று விவரம் சொன்னான் சேகர் "அப்படியா சரி அம்மா அவருக்கு வந்தது மயில்டா ஒரு அட்டாக் தான் நல்ல சமயத்தில் கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்திட்டாங்க இப்ப அவர் நல்லா இருக்காரு அவருக்கு ஆஞ்சியோ பண்ணி பார்த்தா நல்லது என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு அவர் ஐசியூவிற்குள் நுழைந்தார் அந்த அம்மா பதறிப் போய்விட்டார் "என்னம்மா டாக்டர் இப்படி சொல்றாரு உன் மாப்பிள்ளைய உடனே வர சொல்லு ஐயோ என்ன ஆகும்னு தெரியலையே நான் என்ன செய்வேன் " என்று புலம்பியபடி இருந்த அந்த அம்மாவை வசந்தி தோல்களை தடவியவாறு "அம்மா அவருக்கு ஒன்னும் இல்ல அடப்பு எதுவும் இருக்கான்னு ஆஞ்சியோ பண்ணி பார்ப்போம்னு தான் கேட்குறாங்க நாம விரும்பினால் பார்க்கலாம் இல்லைன்னா  மெடிசன்லையே சரி பண்ணலாம்னா அதைச் செய்ய சொல்லலாம் நாம சொல்றது தானேம்மா எதுக்கும் உங்க வீட்டு ஆம்பளைங்கட்ட போன் பண்ணி வர சொல்லுங்க" என்று வசந்தி அவர்களுக்கு ஆறுதல் சொன்னாள் அவள் பேச பேச அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அந்த அம்மா "சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கேம்மா உன்னை அந்த அல்லாஹ் தான் அனுப்பி வச்சிருக்கான் நீ நல்லா இருக்கணும்" என்று வசந்தியின் கைகளை பிடித்துக் கொண்டு அழுதாள் "என்னம்மா இப்படி சொல்றீங்க அவர் எனக்கும் அப்பா மாதிரி தானே அதெல்லாம் 
ஒன்னும் ஆகாதுமா நீங்க தைரியமா இருங்க" என்று பேசிக் கொண்டிருந்தபோது வேகமாக ஒருவர் உள்ளே வந்து அருகில் நின்ற அந்த இளம் பெண்ணிடம் "என்ன ஆச்சு கதீஜா "என்றபடி சேகர் வசந்தியை பார்த்தான். கதிஜா "இவங்க தான் அத்தாவ ஹாஸ்பிடல்ல சேர்த்தவங்க இவரு என்னோட வீட்டுக்காரர்  சிக்கந்தர்" என அறிமுகம் செய்து வைத்தாள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் மருத்துவர் அழைப்பதாக நர்ஸ் வந்து சொன்னதும் எல்லோரும் மருத்துவர் அருகே சென்றார்கள்  முன்னாள் கிடந்த இருக்கைகளில் அமர வைத்த மருத்துவர் "உக்காருங்க அவருக்கு இப்போதைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை மைல்டா ஒரு அட்டாக் வந்திருக்கு சரியான சமயத்தில் கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்ததுனால அவர காப்பாத்தியாச்சு ஆனா எதுவும் அடைப்பு இருக்குமோ என்கிற சந்தேகம் இருக்கு அதனால ஒரு ஆஞ்சியோ பண்ணி பாத்துக்கிட்டா பர்தரா ட்ரீட்மெண்ட் எடுப்பதற்கு ஈசியா இருக்கும் அப்படி இல்லைன்னு சொன்னா ஹார்ட்ட பலப்படுத்துவதற்கும் அடைப்பு இருந்தா சரி பண்றதுக்குமான மாத்திரை மருந்துகளோடு கொஞ்சம் சமாளிக்கலாம்  கடினமான வேலை பாக்காம அவரு கொஞ்சம் ஓய்வுல இருக்கணும் அப்படின்னா ரெண்டுல ஏதாவது ஒன்னு நீங்க சொல்றதுல இருந்து நாம வைத்தியத்தை தொடரலாம்" அவர்கள் அனைவரையும் மாறி மாறி பார்த்தபடி பேசினார் உடனே சிக்கந்தர் சேகரை பார்க்க சேகர் 
"சரி சார் நாங்க கலந்து பேசிட்டு சொல்றோம்" என்று பேசிவிட்டு வெளியில் வந்தார்கள் வெளியே வந்ததும் சிக்கந்தர் சேகரிடம் "என்ன செய்வோம் ப்ரோ.. சொல்லுங்க" என்றார் அதை "நீங்க தானே சார் முடிவு பண்ணனும் நீங்க யோசிச்சு அம்மா கிட்ட கதீஜா கிட்ட எல்லாம் பேசிட்டு ஒரு முடிவுக்கு வாங்க" என்று சொல்ல "இல்ல ப்ரோ.. எங்களுக்கு நீங்க செஞ்சது பெரிய உதவி இந்த குடும்பத்தில் நீங்களும் ..என்ன மாதிரி தான் சொல்லுங்க எப்படி செஞ்சுக்கலாம்" என்று கேட்டான் "நம்மள பொறுத்த வரைக்கும் அவரை காப்பாத்திட்டோம் கொஞ்சம் கடினமான வேலை செய்யாமல் ..லகுவா ..வேலைய பாத்துட்டு இந்த மாத்திரை மருந்துகளை கண்டினியூ பண்ணட்டும் சாப்பாட்டு விஷயத்தையும் கொஞ்சம் சரி பண்ணிக்கட்டும்அதுக்கு பின்னாடி அவருக்குபிரச்சனையா.. இருக்குன்னா  அப்புறம் ஆஞ்சியோ பண்றத பிறகு  பாத்துக்கலாம்னு  எனக்கு படுது" என்று சொன்னான் சேகர் "சரி ப்ரோ நானும் பேசிகிட்டு என்ன செய்யலாம்னு பார்க்கிறேன்" சிக்கந்தர் சொன்னதும்" சரி சிக்கந்தர் நீங்க பாத்துக்கோங்க நாங்க இன்னொரு வேலையா வந்தோம் வரும்போது தான் இப்படி நடந்துருச்சு அதனால நின்னுட்டோம் புள்ளைங்க மத்தியானம் சாப்பிட வந்துடும் அவங்களுக்கு ஏதாவது ஹோட்டல் தான் சாப்பாடு வாங்கிட்டு போகணும் மறுபடி நான்வந்து பாக்குறேன் இது தான் என்னோட போன் நம்பர்" என தனது போன் நம்பரை கொடுத்து விட்டு புறப்பட தயாரானார்கள் அப்போது "சிக்கந்தர் ப்ரோ.. நீங்க எவ்வளவு பணம் கட்டி இருக்கீங்க என்னன்னு எனக்கு தெரியல நான் விசாரிச்சுக்குறேன் உங்க பணத்தை நாங்க கொடுத்துறோம் உடனே தருவது கொஞ்சம் சிரமம் ஆனா நான் எப்படியாவது தயார் பண்ணி கொடுத்துடறேன்" என்று பேச உடனே வசந்தி "தம்பி நீங்க முதல்ல மத்த செலவுகளை பாருங்க வீட்டுக்கு போனதுக்கு பின்னாடி மத்தத யோசிக்கலாம்" என்று பேச்சை முடித்து அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்தார்கள் அப்போது எதிரே வந்த நர்ஸ் "என்னக்கா அவங்க சொந்தக்காரங்க வந்துட்டாங்களா" என்று கேட்டாள் "ஆமா சிஸ்டர் இப்பதான் வந்தாங்க அதான் பேசிட்டு கிளம்புறோம்"என்றதும் "நீங்க கட்டின பணத்தை எல்லாம் வாங்கிட்டீங்களா அக்கா"  என்றதும் "அதுக்கு என்ன இப்ப அவசரம் முதல்ல ஆஸ்பத்திரியில மத்த செலவுகளை பாருங்க என்னோட பணத்த  பத்தி பின்னால பாத்துக்களாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்" அவளை ஆச்சரியமாக பார்த்த நர்ஸ்"உங்கள பார்த்தா எனக்கு பெருமையா இருக்குக்கா. அவங்க சொந்தமோ உறவோ  இல்லாத நீங்க இப்படி ஆஸ்பத்திரியில கொண்டு வந்து சேர்த்து செலவு செய்றீங்கன்னா எவ்வளவு பெரிய விஷயம் உங்களுக்கு பெரிய மனசுக்கா நீங்க நல்லா இருப்பீங்க" வசந்தி சிரித்துக் கொண்டே "அப்படி இல்லம்மா ஆடு மாடு குரங்கு மாதிரி மிருகங்கள் கூட  தன்னோட சக இனம் மயங்கி கிடந்தா அந்தப் பக்கம் வர்ற அதே மிருகம்  உசுரு இருக்கான்னு பார்த்து இருக்குன்னு தெரிஞ்சா முட்டி மோதி நக்கி  உருட்டி பெரட்டி அதை பிழைக்க வச்சிருதே நாமல்லாம் மனுஷங்க இல்லையா சக மனுஷன் ரோட்டில் கெடக்கும் போது எப்படி பார்த்துட்டு போக முடியும் நம்மளால முடிஞ்ச உதவிய செஞ்சி அந்த உசுர 
காப்பாத்து றதுதானே மனுஷத்தனம்  அதைத்தானே நாங்க செஞ்ச்சிருக்கொம்  மத்தபடி இதுல பெருசா சொல்லிக்குரதுக்கு எதுவும் இல்லை வர்ரோம் சிஸ்டர்"ஆச்சரியமாக தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நர்சை பார்த்து சிரித்தபடி இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து தங்களது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு போக்குவரத்தில் கரைந்து போனார்கள் ..