நம்ம கிராமங்களில் ஊடக
பாம்பாய் நெளிந்து கிடந்த
செம்மண் வழித் தடங்கள்
தாத்தனின் முதுகுபோல்
கருன்சளைகளாய் பளபளக்கிறது
காலிநிற கூரைகள் மாறி
பலநிற உடையோடு
அணிவகுத்து வீடுகள்
ஆத்தா சொன்ன
பேய்களின் உருவமாய்
பனைமரத்தை கேலி செய்து
உயரமாய் செல் டவர்கள்
வீட்டின் தலைமரைக்க
தகுதியற்ற குடைகலாய்
டி டி எச் கல்
நடுவாக்கில் சம்மணமிட்டு
வீட்டாரின் பேச்சை
நிறுத்திவிட்ட கர்வத்துடன்
டி வி க்கள்
பார்வை படருமிடம்மெல்லாம்
பால்யத்தை துறக்காமல்
சாட்ஸ் சில் தாத்தாக்கள்
நம்ம ஊர் பாட்டிகளின்
காதுகளில் தண்டட்டியாய்
செல்போன்கள்
வெள்ளைக்காரன் துப்பி சென்ற
பாசையை விழுங்கச் செல்லும்
டை கட்டிய குழந்தைகள்
பாப்பாக்களின் உடைகளில்
பாந்தமாய் எதிர்படும்
குமரி பொண்ணுக
இந்த நாகரீக மினுமினுப்பு
வெளிச்சத்தின் ஊடே
ஈய குவளையில் டீ குடித்தபடி
ஓரமாய் முனியன்
வெறுமையாய்
டீ கடை பெஞ்சுகள்
No comments:
Post a Comment