Monday, January 24, 2011

நெடுங்கனவு

காணிநில கனவை
பாரதியை  தொடர்ந்து
பாட்டனும் கண்டதாய்
பரம்பரை  வரலாறு
பதிந்து வைத்துள்ளது

முற்காலம்  துவங்கி
தற்காலம்  வரை
கற்கால வாழ்க்கை  நடத்தி
வீடு  பேரின்றியே
வீடு  பேரடைந்தனர்  

வியர்வையாய்  கரையும்
உடலின்  சக்தியை
உயிர்பிட்க  மட்டுமே
உதவிய  உதியத்தால்
உறைவிட  ஆசை 
உருப்பெறவில்லை

தொட்டு க்கடந்த 
தேர்தல்  களங்களில்
வீட்டுக்கனவை  எமக்குள்
விதைத்து  வென்றவர்கள்
வீதிக்கொரு  மாளிகை என
சேமித்து கொண்டார்கள் 

நெடுங்கனவை  நிஜமாக்க
உழைப்பை  அடகு  வைத்து
களித்துப்போட்ட  ஓலைகளால்
கட்டி  வாழ்ந்த  குடிசையை
முட்டி சாய்த்தது  அரசு  இயந்திரம்

கண்மாய்ககுள்ளிருந்து
என்  நிலை யறியாமல்
கண்கள் மறைக்கப்பட்ட
 நீதி தேவதையும்
கரையோரம்  விட்டு வெளியேற
கட்டளையிட்டால்

நதிக்கரை தங்கி
நாகரீகம்  தந்தவர்கள்
கம்மாகரையிளிருந்தால்
புதிய  நாகரீகம்
புறப்பட்டு வரும்
தடையினை  விலக்குங்கள்

நாட்டுரிமை  இழந்த 
பாண்டவராய் 
வீட்டுரிமை  கேட்டு
விண்ணப்பம்  செய்கிறோம்
மறு பாரதபோருக்கு
மனு போடாதீர்        

ஏனெனில்
போரின் முடிவு
வேராய்  இருக்காது
உங்களுக்கு 
வேரே      இருக்காது   
     

2 comments:

  1. தோழர் கலையரசன் அவர்களுக்கு,
    சுவரசியமாய் இருக்கிறது உங்கள் வலைத்தளம்.
    கவிதைகளும் அருமையாக இருக்கிறது.
    வாழ்த்துக்களுடன்,
    ப.கவிதாகுமார்
    http://ithanal.blogspot.com

    ReplyDelete
  2. வணக்கம் தோழர்.
    நல்ல முயற்சி. கவிதைகள் அருமை.எழுதுப்பிழைகள் இருக்கிறது.கவனித்துப் பாருங்கள்.தொடர்ந்து பேசுவோம்.வாழ்த்துகள்.
    மு.இராஜாராம்.
    http://puliyuran-raja.blogspot.com
    http://ilakkiam.blogspot.com

    ReplyDelete