Saturday, June 23, 2012

கடவுளர்கள்.....


அடிவயிறு இறுகப் பிடித்து
 நிமிரத் திணறி                 
உமிழ் உறைந்து,                 
 ஈரம் சுரக்க ஏங்க                   
தொண்டைக்குழி வறண்டு                   
கருவிழி ஒளியை                   
புகைத்திரை மறைக்க                   
புவிவிசை எதிர்க்க                   
உடல்விசை மறுக்க                  
 சிறுசிறு துளியாய்
 உறுகும் உயிரை
 பிறர்உண்ட கழிவுகளால்
 உயிர்ப்பித்து உறுதி செய்த
 குப்பைத்தொட்டியும்
 கொட்டிய மனிதனுமே
 வாழும்  கடவுளர்கள்
 வாழும் வாய்ப்பினை
 இழந்தவர்க்கு
                            மங்களக்குடி  நா.கலையரசன்.

No comments:

Post a Comment