தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இராமநாதபுரம் மாவட்டக்குழு
சி.பி.எம்.மாவட்ட அலுவலகம், குட்செட்ரோடு-இராமநாதபுரம்.
அனுப்புநர்
நா.கலையரசன்
மாவட்டத் தலைவர்
பெருநர்.
உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
இராமநாதபுரம் மாவட்டம்
இராமநாதபுரம்
ஐயா,
கடந்த 31.05.2012 அன்று இராமநாதபுரம் அருகிலுள்ள புத்தேந்தல் எனும் கிராமத்தில் தங்களது உறவினர் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து தியாகி இமானுவேல் சேகரம் படம் வரையப்பட்ட ப்ளக்ஸ் போர்டை தலித் இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த போர்டு அன்று இரவே கிழித்தெரியப்பட்டுள்ளது. மேலும் ஊருக்குள் உள்ள குருசாமி கோவில் சுவற்றில் பள்ளர் சமுதாயத்தை இழிவு செய்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த தலித் இளைஞர்கள் ஊர் தலைவர்களிடம் நியாயம் கேட்க சென்ற போது யாதவ இளைஞர்கள் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டு ஒருவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையிலும் மற்றும் ஒரு பெண் உள்பட 3 பேர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தலித் மக்களை தாக்கியவர்கள் மீது எஸ்சி.எஸ்டி பிரிவில் வழக்கு தொடர வேண்டும் எனவும் தலித் மக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புத்தேந்தல் தலித் மக்களோடு இணைந்து கோரிக்கை வைத்து போராடி வரும் நிலையில் புத்தேந்தல் கிராமத்தில் தலித் மக்களை தனிமைப் படுத்தும் முயற்சியில் யாதவர்கள் முயற்சித்து வருவதாக தெரிகிறது. இதற்கு தலித் ஊராட்சி தலைவரையே கருவியாக பயன்படுத்துகிற தந்திரமும் கையாளப்படுகிறது. அரசு திட்டமான மகாத்மாகாந்தி ஊரக வேலைத்திட்டத்தில் பணி செய்ய சென்ற தலித் மக்களை தனியாக பிரித்து எஸ்சி-க்கள் தனியாக வேலை பாருங்கள் உங்களோடு சேர்ந்து அவங்க வேலைசெய்ய மாட்டேங்கிறாங்க என ஊராட்சித் தலைவரே சாதி பிரிவினை செய்து பணி இடம் ஒதுக்கி வருகிறார். இது ஒருவகை தீண்டாமைதான் தலித் ஊராட்சி தலைவரை வைத்தே இதை செய்கிற தந்திரத்தை கையாள்வது சகிக்க முடியாதது . மேலும் ஊர் கண்மாயில் மீன்பிடிக்கிற போதும் இதே முறையை கையாண்டு இருக்கிறார்கள். இது ஏற்க்க முடியாத சாதி வெறியென கருதுகிறோம் . அத்துடன் புத்தேந்தலுக்கான ரேசன்கடை புத்தேந்தல் கிராமத்தில் பள்ளிகூடம் அருகே நடந்து வந்தபோது கட்டிடம் இடியும் நிலை ஏற்பட்டதால் தற்காலிகமாக அருகிலிருந்த ஒரு தலித்தின் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட பிரச்சனைக்கு பிறகு அந்த கடையை யாதவ குடியிருப்பிற்குள்ளேயே வைத்திட தாசில்தார் ஏற்பாடு செய்வதும் அங்கே கடை இருந்தால் இவர்கள் வந்து வாங்க மாட்டார்கள். எனவே இது தற்காலிக ஏற்பாடுதான் என வட்டாட்சியரே சமதானம் சொல்வதும் ஒரு தீண்டாமையை நியாயப் படுத்துவதற்கே உதவும் என கருதுகிறோம். அவர்கள் வரமாட்டார்கள் என கடையை மாற்றினால் இந்த கடைக்கு தலித்கள் போக மறுத்தால் என்ன செய்வது . போனால் போகட்டும் என்பதா? எனவே இது சரியானதாக படவில்லை. எனவே தாங்கள் தலையிட்டு அரசின் திட்டங்களிலேயே சாதி பாகுபாடு , தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்திடவும், எந்த வடிவத்திலும் சாதி பாகுபாடு தலைதூக்க விடாமல் தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள
நா.கலையரசன்
மாவட்டத்தலைவர்.
No comments:
Post a Comment