பிறை கூட
பௌர்ணமியாய் தெரிந்தது
என் விழி சிறைக்குள்
வந்தாள் அவள்
என் வீட்டு கண்ணாடி
முதல் முறையாய்
மனம் கவரும் அழகு நீ
என்பதாய் தெரிந்தது
எங்கள் சந்திப்பினை
தரிசித்த கருவை காடெல்லாம்
நந்தவன பூச்செடியாய்
நிறம் மாறி தெரிந்தது
வடுக்களை சுமந்து நின்ற
கருக்கொள்ளா வயலில் கூட
வானவில் தெரிந்தது
மதிய வெயில் வேர்கள்
என்மீது மட்டும் மழையாய்
இறங்குவதாய் தெரிந்தது
சாலை இட வைத்திருந்த
சரளையில் நடந்த போதும்
மலர் பாதை போல்
மிருதுவாய் தெரிந்தது
அடையாளம் தெரியாத
அந்நிய முகங்கள் எல்லாம்
உறவுகளாய் தெரிந்தன
அடுக்குமோ நமக்கிதென்ற
அன்னையின் கடும் வார்த்தை
தாலாட்டாய் தெரிந்தது
அன்றாடம் நாங்கள் பார்த்ததை
அவள் தந்தை பார்த்த பிறகுதான்
மனு செய்த சதி தெரிந்தது
எனக்கே தெரிந்தது நான் யாரென
பௌர்ணமியாய் தெரிந்தது
என் விழி சிறைக்குள்
வந்தாள் அவள்
என் வீட்டு கண்ணாடி
முதல் முறையாய்
மனம் கவரும் அழகு நீ
என்பதாய் தெரிந்தது
எங்கள் சந்திப்பினை
தரிசித்த கருவை காடெல்லாம்
நந்தவன பூச்செடியாய்
நிறம் மாறி தெரிந்தது
வடுக்களை சுமந்து நின்ற
கருக்கொள்ளா வயலில் கூட
வானவில் தெரிந்தது
மதிய வெயில் வேர்கள்
என்மீது மட்டும் மழையாய்
இறங்குவதாய் தெரிந்தது
சாலை இட வைத்திருந்த
சரளையில் நடந்த போதும்
மலர் பாதை போல்
மிருதுவாய் தெரிந்தது
அடையாளம் தெரியாத
அந்நிய முகங்கள் எல்லாம்
உறவுகளாய் தெரிந்தன
அடுக்குமோ நமக்கிதென்ற
அன்னையின் கடும் வார்த்தை
தாலாட்டாய் தெரிந்தது
அன்றாடம் நாங்கள் பார்த்ததை
அவள் தந்தை பார்த்த பிறகுதான்
மனு செய்த சதி தெரிந்தது
எனக்கே தெரிந்தது நான் யாரென