Sunday, August 31, 2025

போரற்ற உலகு


போரற்ற உலகு

கந்தளான உடை
 ஏவுகணை சிதறல்களால் 
கன்னங்களில் 
 கசியும் குருதியுடன்
 தட்டேந்தி உணவுக்காய் 
இறஞ்ச்சி நிற்கும் குழந்தைகள் கண்களுக்குள் வந்து
 கதற வைக்கிறார்கள்

மின்னல் ஒளியில் வரைந்து வைத்த ஓவியமாய் 
விண்ணுயிர்ந்து நின்ற
கான்கிரீட் மாளிகைகள் 
குப்பையான கொடூரம்

பாலை வனமெங்கும் 
மரணக் குரல்கள்
பசியால் தாகத்தால் 
பிஞ்சுகளின் கதறல்கள்

 அதிகாரப் பெரு அரிப்பால் பிள்ளைக்கறி தின்றேனும் எல்லைகளை விரிவாக்க 
எத்தனை கொலைகள் 
எத்தனை பேரழிவுகள்

 மனித ரத்தம் குடித்தேனும் 
மன்னாளும் பேராசை 
பிணம் தின்னி கழுகுகளாய் 
மாறும் பேரவலம் 

ஆதிக்க வல்லூர்களின் அடியாள்களாய் மாறி 
முகவரி தந்தோரை 
முதுகில் குத்தும் 
துரோக வடிவான 
யூதாஸாக 
இஸ்ரேலின் நிதன்யாகூ 

ஆரிய பாசிச தேடலில் அனாதையானவர்களுக்கு
 நிலம் தந்து ஆதரித்தவர்களை நிர்மூலமாக்க துடிப்பது தான்
 யூத தந்திரம் எனில்_ 
ஹிட்லர் தேடி அடித்தது சரிஎன்றாகாதா 
இனி ஒரு முறை 
அகதியானால்
 உம்மை திரும்பிப் பார்க்க உலகில் நாதி இருக்காது 

ஈவிறக்கமற்ற உங்கள் 
நரவேட்டைதடுக்க 
ஈரான் தலையிட்டது வடகொரியாவும் சீனாவும் வருவோம் என்றது 
மோதிப் பார்த்து நிலை உணர்ந்து சமரசம் என்றது அமெரிக்கா
இருந்தென்ன இருபுறமும் மரண ஓலம்தானே 

அதிகாரத் திமிராலும் 
அடிமை புத்தியாலும் ஆள்வோர் அளவு மீரலுக்கு அணை போட கூடுவோம்  

இலங்கை அனுபவம்
  எதிரே இருக்கு
உலக மக்கள் 
 உறவு நமக்கு .வா
போரற்ற உலகை 
பொதுமை செய்வோம்...

Saturday, April 12, 2025

கவிதை


சன்னல் இருக்கை 
__________________________

வைக்கோல் போருக்கு
கால்கள் முளைத்ததுபோல 
ஊர்ந்து வரும்பேருந்தை
 தேரென வியந்த 
பாலப்பருவமது 

பேருந்து பயணம் 
பெருங் கனவாய் 
வந்து போகும் 
சன்னலில் முகம் பதித்து
 மனதை வெளியே விட்டு
வெறிப்பதை விட வேறென்ன... 

தலையை வெளியே காட்டாதே
 தந்தையின் எச்சரிக்கை 
கையை வெளிக்காட்டுவது யார் 
ஓட்டுனர் குரல் -ஓடிவரும்
எந்த குரல்களையும்
காது வழி நுழையாமல் 
காற்றள்ளிப் போகும்

 காற்று வந்து மல்லுக்கட்டும் 
முகமறைந்து சினம் காட்டும்
இருந்தென்ன 
காற்றுக்குள் நுழைந்து
கரைந்து விட 
மனசெல்லாம் 
மலர்ந்து விரியும் 

பனை மரம் வேப்பமரம் 
வயல் வரப்பு என
என்னைத் தவிர அனைத்தும் 
பின்னோக்கி ஓடி 
கண்ணாமூச்சி ஆடும்


 நெஞ்சத்தில் துள்ளளாடும் 
நினைவுகளை கிளறிவிட்டு 
ஆர்வம் கண்களில்  ஊர
 சன்னலோரம் பார்த்தேன் 

அண்டை அயலார் மறந்து 
அலைபேசி திரைக்குள்
 புதைந்தபடி பயணிக்கும் 
ஒரு பாலப் பருவத்தினன்...
_மங்கலக்குடி நா.கலையரசன்_

ஆவாரம்பூ


அரிதாரம் கலைந்தது
___________________________

பாசிசத்தால் நெய்யப்பட்ட 
இந்துத்துவ அரசியலை 
தரித்துக்கொண்டு
அலையும் போதும்...

ராஜா வேஷம் போட்டு 
காவித் துணி மிளிர
ராம நாமம் பாடி 
இந்து தேசம் இதுவென 
எகிரிப் பேசித்திரிந்த போதும்..


இல்லாரும் உடையாரும் 
இல்லாத ராஜ்ஜியமே
இந்து ராஜ்யம் என 
கனவை விதைத்து 
அதிகாரம் வந்ததும்

குடிமக்கள் வாழ்க்கையை 
குதறிப் போட்ட போதும்...
குஜராத்தின் குடிமக்களையே
கொன்று குறுதினக்கி குடித்து 
 கைகட்டி ரசித்த போதும்...


இந்து மத பாசம் 
அரியணைக்காண வேஷம் .என 
வரலாற்றுப் பொய்களை 
அம்பலப்படுத்தி எதிர்த்தோரை
அடக்கியும் .அழித்த போதும்...


ஏழு சகோதரிகளில் 
இளைய சகோதரியாம் 
மணிப்பூர் மலை மக்களை  
நர வேட்டையாடியபொதும்...


நாலு பேருக்கு நாட்டை விற்று
 நட்டாற்றில் இந்துக்களை தள்ளி 
நாக்பூருக்கு சேவை செய்து 
நத்தி பிழைத்த போதும்...


நினைத்துப் பார்த்தீரா 
உம்மையும் 
இந்து மதம் தந்த 
சூத்திர பட்டம் 
துரத்தி வரும் என்று...

 _மங்கலக்குடிநா.கலையரசன்_
Show quoted text

கவிதை


சன்னல் இருக்கை 
__________________________

வைக்கோல் போருக்கு
கால்கள் முளைத்ததுபோல 
ஊர்ந்து வரும்பேருந்தை
 தேரென வியந்த 
பாலப்பருவமது 

பேருந்து பயணம் 
பெருங் கனவாய் 
வந்து போகும் 
சன்னலில் முகம் பதித்து
 மனதை வெளியே விட்டு
வெறிப்பதை விட வேறென்ன... 

தலையை வெளியே காட்டாதே
 தந்தையின் எச்சரிக்கை 
கையை வெளிக்காட்டுவது யார் 
ஓட்டுனர் குரல் -ஓடிவரும்
எந்த குரல்களையும்
காது வழி நுழையாமல் 
காற்றள்ளிப் போகும்

 காற்று வந்து மல்லுக்கட்டும் 
முகமறைந்து சினம் காட்டும்
இருந்தென்ன 
காற்றுக்குள் நுழைந்து
கரைந்து விட 
மனசெல்லாம் 
மலர்ந்து விரியும் 

பனை மரம் வேப்பமரம் 
வயல் வரப்பு என
என்னைத் தவிர அனைத்தும் 
பின்னோக்கி ஓடி 
கண்ணாமூச்சி ஆடும்


 நெஞ்சத்தில் துள்ளளாடும் 
நினைவுகளை கிளறிவிட்டு 
ஆர்வம் கண்களில்  ஊர
 சன்னலோரம் பார்த்தேன் 

அண்டை அயலார் மறந்து 
அலைபேசி திரைக்குள்
 புதைந்தபடி பயணிக்கும் 
ஒரு பாலப் பருவத்தினன்...
_மங்கலக்குடி நா.கலையரசன்_