உயிர்ச்சொல்
_____________சிறுகதை
மங்களக்குடி நா கலையரசன்
அப்படி நடக்கும்னு யாரும் எதிர்பார்க்கலை கண்ணை மூடி கண்ணு திறக்கிறதுக்குள்ள நடந்து முடிஞ்சிருச்சு கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஆணும் பெண்ணும் கூடி கைதட்டி ஆரவாரத்தோட கபடி விளையாட்டு பாத்துட்டு இருந்தப்போதான் அது நடந்தது பிச்சமுத்து மகன் அசோக்குமார் கபடி பாடி போயிட்டு இரண்டு பேர தொட்டதுனால அவங்க அவுட்டுன்னு மூச்சு விடாம பாடிட்டு சைகை காட்டி திரும்புறதுக்கும் மேலத்தெரு அரிய முத்து பைக்ல கூட்டத்தை விலக்கிக்கிட்டு உள்ளே வருவதற்கும் சரியா வர அசோக் பைக்ல விழுந்துட்டான் அதனால வண்டியோட தடுமாறி அரிய முத்துவும் கீழே விழுந்துட்டாரு அரிய முத்து ஊருக்குள்ள பெரிய வசதியானவரு சுற்றுவட்டாரத்துல அவர் கிட்ட வட்டிக்கு வாங்காத ஆளு இல்லைன்னு சொல்லலாம் அதனால அவர்கிட்ட யாரும் முறைச்சுக்க மாட்டாங்க அப்படிப்பட்ட மனுஷன் வண்டியில் இருந்து விழுந்ததோடு மட்டுமில்லாமல் பெண்ணுக நிக்கிற இடத்துல கீழே விழுந்தது அரியமுத்துக்கு பெரிய அவமானமா போச்சு விழுந்து கிடந்த பைக்கக் கூட நிமித்தாம வண்டிக்கு அடில சிக்கிக் கிடந்த அசோக்கை புடிச்சு தூக்கி நிறுத்தி ஓங்கி ஒரே அறை அசோக் அதிர்ச்சி அடைந்துவிட்டான் என்ன சொல்றதுன்னு தெரியல அதேசமயம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால சிறப்பாக கபடி விளையான்டு ஊரு வயசு பொண்ணுங்க கிட்ட கைதட்டலையும் கள்ளச்சிரிப்பையும் பரிசா வாங்கி பறந்து பறந்து விளையாண்ட நம்மல இப்படி அந்த பொண்ணுகளுக்கு முன்னாலேயே அவமானப்படுத்தீ ட்டானே அப்படிங்கற ஆவேசத்தோட அரியமுத்துவை பார்த்தபடி நின்னான் "என்னடா முறைக்கிற தாயோலி கொன்னுடுவேன் போயிரு யாரு மேல வந்து விழுகுற "என்றபடி அசோக் மீது பாய்ந்து அவனது சட்டையை கொத்தாக பிடித்தான் பக்கத்தில் நின்றவர்கள் அரிய முத்து மேல் தொடாமல் அதே நேரம் அசோக்கிற்கும் அரிய முத்துவுக்கும் இடையில் நின்று சமாதானம் செய்தார்கள்" ஐயா விடுங்க அவன் சின்ன பையன் விளையாட்டு கவனத்தில நீங்கள் வந்ததை கவனிக்கல மன்னிச்சிருங்க" என்றார் ஊர் பெரியவர் கருப்பன் "விளையாண்டா கண்ணு தெரியாதா ..வர்றது யாரு.. போறது யாருன்னு.. கவனிக்கணும் அப்படிங்கிற அறிவு வேணாம்" ஆத்திரம் குறையாமல் பேசினார் அரிய முத்து அவருக்கு பிரச்சனை இந்த கீசாதி பொம்பளைங்க முன்னால கீழ விழுந்துட்டோமே என்கிற அவமானம் அவரை புடுங்கி தின்னுது இதனைக் கேட்ட அசோக் "நான்தான் விளையாடிகிட்டு இருந்ததுனால கவனிக்கல நீங்க பார்த்து வந்திருக்கலாம்ல உங்க கண்ணு எங்கே இருந்தது "அசோக் பேசிய மறுகணம் "என்னடா சொன்ன தேவிடியாமயனே நான் பார்த்து வரணுமா "என அவனை இழுத்து தெருவில் தள்ளி மாறி மாறி அடித்தார் கூட்டம் பதறியது அவரை தொட்டு பிரிக்கவும் பயந்தார்கள் ஆனால் அவர்களை சுற்றி நின்று "வேணாங்கய்யா விட்ருங்க அவன் சின்ன பையன் அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார் கிராமத்து தலைவர் சிதம்பரம் ஆளுக்குஆல் மன்னிப்பு கேட்டு கதறிய பிறகும் அவனை அடித்து கை ஓய்ந்த பிறகுதான் அசோக்கை விடுவித்தார் அரியமுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் அவனை தனியே இழுத்துப் போனார்கள் அறிய முத்துவை சுற்றி பலர் நின்று அவனை அமைதிப்படுத்தினார்கள் அவருக்கு ஆத்திரம் அடங்குவதாக இல்லை அசோக்கின் அம்மா அக்கா தங்கச்சி என அவன் வம்சத்து பெண்கள் அத்தனை பேருடனும் படுக்க தனக்கு அதிகாரம் உள்ளது போல பேசினார் சில இளவட்டங்கள் ஆத்திரப்பட்டார்கள் சில அனுபவஸ்தர்கள் வேண்டாம் என சாடை செய்தார்கள் கூடி நின்ற கூட்டத்தில் அரியமுத்துவிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் ஒரு பகுதியாகவும் வாங்காதவர்கள் ஒரு பகுதியாகவும் பிரிந்து நின்றார்கள் வட்டிக்கு வாங்கியவர்கள் "இப்படி தெருவ மறுச்சு கபடி விளையாண்டா போற ஆளுக எப்படி போறது" என சிலரும் "இப்படி யாருகிட்டேஎப்படி பேசணும்னு ஒரு தரம் வேணாம்" என்பதாகவும் சிலர் பேச மாற்றி மாற்றி பேசி கூட்டம் அரியமுத்து சென்றதும் கூட்டமும் சென்றது ஆனால் அசோக்கும் அவனது நண்பர்களும் மட்டும் மாரியம்மன் கோவில் திடலில் வந்து நின்றார்கள் அறியமுத்து நடந்து கொண்ட அடாவடித்தனமான முறையினை கோபத்துடன் பரிமாறிக் கொண்டனர் "எல்லாம் பண திமிருடா என்னமா பேசுறான் பாத்தியா எல்லாத்துக்கும் இருக்கு" என்றான் ஒருவன் "அதில்லடா சாதி திமிரு வேற தெருவுக்குள்ள போய் இப்படி நடந்து கொள்ள முடியுமா பேசிட முடியுமா "ஆத்திரம் கொண்டான் இன்னொருவன் ஆனால் அசோக் மாரியம்மன் கோவில் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தான் அவன் மனதில் சற்று முன் நடந்து முடிந்த நிகழ்வுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாய் மனதில் ஓட அவமானம் புடுங்கி தின்றது எதற்காக இத்தனை அடி உதை அவமானம் நான் இந்த சாதியில் பிறந்ததனாளா ஆத்திரமும் கோபமும் அவனை திணற வைத்தது யாரிடமும் பேசிக்கொள்ளாமல் நடந்தான் அவனை தனியே விடக்கூடாது என நண்பர்களும் அவனுடன் நடந்தனர் அசோக் எங்கேயும் நிற்காமல் செல்வதை பார்த்து அவனை தடுத்து நிறுத்தினார்கள் அவன் எங்கோ பார்த்தபடி நின்றான் "இப்ப என்ன உனக்கு நம்ம ஊரு வயசு பொண்ணுங்க முன்னால அறியமுத்து உன்னை திட்டி அடிச்சிட்டாரு அதானே" அவன் சொன்னதும் வேகமாக திரும்பிப் பார்த்த அசோக் "என்ன மதி இப்படி பேசுற நம்ம ஊரு பொண்ணுங்க முன்னால இப்படி நடந்தது சங்கடமா தான் இருந்தது ஆனா என்னோட ஜாதியை சொல்லி இழிவா பேசுனது தான் அவமானமா இருக்குடா" என்றதும் "இதுக்கு அவமானப்பட்டு என்ன செய்ரது நீ அந்த சாதியில தானே பொறந்து தொலச்சிருக்கே அப்ப பேசத்தானே செய்வாங்க" என்றான் சலிப்பாக "நாம என்னடா மனு போட்டா இந்த சாதியில் பிறந்தோம் சகிக்க முடியலடா" "அசோக்.. நீ டவுன்ல போயி காலேஜ்ல படிக்கிற லீவுக்கு தான் வர்ற ஆனால் இங்கே இருக்கிற எங்களுக்கு தினசரி ஒவ்வொரு வார்த்தை செயல் ஒவ்வொன்னுலையும்நீ கீசாதி பயன்னு உணர்த்திக்கிட்டே இருக்கிற ஊர்லதாண்டா நாங்க இருக்கோம்" கூட வந்தவர்களில் ஒருவனான ரவி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அசோக் "இப்ப இதுக்கு என்னதான் வழி" கேட்டபடி நண்பர்கள் முகத்தையே பார்த்தபடி நின்றான் "இதெல்லாம் உடனே தீர்க்க முடிஞ்ச பிரச்சனை இல்லை இப்ப நேத்து வந்த பிரச்சனையும் இல்லை நம்ம பாட்டன் பூட்டன் காலத்தில இருந்தே இருக்கிற பிரச்சனை நிதானமாக தான் கையாளனும்" என்றான் மதியழகன்" நிதானம்னா இன்னும் எத்தனை காலத்துக்கு நிதானம் காக்கணும் "அசோக்கின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மௌனமாக நின்றான் "உன்னால சொல்ல முடியாது ஏன்னா நாம இப்படியே வாழப் படைக்கப்பட்டிருக்கோம்னு நம்புவது தான் காரணம் முதல்ல அந்த நினைப்பை மாத்தணும்" படபடத்தான அசோக்" "நீ பதட்டப்படாமல் நிதானமா பேசு இதுக்கு இப்ப என்ன செய்யலாம்னு நினைக்கிறே" இதுவரை அமைதியாக இருந்த சேகர் கேட்டான் அவனை திரும்பி பார்த்த அசோக்கு அவனை கூர்மையாக பார்த்து "ஏதாவது செய்யணும் இனிமே இவங்களை சாதி சொல்லி பேசினா நமக்கு பிரச்சனைன்னு ஒவ்வொரு மேல் சாதிக்காரனும் யோசிக்கனும் அது மாதிரி ஏதாவது செய்யணும்" என்றான் " அசோக்கு உனக்கு நடந்த மாதிரி இங்கே இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் நடந்திருக்கு ஆளு வேற வேறயா இருந்திருக்கிறமே தவிர எல்லாமே சாதித்திமிர்ல நடந்தது தான் ஆனால் எதுவும் செய்ய முடியல இதெல்லாம் ஒரு பிரச்சனையா நம்ம ஆட்களுக்கு தெரியாது என்ன செய்ரது நீ இந்த பிரச்சனையை நம்ம தெரு ஆளுங்களோட போய்பேசு" அட விடுப்பா இதை போயி பெரிசா பேசிக்கிட்டு அப்படிம்பாக "என அலு த்துக் கொண்டான் மதியழகன் அவர்கள் எல்லோரையும் நிதானமாக பார்த்து "சரி நான் வீட்டுக்கு போறேன் நாளைக்கு என்ன செய்யலாம் என்று யோசிப்போம்" சொல்லிட்டு அவங்களை திரும்பி பாக்காம நடந்தான்.. மனசே கேட்கல "அவ்வளவு பேரு கூடி நிற்கிற இடத்தில நான் குடியிருக்கிற பகுதியிலேயே வந்து என்னோட சாதிய இழிவா பேசி அடிக்கிற தைரியத்தை அரியமுத்துக்கு யார் கொடுத்தது பிறந்த ஜாதியா இல்ல அவங்க கிட்ட இருக்குற பணமா பணம்னா இவன் வேற சாதிக்காரங்களை அடிக்களையே இப்படியே விட்டா இன்னும் இது அதிகமாகும். என்ன செய்யலாம்" என யோசித்தபடி நடந்தான்
பனை ஓலையில் உள்ள ஈக்கிகளை ஊறவைத்து பிரித்து அதை தடுக்காய் பின்னி அதை தண்ணீரில் ஊற வைத்த மட்டைகளை வளைத்து சொலகு பின்னிக் கொண்டிருந்த சோனை முத்து முன்னாள் வந்து நின்று "சித்தப்பா என்ன பண்றீங்க" பேச்சை துவங்கனுமே அதுக்காக இப்படி ஆரம்பித்தான் அசோக் குரல் கேட்டு நிமிர்ந்த சோனை முத்து "வாப்பா அசோக் எப்ப வந்த" என்றபடி அசோக்கை பார்த்து சிரித்த சோணமுத்து அசோக்குக்கு சித்தப்பா முறை அந்த ஊர் பஞ்சாயத்து வார்டு மெம்பர் எஸ்சிக்கலுக்கான பிரதிநிதி இவரை முன்மொழிந்து தேர்ந்தெடுத்தது இப்ப இருக்குற பஞ்சாயத்து தலைவர் பஞ்சரத்தினம் ஏன் இவரை தேர்ந்தெடுத்தார் என்று சொன்னால் சோனமுத்து அவர்கள் கைக்கு அடக்கமான ஒருவர் அவங்க ஓரமா நில்லுன்னு சொன்னா ஒதுங்கி போயிருவாரு கைகட்டி நில்லுனு சொன்னா காலையிலேயே விழுந்துருவாரு அதனாலதான் சோணமுத்துவுக்கு இந்த பதவிப் பரிசு அப்படிப்பட்ட சோனமுத்து மேலத்தெரு ஆளுங்க கிட்ட ஏதாவது காரியம் ஆகணும்னா இவரை பிடிச்சா போதும் அவ்வளவு வளைஞ்சு நெளிஞ்சு பேசி காரியம் பார்த்துவிடுவார் அதனால் தான் இவரை தேடி வந்தான் சொலகு கட்டுர வேலையில மூழ்கிக் கிடந்த சோனமுத்து வேலையை பார்த்தபடியே "எப்ப வந்த அசோக்" என விசாரித்தார்" நாலு நாள் ஆச்சு சித்தப்பா நான் உங்களை பார்க்க வந்தது ஒரு முக்கியமான விஷயத்துக்கு" என்றதும் "சொல்லுப்பா என்ன விஷயம்" வேலையை நிறுத்தாமல் நிமிர்ந்து அவனைப் பார்த்தான் "சாயங்காலம் என்னை அரிய முத்து அடிச்சிட்டாரு சித்தப்பா" என சத்தம் இல்லாமல் சொன்னான் "அது எனக்கு தெரியும் டா மண்டையன் சொன்னான்" சாதாரணமா பேசியபடி வேலையை தொடர்ந்தவர் "வயசு வித்தியாசம் இல்லாம யாரையும் கை நீட்ர பழக்கம் அந்த ஆள விட்டு போக மாட்டேன்கிறது அவனஅந்த மாரியாத்தாதான் கேட்கணும்" முனங்கினார் சோனமுத்து அசோக்கிற்கு என்ன சொல்வதுன்னு தெரியல "ஏன் சித்தப்பா அவர் நிறைய பேர இப்படி அடிச்சிருக்கிறாரா" அவரையே பார்த்தான் "புறவு நம்ம சத்தியா.. ..மாரிமுத்து ..சன்னாசி.. தம்மானி.. இப்படி அத்தனை பேரையும் அடிச்சிருக்காரு" மனதிற்குள் என்னையும் சேர்த்துக்கோ என நினைத்தபடி கசப்பாக பேசினார் சோனமுத்து "அத்தனை பேரும் நம்ம ஆளுங்களா தானே இருக்காங்க சித்தப்பா வேற சாதி ஆளுங்க யாரையும் அடிச்சிருக்கிறாரா" ஆர்வமாக கேட்டான் "வேற யாரையும் அடிச்சா கைய கால வெட்டிற மாட்டாக" என்றார் ஆத்திரமாக அசோக் இன்னும் கோபம் ஆயிட்டான் "எஸ்சின்னா எவன் வேண்டுமானாலும் அடிக்கலாமா இதை விடக்கூடாது சித்தப்பா கேட்க ஆள் இல்லைன்னு தானே நம்ம சாதியா பார்த்து அடிக்கிறாங்க இதை விடக்கூடாது சித்தப்பா" சோனமுத்து நிமிர்த்து பார்த்து "அதற்கு என்ன செய்யலாம்" குரலில் சுரத்து இல்லாமல் கேட்டார் "போலீஸ்ல புகார் தருவோம் சித்தப்பா" முடிக்கு முன் "அட போடா போலீஸ் என்ன செய்யும் நேரா அவங்க சாதி தலைவரை பார்த்து விசாரிக்கும் காப்பி சாப்பிடும் அரியமுத்து காசு கைமாறும் போலீஸ் போய்டும் அப்புறம் நம்மள கூப்பிட்டு உள்ளூருக்குள்ள ஏன் பிரச்சனைன்னு நம்மல மிரட்டி மனுவை திருப்பி வாங்க வைத்து விடுவார்கள்எத்தனை பிரச்சனையை இப்படி முடிச்சு இருக்காங்க உனக்கு தெரியுமா" நிதானமாக பேசினார் சோனை முத்து "அதுக்கு இப்படியே
விட்டுரலாமா சித்தப்பா" தலையை ஆட்டி ஆமோதித்த சோனமுத்து "அது வாஸ்தவம் தான் நீ படிக்கிற புள்ள ஸ்டேஷன் கீசன் வேணாம் நான் செய்தியை பிரசிடெண்ட் கிட்ட சொல்லிடுறேன் நாளைக்கு காலையில வட்டிக்காரரையும் வர வச்சு பேசிடலாம் என்ன சரியா "ஒரு நல்ல தீர்ப்பை சொன்ன நீதிபதியாக சிரித்தார் சோனமுத்து இதை அசோக்கால் ஏற்க முடியவில்லை "அங்கு வந்து வட்டிக்காரர் என்ன சொல்ல போறாரு மன்னிப்பு கேட்பாரா" என முடிக்கு முன் "மன்னிப்பா குடியை கெடுத்த போ இனிமே அப்படி நடக்காமல் இருப்பதற்கு பேசுவோம் மத்தபடி எதையும் எதிர்பார்க்காதே "கடுப்பாக "அது எப்படி சித்தப்பா காரணமே இல்லாம தெரு நாய் அடிக்கிற மாதிரி ஊர் ஜனங்கள் முன்னால அடிச்சதுக்கு ஒரு பரிகாரமும் இல்லாம" இழுத்தான் "பரிகாரம் என்றால் என்ன சொல்லு ஏதாவது செலவுக்கு காசு தருவாங்க அவ்வளவுதான் "என நக்கலாகச் சொன்னார் "நிறுத்துங்க சித்தப்பா நம்ம மரியாதையை நடுரோட்டில் வைத்து காய் அடிச்சவன் கிட்டயே காசு வாங்குறது ஈன புத்தி அது எனக்கு இல்ல" ஆத்திரமா "அசோக்கு நமக்கு தெரிஞ்சது ஊர் பஞ்சாயத்து தான் அதை மீறி இங்கே எதுவும் நடக்காது" விரக்தியாக தலையை குனிந்து கொண்டார் "இல்ல சித்தப்பா வழி இருக்கு ஒரு மனுஷனை சாதிப்பார்வையோட பேசினாலும் நடத்தினாலோ கடுமையான தண்டனை இருக்கு நீங்க கூட வாங்க புகார் பண்ணுவோம்" அதிர்ச்சியானவராக சோனமுத்து "நானா "அசோக்கை பார்க்காமால் "சித்தப்பா நீங்க வார்டு மெம்பர் தானே வாங்க போவோம் "நக்கலாக சிரித்தார் சோணமுத்து "நீ என்ன வார்டு மெம்பர்னா ஊரே பயப்படும்னு நினைச்சியா இங்க பல எஸ் சி பிரசிடெண்ட்களே வாயையும் சூத்தையும் பொத்திக்கிட்டு திரியுறாங்க தெரியுமா உனக்கு" கேலியாக அவனைப் பார்த்து சிரித்தார் "அதுபோகட்டும் சித்தப்பா நீங்க கூட மட்டும் வாங்க நான் புகார் தருகிறேன்" என்றபடி அவரையே பார்த்தான் அவர் சொலகை கட்டியப்படியே இருந்தவர் அசோக்கை நிமிர்ந்து பார்த்து "என்ன நீ புகார் தரப் போறியா வேணாம் அப்பாவை கொடுக்க சொல்லு நீ படிக்கிற புள்ள தேவையில்லாம உன் பேரு எதுக்கு "என அசோக்கை பார்த்தார் "அப்படியே செஞ்சிடலாம் சித்தப்பா நான் காலையில வந்துடறேன் ரெடியா இருங்க ஒன்பதரைக்கு பஸ்ஸிலேயே போயிடுவோம்" அவர் தலையாட்டியதும் விலகி வீடு வந்தான்
காலையில அவனோட அப்பாவோட புறப்பட்டு பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தான்அவனோட நண்பர்கள் மதியும் சேகரும் அவனோட வந்தார்கள் பிச்சமுத்து அசோக்கின் அருகில் வந்து" எப்பா கொஞ்சம் யோசிப்பா.. இப்ப இது தேவையா.." என நூறாவது தடவையாக கேட்க்க தந்தையை சமாதானம் செய்தான்அசோக் "பஸ் வரும் நேரம் ஆகிவிட்டது ஆனால் இன்னும் சோனமுத்து சித்தப்பாவை காணோமே" பதறிப்போனான் அவரோட போனும் போகல ஒன்பதரைக்கு பஸ்ஸின்னு சின்ன புள்ளைக்கு கூட தெரியும் இவர் ஏன் இன்னும் வரல என குழம்பினான் "இந்த பஸ்ஸ விட்டுட்டா திருவாடானைக்கு மத்தியானத்து க்கு தான் அடுத்த பஸ் இதெல்லாம் அவருக்கும் தெரியும் அப்பறம் ஏன் இப்படி லேட் பண்றாரு" என மனசுக்குள்ள கருவினான் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை ஒன்பதரை பஸ்ஸும் வந்துவிட்டது ஆனால் சோனமுத்து வரலை போனும் போகவில்லை வேறு வழியில்லாததால் நண்பர்களுடன் அப்பாவையும் அழைத்துக் கொண்டுவேறு வழியின்றி பஸ்ஸில் ஏறினான் அசோக் மனது தடுமாறியது இதுவரை போலீஸ் ஸ்டேஷன் இருக்குற திசை பக்கம் கூட போனதில்லை அவனைவிட அவனோட அப்பா பிச்சமுத்துவுக்கு போலீசை பார்க்க போகிறோம்னு சொன்னதிலிருந்து வியர்க்கத் துவங்கிவிட்டது உடலெங்கும் நச நசவென வேர்த்தபடி இருந்தது இருந்தாலும் மனதை தைரியப்படுத்திக்கிட்டு மகனுடன் வந்தார் பஸ் புறப்பட்டு திருவாடானை நோக்கி விரைந்தது
பாரதி நகர் B2 காவல் நிலையம்னு போடு வச்சு சிவப்பாய் நின்றது அந்த கட்டிடம் அதற்கு முன் எப்பவோ சோதனையில பறிச்சுக் கொண்டு வந்த பைக்குகளின் சக்கரங்கள் மண்ணில் புதைஞ்சு நின்னுச்சு காக்காய் குருவிகள் எல்லாம் சேர்ந்து அங்க நிறுத்தி இருந்த ரெண்டு சக்கர வாகனங்களில் தங்களின் கழிவுகள் மூலம் கோலபோட்டு இருந்தது கடத்தின மணலுடன் பிடித்து வந்து நிறுத்திய லாரி மண்ணுல செடிகள் முளைத்து வளர்ந்து நின்னுச்சு இதை யெல்லாம் ஜாடையாக பார்த்தபடி போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்கு வந்தார்கள் வாசலில் நின்ற பெரிய வேப்ப மர நிழலில் ஆங்காங்கே கூடி நின்னு சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள் இந்த கூட்டங்களுக்கு நடுவே மினிஸ்டர் ஒயிட் வேஷ்டி சட்டை பாக்கெட்டில் வெளியே தெரிவது மாதிரி 500 ரூபாய் நோட்டு என ஒவ்வொரு கூட்டத்திலும் ஒருத்தர் ரெண்டுபேர்னு நின்ரார்கள் அழுக்காய் சிலர் ஆடம்பரமாய் சிலர் என கூடி கூடி பேசிக் கொண்டிருந்தார்கள் சிலர் கெஞ்சிக் கொண்டும் சிலர் அதிகார தோரணையிலும் பேசிக் கொண்டிருந்தார்கள் இப்போது அசோக்குமாருக்கே ஒரு பதட்டம் ஏற்பட்டது அப்போதும் ஓரமாக நின்று சோணமுத்துவுக்கு போன் செய்தான் அவர் எடுக்கவில்லை வேறு வழியில்லை புகாரை தந்து தானே ஆக வேண்டும் என தந்தையை அழைத்துக் கொண்டு நண்பர்களைஅழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு உள்ளே நடந்தான் கடைசி முயற்சியாக பிச்சைமுத்து அசோக்கை தொட்டு அவன் திரும்பி பார்த்ததும்" தம்பி கொஞ்சம் யோசிச்சு செய்யுப்பா" எனக்கு கெஞ்சுவது போல பேசினார் அசோக் தந்தையை அவரின் பயம்கலந்த முகத்தை பார்த்தபடி" ரொம்ப அதிகமா பண்றோமோ முயற்சியை கைவிட்டுட லாமா" என்று யோசித்தபடி நடந்தான்" ஏண்டா கீழ் சாதி நாயே யாரு மேல வந்து மோதுர செருப்பால அடிப்பேன் டா அவுசாரி மகனே ,"அரியமுத்துவின் குரல் அசோக்கின் முகத்தில் காரி துப்பியது போல நினைவில் வந்து வதைத்தது "இல்லப்பா கொடுத்துடலாம் நாம ஒன்னும் புல்லோ பூச்சியோ இல்லப்பா நசுக்கி விட்டுட்டு போறதுக்கு நாமளும் மனுஷங்க இல்லையா நமக்கும் சுயமரியாத இருக்குன்னு காட்டுறதுக்காவது நாம புகார் கொடுத்து தான் ஆகணும் நடக்கிறது நடக்கட்டுமே வாங்க" என தைரியமூட்டி தந்தையை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான் ஸ்டேஷன் வெளியே பார்த்தது போல உள்ளே பரபரப்பாக இல்லை ரைட்டர் எதையோ எழுதிக் கொண்டிருந்தார் எஸ் ஐ மேசையில் நாலைந்து பைல்கள் அடுக்கி இருக்க சேர் காலியாக இருந்தது எஸ்ஐ இல்லை அவரின் சேருக்கு அருகே மூன்று பேர் ஜட்டியோடு நாய் குந்தலாக அமர்ந்திருந்தனர் இன்னொரு டேபிளில் இரு பெண் போலீசுகள் அமர்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தனர் யாரிடம் புகாரை தருவது என தெரியவில்லை வருபவர் போகிறவர் என எல்லோரையும் குழப்பமாகவே பார்த்தான் இவர்கள் இருவரும் வந்து நிற்பதை பார்த்ததும் ரைட்டர் வடிவேலு இவர்களை கைகாட்டி அழைத்தார் தயங்கித் தயங்கி இவர்கள் இருவரும் ரைட்டர்ரிடம் வந்து நின்றார்கள் உடன் வந்த அசோக்கின் நண்பர்கள் வெளியேயே நின்று விட்டதை அப்போதுதான் பார்த்தான் அசோக் வேறு வழியின்றி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நின்றனர் "என்னையா ..என்ன பிரச்சனை சொல்லுங்க "என்றதும் இவரிடம் தரலாமா வேண்டாமா என தயங்கியபடி" ஒன்னும் இல்ல சார் ஒரு புகார் கொடுக்கணும்" என்றதும்" புகார யார் மேல என்ன பிரச்சனை புகார் எழுதிட்டு வந்திருக்கீங்களா" என கையை நீட்ட "எழுதியிருக்கோம் சார் நாங்க எங்க தெருவுல கபடி விளையாடிட்டு இருந்தப்போ பைக்ல வந்து மேல இடிச்சது மட்டும் இல்லாம என்னைய சாதியை சொல்லி திட்டி அடிச்சிட்டாரு சார் அந்த மேல தெரு அரிய முத்து" விளக்கியபடி எழுதிக் கொண்டு வந்திருந்த மனுவை நீட்டினான் அசோக் அதை கை நீட்டி வாங்க வந்த வடிவேலு அசோக் சொன்ன விபரத்தை கேட்டதும் கையை மடக்கிக்கொண்டு "அப்படியா எஸ் ஐ. இன்ஸ்பெக்டர் யாரும் இல்லை ரவுண்ட்ஸ் போய் இருக்காங்க வந்ததும் தரலாம் அந்த பக்கம் ஓரமா நில்லுங்க" அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் எழுத துவங்கினார் வடிவேலு அடுத்து என்ன செய்வது என யோசித்தபடி பிச்சைமுத்துடன் ஓரமாகப் போய் நின்றான் அசோக் சிறிது நேரத்தில் ஸ்டேசன் பரபரப்பாக மாறியது போலீஸ்காரர்கள் அங்கேயும் இங்கேயுமாக நடந்து கொண்டு இருந்தார்கள் சில போலீஸ்காரர்கள் வெளியே செல்ல ஒரு புல்லட் வந்து நின்றது அதிலிருந்து இறங்கியவருக்கு வாசலில் நின்ற போலீஸ்காரர்கள் சல்யூட் அடித்தார்கள் அவர் கம்பீரமாக தலையை அசைத்தபடி உள்ளே நுழைந்து ரைட்டர் மேசைக்கு அருகே இருந்த கதவைத் திறந்து உள்ளே சென்றார் பிறகு போலீஸ்காரர்கள் ஒவ்வொருவராக உள்ளே செல்வதும் வருவதுமாக இருந்தனர் அதை பார்த்தபடி நின்ற அசோக்கிற்கு இதயத்துடிப்பு அதிகமானது பிச்சைமுத்து குறித்து சொல்லவே வேண்டியதில்லை சிறிது நேர பரபரப்புக்கு பிறகு ஒரு போலீஸ்காரர் வந்து" எஸ்ஐ சார் உன்ன கூப்பிடுறாரு போயி பெட்டிஷனை கொடுத்துட்டு போ" என்றார்"பெட்டிஷன் கொடுத்ததும் என்னை அடிச்சவங்களை பிடிச்சி ருவார்களா சார் "அப்பாவியாய் கேட்கும் அசோக்கை பார்த்து "இங்க பாரு தம்பி இப்படி எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே அதுதான் இந்த ஸ்டேஷனோட தாரக மந்திரம்" சிரித்தபடி நகர்ந்தார் போலீஸ்காரர் இவர்கள் இருவரும் போலீஸ் வழிகாட்டியபடி அந்த அறைக்குள் மெதுவாக நுழைந்தனர் அந்த அறைக்குள் ஒரு பெண் போலீஸ் கொடுத்த பைலில் அவர் சொன்ன இடங்களில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தவர் ஜாடையாக இவர்களை பார்த்து "என்ன "என்பது போல் கேட்டார் அதை புரிந்து கொண்ட அசோக் கையில் இருந்த மனுவை காட்டி "இதை கொடுக்கணும்" என்பது போல் சாடை செய்தான் அவர் கையை காட்டி அருகே வரச் சொல்லி மனுவை வாங்கினார் வாங்கிய மனுவை மேலும் மேலும் பார்த்தபடி என்ன பிரச்சனை சொல்லுங்க அசோக்கை பார்த்தார்" நாங்க அம்பேத்கர் தெருவை சேர்ந்தவங்க என்னைய எங்க ஊரு அரியமுத்துன்றவர் ஜாதியை சொல்லி திட்டி அடிச்சிட்டாருங்க சார் "சொல்லும்போதே அசோக்கிற்கு அவமானத்தால் அழுகை வந்தது "நீங்க என்ன கேஸ்ட் "என எஸ் ஐ கேட்க எஸ் ஐயை நிமிர்ந்து பார்க்க தயங்கி தலை குனிந்த படி "எஸ்சி சார்" குரல் வெளியே தடுமாறி வந்தது "நீங்க எஸ்சி தான் ஆனா அறிய முத்து எஸ் சி ன்னு சொல்லி இருக்க கூடாது அதானே" என்றார் ஏளனமாக சிரித்தபடி "இன்ஸ்பெக்டர் லீவு அவர் நாளை மறுநாள் தான் வருவாரு வந்ததும் வந்து பாருங்க"என்றபடி சேரை விட்டு எழுந்தார் அசோக் தயங்கியபடி" சார் அப்ப இந்த பெட்டிஷன்" என்றவனைப் பார்த்து "அந்த ரைட்டர் கிட்ட கொடுத்துட்டு போ "என்றபடி நடந்தார்" நான் எப்ப வரட்டும் சார் "நின்று அவனைப் பார்த்து" உன்னோட போன் நம்பரை கொடுத்துட்டு போ இன்ஸ்பெக்டர் வந்ததும் உனக்கு தகவல் சொல்ல சொல்றேன்"
ஸ்டே சனை விட்டு வெளியே வந்து பைக்கில் ஏறி வெளியேறினார் அசோக் ரைட்டரிடம் மனுவை கொடுத்துவிட்டு தனது தந்தையை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து வெளியே நின்ற நண்பர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான்
ஒரு வாரம் கடந்தும் ஸ்டேஷனில் இருந்து எந்த தகவலும் இல்லாததால் தனது தந்தையை அழைத்துக் கொண்டு பாரதி நகர் ஸ்டேஷனுக்கு மீண்டும் வந்தான் மெதுவாக தயக்கத்துடன் உள்ளே நுழைந்த அசோக் .எஸ் ஐ. இருந்த ரூமை பார்த்தான் அவர் இல்லாததால் மனுவை தந்த ரைட்டர் அருகே வந்தான் "சார்" என்றதும் தலை நிமிர்ந்து பார்த்த ரைட்டரிடம் "சார் ஏற்கனவே பெட்டிஷன் கொடுத்திருந்தேன்" என்றதும் "ஆமாமா புரியுது இன்னும் இன்ஸ்பெக்டர் வரலையே என்ன என்ன செய்ய வந்ததும் சொல்றேன் உன்னோட போன் நம்பர் தான் இருக்கே" இவனை கவனிக்காமல் வேலையை பார்ப்பது போல் நடிக்க துவங்கினார் சிறிது நேரம் நின்று விட்டு வெளியே வந்து தனது தந்தையை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தான் தொடர்ந்து இதுபோன்று வந்து விசாரிப்பதும் இன்ஸ்பெக்டர் வரவில்லை என்பதும் தொடர்ந்தது ஒரு நாள் இப்படி விசாரிக்க ஸ்டேஷனுக்கு வந்தபோதுதான் மூர்த்தி மாமா ஸ்டேஷனில் நிற்பதை பார்த்தான் அசோக்கை கண்டதும் "என்ன மாப்ள அடிக்கடி ஸ்டேஷன் பக்கம் பார்க்கிறேன்" என கிண்டலாக கேட்டான்" அது ஒன்னும் இல்ல மாமா சும்மாதான்" என்றவனை தடுத்து "எல்லாத்தையும் பசங்க சொல்லிட்டாங்க நீயா வந்து பேசுவேன்னு பார்த்தால் நீ வரவே இல்லை என்ன சொல்றாங்க.. ஸ்டேஷன்ல " மூர்த்தி கேட்டதும் அழாத குறையாக அசோக் நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தான் "என்ன மாப்ளை நம்ம சொந்தத்துக்குள்ள நான் ஒரு ஆளா இருக்கேன் நம்ம சனத்துக்கு ஒரு நல்லது கெட்டதுன்னா முதல் ஆளா நான் வந்து நிற்கிறேன் ஆனா நீ என்னை கண்டுக்கவே இல்ல நான் மட்டும் இதுல தலையிட்டு இருந்தா நீ இப்படி அலைய வேண்டியது இருந்திருக்குமா அதான் மாப்பிள்ளை எப்பவும் சொந்தக்காரன நம்புறது உங்களுக்கெல்லாம் கசக்குது" மூச்சு முட்ட பேசினான் மூர்த்தி அவன் பேச பேச அசோக்கிற்கு உள்ளுக்குள்ள ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது "முன்பே இவரிடம் சொல்லி இருக்கலாமோ" என மனது அடித்துக் கொண்டது மூர்த்தி அவன் தோலை தொட்டு "சரி விடு போலீஸ் என்ன சொல்லுது" அசோக் ரைட்டரை பார்த்தபடி "நானும் ரெண்டு வாரமா அலைறேன் எந்த நடவடிக்கையும் இல்லை மாமா "சங்கடமான இவன் பதிலைக் கேட்டதும் நேராக ரைட்டரிடம் சென்று "என்னதான் சார் பிரச்சனை" என்றதும் "இவன் கொடுத்தது உண்மைதான் பா.. ஆனா பெட்டிஷனை காணோம் எஸ் ஐ கொண்டு போய்ட்டாரா இல்ல இன்ஸ்பெக்டர் கிட்ட குடுத்துட்டாரான்னு தெரியல எஸ் ஐ .வரட்டும் கேட்கலாம் "என்றபடி வேலையில் கவனமானார் "சிறிது நேரத்திற்கு முன்பு விசாரித்த போது இன்ஸ்பெக்டர் இன்னும் வரவில்லை என்று சொன்னவர் இப்போது அவரிடம் கொடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை என்கிறாரே "என அசோக் குழம்பிப் போனான் அவரையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி லேசாக சிரித்து விட்டு நகர்ந்தார் அசோக்கிடம் வந்த மூர்த்தி "மாப்பிள நாம போலாம் நீ ஒன்னு செய் இவங்க பெட்டிஷனை தொலைச்சுட்டாங்க அதைச் சொல்லாமல் நம்மள சமாளிக்க இப்படி பேசுறாங்க நாளைக்கு நீ ஒரு 2000 ரூபாய் ஏற்பாடு செய் நம்ம வக்கீல் ஒருத்தர் இருக்காரு அவர பார்ப்போம்" என்றதும் புரியாமல் பார்த்து "அசோக் நீ பயப்படாதே அவரும் நம்ம ஆள் தான் அவர் செக்சன் எல்லாம் போட்டு பெட்டிஷனை எழுதி தரச் சொல்லி அதை கொடுப்போம் அப்ப என்ன செய்றாங்கன்னு பார்ப்போம் "என மீசையை தடவினார் அவர் சொல்வதும் சரி என்று பட்டது அசோக்கிற்கு உடனே சரி என்று சொன்னார் இருவரும் வெளியே வரும்போதுதான் சண்முகவேலு உள்ளே வந்தார் "அவரும் அசோக் ஊருதான் சொல்லப்போனால் அரிய முத்துவுக்கு உறவினர் அவரைப் பார்த்ததும் அங்கிருந்த போலீஸ் கூட வணக்கம் சொன்னார்கள் அவரும் எல்லோருக்கும் வணக்கம் சொல்லியபடி வந்தவர் மூர்த்தியை பார்த்ததும் "என்ன மூர்த்தி காலையிலேயே ஸ்டேஷன் பக்கம் ஒன்னும் பிரச்சனை இல்லையே" சினேகமாய் சிரித்தபடி விசாரித்தார் மூர்த்தியும் "அதெல்லாம் ஒன்னும் இல்ல வழக்கம்போல ஒரு சின்ன வேலை" சிரித்தபடி வெளியேற "நல்ல வேலை இவர்கிட்ட எதையும் சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன் மாமா "என்று அசோக்கை தொட்டு "ஏன் "என்றதும் "இல்ல அவர் அறியமுத்து ஆளுக தானே "மூர்த்தி முகத்தை பார்க்க "ஆமா "என சிரித்தபடி அவன் தோளில் கை போட்டபடி வெளியே வந்தார் மூர்த்தி
மறுநாளு 2000 ரூவாயை தயார் செய்து கொண்டு மூர்த்தியை சந்தித்தான் அசோக் இருவருமாக சேர்ந்து மூர்த்தி சொன்ன வழக்கறிஞரை சந்தித்தார்கள் அந்த வழக்கறிஞர் மூர்த்தியோடு மிகவும் நெருக்கமாக பழகினார் விவரத்தை அவரிடம் சொன்னதும்"இவ்வளவு நடந்திருக்கா இப்ப நான் எழுதி தரேன் பாருங்க ஒரு பெட்டிஷன் அதுல மட்டும் போலீஸ் எஃப் ஐ ஆர் போட்டான் அரிய முத்து சிக்கி சீரழிஞ்சிடுவான்" அப்படின்னு பயங்கரமா பேசி ஒரு பெட்டிசன் எழுதிக் கொடுத்தார் அதை எடுத்துக்கிட்டு அசோக்கும் மூர்த்தியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்கள் போலீஸ் ஸ்டேஷன் வழக்கமான பரபரப்புல இருந்தது நேர உள்ள நுழைஞ்சதும் இன்ஸ்பெக்டர் அறைக்குள்ள அவர் இருக்கிறது வெளியிலிருந்து பார்க்கும்போதே தெரிஞ்சது அதுக்கு முன்னால குறிப்பிட்ட சப்-இன்ஸ்பெக்டர் "சார் உள்ள தான் இருக்காரு நீங்க நேரா மனுவை கொடுத்து பேசீறுங்க" என்று இன்ஸ்பெக்டரின் அறைக்குள் அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் அறைக்குள் உள்ளே நுழைந்ததும் "வாங்க மூர்த்தி எப்படி இருக்கீங்க என்று விசாரித்தார்"அசோக்கிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சி "இன்ஸ்பெக்டர் எல்லாம் மாமாவை பெயர் சொல்லி கூப்பிட்டு நெருக்கமா பழகுற அளவுக்கு இருக்குன்னு சொன்னா மூர்த்தி மாமா பெரிய ஆளு தான் போல இருக்கு" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து பெட்டிஷனை இன்ஸ்பெக்டரிடம்எடுத்துக்கொடுத்தான் பெட்டிசனை அவர் முழுமையாக படித்ததற்கு பிறகு "சொல்லுங்க மூர்த்தி இதுல நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க "என்று கேட்டார் "இதுல சொல்றதுக்கு என்னங்க சார் இருக்கு எங்க பையன தெருவுல போட்டு அடிச்சு சாதிய சொல்லி ரொம்ப கேவலமா நடத்தி இருக்காரு அவர் மேல
பி சிஆர் கேஸ் போடணும்" என்று குரலில் ஒரு குழைவை தடவி பேசினார் "அப்படியா சொல்றீங்க அரியமுத்து ஊருக்குள்ள கொஞ்சம் செல்வாக்கான ஆளு கூப்பிட்டு விசாரிச்சா நான் சாதிய பத்தி சொல்லவே இல்லை என்று சொல்லுவார அது மட்டும் இல்லாம இந்த பையன் தான் அவரிடம் தப்பா நடந்துகிட்டார்ன்னு ஒரு பெட்டிசன் கூட தர்றதுக்கு ரெடியா இருப்பாரு அதுக்கு ரெண்டு சாட்சியவும் அவரே தயார் பண்ணிடுவாரு அதான் என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன் "என்று சொன்னதும் மூர்த்தி மாமா என்னை திரும்பி பார்த்து" அசோக் கொஞ்சம் வெளியில இருங்க நான் ஐயா கிட்ட தனியா கொஞ்சம் பேசிட்டு வரேன்" ன்னார் முதலில் புரியாவிட்டாலும் எப்படியோ அரியமுத்து மேல் நடவடிக்கை எடுத்தால் சரிதான் என்று வெளியில் வந்து நின்றான் சிறிது நேரம் கழித்து மூர்த்தி வெளியே வந்தார் வந்ததும் ஆர்வமாக அவர் முகத்தை பார்த்து "என்ன மாமா இன்ஸ்பெக்டர் என்ன சொன்னாரு" என்று விசாரித்தான் "அவரு கொஞ்சம் சிரமம்னுதான் சொல்றார் மாப்பிள்ளை" என்றதும் முகம் வாடி போனான் அசோக் அதைப் பார்த்ததும் மூர்த்தி சமாதானப்படுத்தும் விதமாக "அவர் சொல்றதுல உண்மை இருக்கத்தானே செய்யுது நீ ஒரு பெட்டிஷன் கொடுத்தா கவுண்டர் பெட்டிசன்னு எதிராளி கிட்ட இருந்து ஒரு பெட்டிசன் வாங்கி கேச ஒன்னும் இல்லாம பண்றது வாடிக்கையா தானே இருக்கு அதைத்தான் இன்ஸ்பெக்டர் சொல்றாரு"என்றதும்"அப்படின்னா அரியமுத்து என் மேல எதுவும் புகார் கொடுப்பாரா மாமா"ஆறுதலாக அவன் தோலை தொட்டு "நீ ஒன்னும் பயப்படாத மாப்பிள நான் இருக்கேன் இல்ல அவரு ஆயிரம் சொல்லட்டும் நான் சீரியஸா சொல்லி இருக்கேன் பாக்கலாம்" முகம் வாடி போய் நின்றான் அசோக் "இப்ப என்ன செய்யலாம் மாமா"தயக்கத்தோடு கேட்டான்"மத்ததை விடு மாப்ள அரிய முத்து கையில பணம் நிறைய இருக்கு அதை கொஞ்சம் அள்ளி போட்டு வழக்கை ஊத்தி மூடீருவானோன்னு மட்டும் தான் பயமா இருக்குஅதுதான் யோசிக்கிறேன்'என்று எதையோ சிந்திப்பது போல தாடையை தடவிக் கொண்டார் "இப்ப என்ன செய்யலாம் மாமா"இப்படி எல்லாம் நான் சொல்றதுனால நீ ஒன்னும் பயப்பட வேண்டியதில்லை இன்றைக்கு இருக்கிற நிலைமையை உன்கிட்ட சொல்றேன் ஆனா எப்படியாவது நடவடிக்கை
எடுக்கணும்னு கராராசொல்லி இருக்கேன் ஒரு காலேஜ்ல படிக்கிற பிள்ளையை' இளவட்ட புள்ளைய ரோட்டுல போட்டு இப்படி அடிக்கிறது எல்லாம் நியாயம் இல்ல சார் அப்படின்னு பேசி இருக்கேன் அவரும் டிஎஸ்பி கிட்ட கொஞ்சம் கலந்து பேசிகிட்டு ஆக்சன் எடுக்கிறேன்ன்னு சொல்லி இருக்காரு பார்க்கலாம்" சொன்னவர் சிறிது இடைவெளி விட்டு"அசோக் ஒரு நாலு அஞ்சு ரூபா தயார் பண்ண முடியுமா அப்படி முடிஞ்சா அரியமுத்து கொடுக்கிறதுக்கு முன்னால் நம்ம இன்ஸ்பெக்டரை தனியா பார்த்து கொடுத்து ஸ்ட்ராங்கா கேசை போட சொல்லி அழுத்தம் கொடுத்தோம்னா நாம நினைக்கிறது நடக்கும்... முடியுமா" அப்படின்னு கேட்டாரு அசோக்கிற்கு என்ன சொல்றதுன்னு தெரியல அரியமுத்து பேசுன அந்த கேவலமான பேச்சு அவன் காதுல கேட்டுகிட்டே இருந்ததுனால "சரி மாமா நான் அதுக்குக் கூட ஏற்பாடு பண்றேன் ஆனா அவன விடக் கூடாது மாமா"என்ற போது அவன் குரல் நடுங்கியது"அத நான் பாத்துக்குறேன் மாப்ள "இரண்டு நாளில் பிச்சைமுத்துவிடம் பேசி பத்து வட்டிக்கு பணத்தை வாங்கினான் அந்த தகவலை மூர்த்தியிடம் சொல்ல மறுநாள் மூர்த்தி பிச்சமுத்து அசோக் 3 பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாங்க ஸ்டேஷனுக்கு வந்த உடனே ஏகப்பட்ட மரியாதையோட இன்ஸ்பெக்டர் ரூமுக்கு அனுப்பி வச்சாங்க இருந்த போலீஸார் உள்ளே நுழைந்ததும் இவர்களைப் பார்த்ததுமே இன்ஸ்பெக்டர் புன்னகையோடு" நான் உங்க ஊர் தலைவர் கிட்ட பேசிட்டேன் ஒரு காலேஜ்ல படிக்கிற பையன இப்படி நடத்துனது எந்த வகையிலும் நியாயம் இல்லை அரியமுத்துவை உடனடியா போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்க அப்படின்னு சொல்லிட்டு வந்து இருக்கேன் எப்படியும் வந்துருவாரு நம்ம விசாரிச்சு நடவடிக்கை எடுப்போம்" அப்படின்னு சொன்னாரு உடனே மூர்த்தி அன்னைக்கு மாதிரியே "அசோக் கொஞ்சம் வெளியில இருங்க "அப்படின்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு வெளிய வந்து அசோக் கிட்ட ரொம்ப சந்தோஷமா "பணத்தை கொடுத்துட்டேன் மாப்பிள்ளை. இனி காரியம் டக் டக்குனு நடக்கும் இன்ஸ்பெக்டர் சீரியஸா அவனை தூக்கி உள்ள போடுறேன்னு பேசிட்டாரு அதனால இனி பிரச்சனை இல்ல கூடிய சீக்கிரம் அவன் அரெஸ்ட்னு செய்தி வரும் அவன் குடும்பமே வந்து உன் வீட்டு வாசல்ல நிக்கும் சரியா வா போலாம் "என்று அசோக்கை அழைத்துக் கொண்டு ஊர் நோக்கி திரும்பினார்கள்
இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்ததற்கு பிறகும் ஒரு வாரம் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை இந்த செய்தியை மூர்த்தியிடம் அசோக் சொல்ல அப்போது தான் மூர்த்தி சொன்னார் "அரிய முத்து ஊரிலேயே இல்லை என்று போலீஸ் சொல்றாங்க உண்மையா மாப்ள "என்று கேட்டான் அசோக்கிற்கு ஒன்றும் புரியவில்லை அரிய முத்து ஊரிலே இல்லையா அப்படி எங்கே போனாரு என்று ஆச்சரியப்பட்டான் மூர்த்தி பலமாக சிரித்துக் கொண்டு "இந்த ஊருக்குள்ள என்னைய அடிச்சுக்க ஆளே இல்லைன்னு பேசிகிட்டு திரிஞ்ச அரிய முத்துவை ஒரு பெட்டிஷன்லயே கதறி ஊரை விட்டு ஓட வைத்துவிட்டியே மாப்பிள்ளை" என்று உற்சாகமாக பேசினான் அசோகக்கு இதுக்கு சந்தோசப்படுறதா என்னன்னு முதல்ல புரியல இருந்தாலும் நம்ம கொடுத்த பெட்டிஷன்னாலதான் அவன் ஊரை விட்டு ஓடி இருக்கிறான் என்று சொன்னது கேக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது" மெய்யாலுமா மாமா " ஆச்சரியமாக கேட்டான்"பின்னே என்ன ஆள் இல்லையாமே" என்று சொன்னார் "சரி எப்படியாவது தொலையட்டும் பிச்சமுத்து மகன தொட்டதனால ஊரை விட்டு ஓடினான்னு இருக்கட்டுமே இது கூட அவனுக்கு தண்டனைதான் அரிய முத்துவோட இந்த நிலைமை ஒவ்வொரு மேல் சாதிக்காரனுக்கும் மனசுக்குள்ள பகீர்னுசொல்லும் இல்ல வரட்டும் பார்ப்போம் "மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷத்தோடு இருந்தாலும் "மாமா ஸ்டேஷனுக்கு போய் ஒரு வார்த்தை கேட்போமா" என்று தயக்கத்தோடு கேட்க மூர்த்தியோ "ஏன் மாப்பிள்ளை ஸ்டேஷனுக்கெல்லாம் சும்மா சும்மா பொய் அவிங்கமுன்னாடி நிக்க கூடாது அப்புறம் நம்மளையும் சாதாரணமா நினைப்பாங்க பெட்டிசன் கொடுத்துட்டோம் நடவடிக்கை எடுக்க சொல்லி பணம் கொடுத்துட்டோம் இனி நடவடிக்கை எடுத்து தானே ஆகணும்
இல்லைனா பிச்சிப்புடமாட்டோம் நான் பாத்துக்குறேன் மாப்பிள்ளை இந்த வாரம் போகட்டும்" என்று சொல்லிவிட்டு இன்னும் யாரோ இரண்டு பேரோடு அவர் திருவாடானை நோக்கிப்போன பஸ்ஸில் ஏரிச் சென்று விட்டார்
அசோக் என்ன செய்வது என்று புரியவில்லை என்ன நடக்கிறது என்று புரியவில்லை கல்லூரி திறக்கப் போவதாக தகவல் வந்துவிட்டது கல்லூரிக்கு போறதுக்கு முன்னால இந்த பிரச்சனையை முடிச்சிட்டு போயிட்டா நல்லது என யோசித்த அசோக் . மறுபடியும் ஒரு வாரம் போச்சு ஒரு நடவடிக்கை எடுக்கல இவங்க எல்லாம் தலைமறைவாகிட்டாருன்னு சொன்ன அரிய முத்து அப்படி ஒன்னும் போனதா தெரியல அவர் ஊருக்குள்ள தான் திரியுறாரு கோபம் கோபமாக வந்தது அடுத்து என்னங்கறதும் புரியல அசோக் குமாருடைய அப்பா பிச்சமுத்து "எப்பா அசோக்கு ஏதோ அது நடந்துருச்சு அடிச்சவன் மூர்த்தி அரப்புத்தின்னு சொன்ன மாதிரி அதை விட்டுட்டு பேசாம இருக்காம புகார்தரப் போறேன் புடிச்சு வைக்க போறேன்னு சொல்லி நீ புறப்பட்டு இப்ப நமக்கு தாண்டா பத்தாயிரம் ரூபாய்க்கு மேல செலவு இந்த கடன கட்றதுக்கு நான் எத்தனை நாளைக்கு உழைக்கணும் தெரியுமா யோசி டா இப்பவாவது யோசி பேசாமல் விட்டு தொலை நீ காலேஜுக்கு போற வேலைய பாரு" என்று மகனிடம் அக்கறையோடு பேசினார் அசோக் அப்பா சொல்வதில் உள்ள நியாயத்தை யோசிக்க தொடங்கினான் இருந்தாலும் நம்மை அடித்து அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தியது மட்டுமில்லாமல் புகார் என்று வந்து இவ்வளவு ரூபாய் செலவும் ஆகிவிட்டதை நினைத்து சங்கடப்பட்டான் சரி நாளைக்கு போய் என்ன ஏதுன்னு விசாரிப் போம் இதுல ஏதாவது முன்னேற்றம் இருந்தால் இதை தொடருவோம் அப்படி இல்லைன்னா அப்பா சொன்னது மாதிரி நம்மள கஷ்டப்படுத்தினவன காளி கேட்கட்டும் என்று விட்டுவிடுவோம்" என்ற முடிவோடு
மறுநாள் பாரதி நகர் புறப்பட்டான் வழக்கம்போல அப்பாவை கூப்பிடாமல் நண்பர்கள் இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்தான் வந்ததும் இன்ஸ்பெக்டர் இன்னும் வரவில்லை என்று ஒரு போலீஸ்காரர் தகவல் சொல்ல வெளியிலேயே நண்பர்களோடு நின்று பேசிக் கொண்டிருந்தான் அப்போது அவர்கள் ஊர்காரரான சண்முகவேலு வந்தார் அவரைப் பார்த்ததும் நம்மிடம் ஏதாவது கேட்டு விடப் போகிறார் என்று நினைத்து அவரை பார்க்காதது போல் திரும்பி கொண்டான் ஆனால் சண்முகவேலு நேராக அவனிடமே வந்து நின்றார் என்னப்பா நீயி இதோட உன்னை பலமுறை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்துட்டேனே என்ன செய்றீங்க படிக்கிற பிள்ளைக்கு இங்க என்ன வேலை என்று அக்கறையாக விசாரித்தார் ஆனால் அவரிடம் உண்மையைச் சொல்ல இவனுக்கு அச்சம் இவர் அறிய முத்துவின் உறவுக்காரர் என்பதால அவருக்கு ஆதரவாகவே இருப்பார் என்று நினைத்ததால் எதையும் சொல்லாமல் மௌனமாக நின்றான் சரி என்று உள்ளே நுழைந்தவர் அங்கே இருந்த போலீஸிடம் விசாரித்தார் என்ன சார் இது ஒரு மாசமா பாக்குறேன் இந்த பையன் இந்த ஸ்டேஷனுக்கு வந்துட்டு போயிட்டு இருக்கானே என்ன பிரச்சனை என்று விசாரித்தார் "அது ஒன்னும் இல்ல சார் ஒரு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறான் "என்று சாதாரனமாக பேசினார் "என்ன பெட்டிஷன் அது" சண்முகவேல்மீண்டும் வலியுறுத்த "அந்த பயலை உங்க பங்காளிஅரிய முத்து சாதியை சொல்லி பேசி அடிச்சிட்டாராம் அதுக்காக ஒரு பெட்டிஷன் கொடுத்திருக்கிறான் பி சி ஆர் ல கேஸ் போடணுமாம் "என்று கேலி யாக சொன்னார் சண்முகவேலுக்கு கோபம் வந்தது "ஏன் சார் சாதியைச் சொல்லி ஒருத்தன் வந்து ரோட்ல போட்டு அடிச்சிருக்கான்னு பெட்டிஷன் கொடுத்தா ஒரு மாசமாவா எஃப் ஐ ஆர் போடாம இருப்பீங்க "என்று சத்தம் போட்டார் அவர் சத்தத்தை கேட்டு அசோக் உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தான் அங்கே சண்முகவேலு அங்கிருந்த எஸ்ஐயிடம் "சார் இது பொருத்தம் இல்லை ஒரு மனுசன சாதிய சொல்லியோ சாதிய அடையாளப்படுத்தற மாதிரி சைகை செய்தாலும் இழிவுபடுத்தினாலும் அது தண்டனைக்குரிய குற்றம் அப்படின்னு சட்டம் இருக்கு அப்படி இருக்கும்போது ஒருத்தன சாதிய சொன்னதோட மட்டும் இல்லாம அவன தெருவுல போட்டு அடிச்சி இருக்குறானு சொன்னா இந்நேரம் நீங்க பி ஸிஆர் ல வழக்கு போட்டு கைது செய்திருக்கணுமில்ல இது பொருத்தம் இல்லைசார் இதை நான் பெருசா ஆக்குவேன் உடனடியா நீங்க எப் ஐ ஆர் போடலைன்னா நான் உறிய இடங்கள்ள பேச வேண்டி இருக்கும்" என்று கோபமாக பேசினார் அவர் பேசுவது தனக்காக தான் என்றதும் ஆர்வமானவன் அங்கே இருந்த சப்-இன்ஸ்பெக்டர் "இல்ல சார் பிசிஆர் கேஸ் எல்லாம் டிஎஸ்பி தான் டீல் பண்ணனும் அவர் லாங் லீவுல இருக்காரு இன்ஸ்பெக்டர் தான் இப்ப அதை டீல் பண்ணிட்டு இருக்காரு அவர் வந்த உடனே நீங்க நேர்ல பேசுங்க" என்று சமாளித்தார் ஆனால் சண்முகவேலு
விடுவதாக இல்லை "சார் நீங்க உங்க இன்ஸ்பெக்டர் வந்ததும் சொல்லுங்க இது உடனடியா இன்னைக்கு எப் ஐ ஆர் போடலைன்னா நான் இந்த பிரச்சனையை பெரிசாக்குவேன்" கோபம் குறையாமல் பேசினார் எனக்கு எதுக்குசார் வம்பு என்று அசோக்கை அழைத்தார் அவனிடம் நடந்தவைகளை புதிதாக கேட்பது போல் கேட்டு வேக வேகமாக எழுதினார் அசோக்கிற்கு ஒன்றும் புரியவில்லை ஒரு மாத காலம் நடையாக நடந்த பிரச்சனை ஒரு மனிதனின் ஒரு நிமிட பேச்சால் நடந்திருக்கிறது என்றால் இவர் எப்படிப்பட்ட ஆளாக இருப்பார் இவரை போய் அரியமுத்து உறவுக்காரர் என்பதால் சந்தேகப்பட்டோமே என்று சிறிது சங்கடப்பட்டான் சண்முகவேல் மேல் ஒரு பெரிய மரியாதை வந்தது அவன் சண்முகவேலுவை திரும்பிப் பார்த்தான் அப்போது போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பைக்கில் அமர்ந்து கொண்டே ஒருவர் ஸ்டேஷன் வாசலை நோக்கி குரல் கொடுத்தார் "தோழர் நேராச்சு தோழர் போலாமா "என்று கேட்டார் அசோக் வெளியில் அழைத்தவனையும் உள்ளே நின்ற சண்முக வேலையும் ஒரு முறை நன்றாக பார்த்துவிட்டு தோழர் என்று அவனும் ஒரு முறை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான் தோழர்.... தோழர்....
No comments:
Post a Comment