சிறுகதை
சுய ஒப்பாரி.
_______________
கிராமத்தில் இருக்கிற அந்த வீடு பரபரப்பாக இருக்கிறது அதிகாலை நேரத்தில் ஒவ்வொருவராக அந்த வீட்டிற்குள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள் அங்கே வாட்டசாட்டமாக ஒரு பெரியவரும் துருதுருவென்று செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு இளைஞனும் கவலை தோய்ந்த முகத்தோடு இருக்கிறார்கள் வருபவர்களெல்லாம் அவர்களிடம் பேசி விட்டுச் செல்கிறார்கள் எல்லோரும் ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறார்கள் என்ன தான் பார்ப்போமே என்று வீட்டிற்கு உள்ளே செல்பவர்களோடு சென்று பார்த்தால் அங்கு ஒரு வயதான மூதாட்டி படுக்கையில் கிடத்தப்பட்டு உயிரோடு இருக்கிறாரா இறந்துவிட்டாரா என்று தெரியாத அளவுக்கு இருந்தார் அவரை சுற்றி எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள் என்ன செய்வதென்று புரியவில்லை ஒருவாரமாக இதே நிலை நீடிக்கிறது கட்டிக் கொடுக்கப்பட்ட இரண்டு மகள்களும் தங்களது கணவர் பிள்ளைகளோடு ஒரு வாரத்திற்கு முன்பே வந்து விட்டார்கள் மகன்கள் இருவரும் தங்கள் குடும்பத்தோடு வந்து விட்டார்கள் பெரியவர் சிவனேசன் மனைவிக்கு உடல்நிலை மோசமான உடன் பிள்ளைகளுக்கு தகவல் கொடுத்துவிட்டார் எல்லோரும் வந்து சேர்ந்ததும் ஒரு நாள் இரண்டு நாள் என்று நாட்கள் கடக்க சிவனேசனை சிலர் அலுத்துக் கொண்டார்கள் அவசரப்பட்டு செய்தி சொல்லி விட்டார் என்று அலுத்துக் கொண்டார்கள் சிலர் சலித்துப் போய் விட்டார்கள்" ஏதோ சோலி முடிஞ்சா தூக்கிப்போட்டு போய் மத்த வேலைய பாக்கலாம்" என சலித்துக் கொண்டார்கள் ஆனால் அந்த மூதாட்டி பெற்ற பிள்ளைகளும் அவளின் கணவர் மட்டுமே எப்போதும் திகில் அடைந்த முகத்துடனேயே இருந்தார்கள் மகன் செல்வம் அவ்வப்போது வீட்டு வாசலுக்கு வந்து இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு உள்ளே வருவது வழக்கமாயிருந்தது அவனுடைய இந்த போக்கு யாரையோ எதிர்பார்ப்பது போல் இருந்தது அந்த சூழ்நிலையில் தான் அந்த அதிகாலை நேரத்தில் அந்த வீட்டின் முன்பு அந்த ஆட்டோ வந்து நின்றது அதிலிருந்து ராமாயி பாட்டி உடன் ஆறு ஏழு பெண்களும் இறங்கினார்கள் அவளைப் பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த சிலர் அதிர்ச்சி அடைந்தார்கள் ராமாயி பார்ட்டி அப்படி ஒன்னும் பயங்கரமான ஆள் இல்லை அவள் தகராறு செய்யவும் வரவில்லை பிறகு யாரவள் என்றால் இறந்த வீடுகளுக்கு சென்று இறந்தவரின் உடலை சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைப்பதற்காக கூலிக்கு அழைத்து வரப்படுகிற ஒரு குழுவின் தலைவி தான் ராமாயி பாட்டி அந்தப் பாட்டியை தன் தாய் இறப்பதற்கு முன்பே வரவைத்த கொடுமையை ஆளாளுக்கு விமர்சித்தார்கள் ஆனாலும்கூட மூதாட்டி அமராவதியின் மகன் செல்வம் வந்து ராமாயி பாட்டியிடம் பேசி வாசலில் அவர்களுக்கென்று ஒரு இடத்தை ஏற்பாடு செய்து தந்து ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த ஒலிபெருக்கியின் ஒளி வாங்கியை கையில் கொடுத்து பாடச் சொன்னார்கள் தயக்கத்துடனே ராமாயி பாட்டி வந்தவர்களை நடுவே உடல் கிடப்பது போல் சுற்றி அமரவைத்து பாடத் துவங்கினார் அமராவதி பிறந்தது வளர்ந்தது வாக்கப்பட்டது குழந்தை பெற்றது வளர்த்தது இன்று ஆளாக்கி நிறுத்தி பேரன் பேத்தி என வளர்ந்து நிற்பது என அத்தனையும் தனது பாட்டிலே கொண்டுவந்து ஒப்பாரி வைத்தாள் ராமாய பாட்டி. இவளது குரலும் பாடலும் வீட்டுக்குள்ளே கிடந்த அமராவதி பாட்டியின் காதுக்குள் நுழைந்ததும் அவளின் முகம் பிரகாசமானது கண்களில் ஒரு உயிர்ப்பு தெரிந்தது பாடல்களை கேட்க கேட்க அவள் கண்களில் கண்ணீர் கரைந்து காது வழியாக தலையணையை நினைத்தது கொஞ்சம் கொஞ்சமாக பாட்டை கேட்டபடியே கண் பார்வை நிலைத்தது முகமலர்ச்சியோடு அவளின் உயிர் மூச்சு நின்று போனது இந்த செய்தியை உள்ளே இருந்து ஒருவர் ஓடிவந்து சொன்னார் செல்வம் நினைத்தது நடந்துவிட்டது ஒரு வாரமாக அவள் மூச்சை பிடித்துக்கொண்டு கிடந்தது ராமாயி பாட்டியின் ஒப்பாரி பாடலை கேட்பதற்காகத்தான் போலிருக்கிறது அவள் இறந்துவிட்டாள் என்று சொன்னதும் செல்வம் அதை ராமாயி பாட்டியின் காதுகளில் அந்த செய்தியை சொன்னான் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தவள் சிறிது நேரம் மௌனித்து விட்டு மீண்டும் வழக்கமான ஒப்பாரி பாடலை தொடர்ந்தாள் பாட்டி முடித்ததற்குப்பிறகு இளைப்பாற எழுந்தபோது அவளுக்காக பேசி இருந்த கூலி ஐயாயிரத்தை அவளின் கையில் வைத்து விட்டு மேலும் இரண்டாயிரத்தை சேர்த்துவைத்து ராமாயி பாட்டியின் காலில் விழுந்தான் செல்வம் பதறிப் போனாள் ராமாயி பாட்டி "என்னப்பா இது கூலிக்கு ஒப்பு பாட வந்தவளைப் போயி கும்பிட்டுவிழுறியே" என பதறினாள் செல்வம் வழியும் கண்ணீரோடு சொன்னான்" என் அம்மா மீது எங்களுக்கெல்லாம் பாசம் தான் பாட்டி ஆனால் அவள் வாழ்ந்த வாழ்க்கையை நீங்கள் பாட பாட எனக்கு என் தாயின் மீது அளப்பரிய மரியாதையே வந்துவிட்டது பார்ட்டி அவளைப்பற்றி பெரிதாக அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து விட்டோமே" என அவள் கையை விடாமல் பேசினார் அவனை அவள் அவனை ஆற்றுப்படுத்தி விட்டு தன் குழுவினரோடு புறப்பட்டாள் அமராவதி பாட்டியின் இறுதிச்சடங்கை நோக்கி ஊர் இறங்க செல்வத்திடம் விடைபெற்றுப் புறப்பட்ட ராமாயி பாட்டி ஆட்டோவில் ஏறி செல்கிறபோது உடனிருந்தவர்கள் ஒவ்வொருவரும் ராமாயி பாட்டியை பெருமையாக பேசினார் நாங்க ஏற்கனவே கூலிக்கு அழுதவங்கதான் பாட்டி ஆனா கண்ணீர் விடுவதில்லை எங்களை கண்ணீர் விட வச்சதே நீதான் பாட்டி என பாராட்டினார்கள் இந்த ராமாயி பாட்டி கூலிக்கு ஒப்பாரி பாடப் போவது சமீபமாக தான் அதற்கு முன்பு அவள் மூன்று ஆண் குழந்தைகளை பெற்று கணவனோடு வாழ்ந்து வந்தவள் கணவன் இறந்ததற்கு பிறகு பிள்ளைகள் படித்து அவனாகி ஒவ்வொருவரும் ஒரு பகுதிக்கு குடும்பத்தோடு சென்றபிறகு தனித்துவிடப்பட்ட சூழலில் முதலில் மாதா மாதம் சிறிது பணம் அனுப்பியவர்கள் பிறகு அதுவும் நின்று போக முதியோர் பென்சன் 100 நாள் வேலை என்று தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தவள் எப்போதாவது தன்னுடைய ஆற்றாமையை நினைத்து தனியே அமர்ந்து வாய்விட்டு ஒப்பு வைத்து பாடுவாள் போவோர் வருவோரை அந்த குரல் கவர்ந்தது நீ
துக்கத்துல அழுதாலும் கேக்குறதுக்கு எங்களுக்கு சுகமாகத்தான் இருக்குன்னு பலபேறு பாராட்டியிருக்கிறார்கள் அப்படி ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும்போது கூலிக்கு ஒப்பாரி பாட போற ஒரு குழு இவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு தங்களோட வர கேட்டிருக்காங்க அவ மறுத்துவிட்டாள் ஆனாலும் ரொம்ப பேசி அவங்க வற்புறுத்தவே நமக்கும் ஒரு வருமானம் தேவைதானே அப்படின்னு அவங்களோட போக ஆரம்பிச்சா முதல்ல கூட்டமா சேர்ந்துபாடுனவ இவ குரலை பார்த்து இவள தனியா பாடச் சொன்னாங்க அப்படி இவ பாட பாட அழுகாத கல்லு மனசு கூட அழுக ஆரம்பிச்சது ஊரேஇவளைப் பற்றி பேச ஆரம்பிச்சது ஒவ்வொரு வயசான பெரியவங்களோட கடைசி ஆசை பட்டியல்ல நம்ம சாவுக்கு இவள் வந்து பாடணும் அப்படின்னு ஒரு ஆசை இருந்தது அப்படியான ஒரு ஆசை தான் அமராவதி பார்ட்டிக்கு அதை அவ மகன் செல்வத்துகிட்ட சொல்லி இருந்தாள் அதனால் தான் ஒருவாரமாக இழுத்துகிட்டு கிடைத்ததற்கு இது காரணமாய் இருக்குமோ அப்படின்னு நினைச்சு தான் செல்வம் ராமாயி பாட்டிய அம்மா உயிரோடு இருக்கும்போதே ஒப்பாரி வைக்கக் கூப்பிட்டான் இப்படி ராமாயி பாட்டியோட பெயரும் புகழும் வளர்ந்தது ஆனாலும் அவளுக்கு நாம தனியா விடப்பட்டு lவிட்டோமே என்று கவலை மட்டும் போகவே இல்லைவீட்டுல சமைத்துக் கொண்டே ஏதாவது பாடிக் கொண்டிருப்பது அவளது பழக்கம் இந்த பழக்கத்தினால் பழக்கமான ஒன்றுதான் பக்கத்துவீட்டு அகிலன் 11 வயது சிறுவனான அவன் பலநேரம்
அவளுடனேயே பொழுதைக் கழிப்பான் அவன்தான் அவளுக்குப் இப்போதைய கூட்டாளி இப்படி பாடிக் கொண்டு இருந்தவளை ஒருநாள் முகிலன் கேட்டான் நீ போகிற இடங்களிலெல்லாம் இறந்தபோனவர்களுடைய விவரம் சொல்லி பாடுவது எப்படி என்று கேட்டான் அதற்கு ராமாயி பாட்டி முன்னாடியே நம்ம வளர்மதி மூலமா விசாரித்து அதற்கு தகுந்த மாதிரி பாட்டு கட்டுவேன் என்று சொல்வாள நீ பெரிய ஆள்தான் பாட்டி என்று அகிலன் சிரிப்பான் இப்படியே அந்த பகுதி முழுவதும் அறிமுகமாகி பெயர் வாங்கி விட்டாள் இந்தச் சூழலில்தான் ஒரு நாள் பாடிக் கொண்டிருந்த போதே உடல் நடுங்கி குரல் தடுமாறி பாதியில் பாடலை நிறுத்த பதட்டம் ஆனது அந்த ஊர் இந்த நிலையில் படுத்த படுக்கையாகி விட்டாள் அவ்வப்போது ஒரு சிலர் வந்து பார்த்துக் கொண்டார்கள் ஒப்பாரி பாடும் குழுவில் இருப்பவர்கள் நிகழ்வுகளுக்கு போய் வந்ததும் இவளுக்கும் செலவுக்கு ஏதாவது கொடுத்து வந்தார்கள் அதை வைத்து மருத்துவச் செலவையும் பார்த்துக்கொண்டு ஓய்வில் இருந்தாள் ஒரு நாள் அகிலன் என்ன பாட்டி நடமாட்டமே இல்லையே என்று வீட்டிற்குள் நுழைந்து பார்க்க ராமாயி பாட்டி அசையாமல் கிடந்தாள் தொட்டு அசைத்துப் பார்த்தான் அவள் எழுந்திருக்கவில்லை பதறிப்போய் தன் தாயிடம் வந்து சொன்னான் அவள் "அந்தக் கிழவி அப்படித்தான் பிணம் மாதிரி கிடப்பாள் பிறகு எழுந்து
ஊரித்திரிவாள் "என வர மறுத்து விட்டாள் மீண்டும் அவன் ராமாயி பாட்டி அருகில் வந்து அமர்ந்தான் சினிமாவில் அவன் பார்த்தது போல அவளுக்கு உயிர் இருக்கிறதா என்பதை ஒவ்வொரு வகையாக ஆய்வு செய்தான் அவள் இறந்து விட்டாள் என்பது உறுதியாக தெரிந்தது தெருவுக்குள் நுழைந்து ஒவ்வொருவராக சொன்னான் யாரும் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை அவனுக்கு ஒரு யோசனை வந்தது வேகமாக தனது வீட்டிற்குள் சென்று தனது வீட்டில் இருந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு ஓடி வந்தான் அந்த போனை முகத்திற்கு மேல் வைத்து பார்த்தான் அதைக் கொண்டுவந்து ராமாயி பாட்டியின் அருகே வந்து நின்று பாட்டியை ஒரு முறை பார்த்துவிட்டு மொபைல் போனை ஆன் செய்தான் அதில் ராமாயி ஒப்பாரி வைத்து பாடிக் கொண்டிருந்தாள் ஆமாம் அவள் இறப்புக்கு அவளே ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தார்
ஒரு நாள் ராமாயி பாட்டியோடு பேசிக்கொண்டிருந்தபோது "ஏன் பாட்டி ஊருக்கு போயி செத்துப் போனவங்க வரலாறெல்லாம் பாடுறியே உன் வரலாறை பாடு கேட்போம்" என்றான் "ஆமா எனக்கு என்ன வரலாறு கிடக்கு" என சலித்துக் கொண்டாள் இருந்தாலும் அகிலன் தொடர்ந்து வற்புறுத்தவே தனது வாழ்க்கை வரலாற்றை பாடலாக கட்டி பாடினார் அதை அவன் மொபைல் போனில் பதிவு செய்து கொண்டான் அந்த ஒப்பாரி தான் இப்போது ராமாயி பாட்டி அருகே பாடிக் கொண்டிருக்கிறது இது அவளுக்காக அவளே பாடிக்கொண்ட ஒப்பாரி ஒன்றும் பெரிதாக புரியவில்லை என்றாலும் அகிலன் கண்கலங்க பாட்டி அருகே நின்றான் ஒப்பாரி ஒலி கேட்க கேட்க வீட்டிற்குள் ஒவ்வொருவராக நுழைந்தார்கள் பாட்டு தொடர்ந்து ஊர் முழுவதும் கேட்டுக் கொண்டே இருந்தது.....
No comments:
Post a Comment