அடைமழை நீர்கூட
அரவணைக்க அணையின்றி
சமுத்திரம் தேடி
சங்கமிக்கிறது.
மணலாடை களவாடும்
மாபியாக்களால்
மானம் துறக்க மனமின்றி
வரமறுக்கிறது வைகை
நீர்வழிப் பாதைகள்
கான்கிரீட் சுமப்பதால்
கருவை பயிராகும்
விலை நிலங்கள்
மானாவாரி மனிதர்களின்
மரணம் தடுக்கும்
கனரகத் தொழிலாய்
கரிமூட்டங்கள்
உணவளிப்போர் எனும்
பெருமை சுமந்தபடி
ஊர்ஊராய் அலைகிறோம்
உயிர் பிழைக்க
நாடோடி வாழ்க்கை
வேரோடியதறியாமல்
நாங்கலென்னவோ
நாடாண்டோர் எனும் கனவில்
நரபலி கேட்கும்
நினைவு தினங்களில்
ரத்தம் ருசித்தபடி
மங்களக்குடி நா.கலையரசன்
அரவணைக்க அணையின்றி
சமுத்திரம் தேடி
சங்கமிக்கிறது.
மணலாடை களவாடும்
மாபியாக்களால்
மானம் துறக்க மனமின்றி
வரமறுக்கிறது வைகை
நீர்வழிப் பாதைகள்
கான்கிரீட் சுமப்பதால்
கருவை பயிராகும்
விலை நிலங்கள்
மானாவாரி மனிதர்களின்
மரணம் தடுக்கும்
கனரகத் தொழிலாய்
கரிமூட்டங்கள்
உணவளிப்போர் எனும்
பெருமை சுமந்தபடி
ஊர்ஊராய் அலைகிறோம்
உயிர் பிழைக்க
நாடோடி வாழ்க்கை
வேரோடியதறியாமல்
நாங்கலென்னவோ
நாடாண்டோர் எனும் கனவில்
நரபலி கேட்கும்
நினைவு தினங்களில்
ரத்தம் ருசித்தபடி
மங்களக்குடி நா.கலையரசன்
No comments:
Post a Comment