உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நிகழ்ந்த வெள்ள சேதங்கள் மலை சரிவுகளால் ஏற்பட்ட உயிர் பழிகள் வெள்ளம் சூழ்ந்ததால் உணவின்றி இறந்த நூற்றுக்கணக்கான மக்கள் என அந்த சின்ன சிறிய மாநிலமே நிலை குழைந்து போயுள்ளது. உயிரழந்தோருக்கு அஞ்சலியையும் பாதிக்கபட்டிருப்பவர்களுக்கு ஆதரவையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். பிரசித்திப் பெற்ற கோயில்கள் உள்ள மாநிலம் என்பதால் பல மாநிலங்களை சேர்ந்த அப்பாவி பக்தர்கள் பல நூறு பேர் பலியானது சோகமாகும். தமிழ்நாட்டிலிருந்து சென்ற அப்பாவி பக்தர்களை உடனடியா தலையிட்டு காப்பாற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு. இ;த்தனைக்கு நடுவில் எனக்கு புரியாதது இரண்டு விசயம். பழனிஇசபரிமலை தொடங்கி பல புன்னிய ஸ்தலங்கள் என்ற நம்பிக்கையில் பக்தி பயணம் தொடரும் பலர் விபத்துகளில் இறந்து போவது தொடர்ந்து நடந்து வந்தாலும் சுனாமியால் தெய்வங்கள் வாழும் ஆலயங்கள் சிதைந்து போனாலும் எத்தனை முறை இந்த திருப்பயணங்கள் தொடர்ந்தும் எந்த பிரச்சனையும் தீராத நிலையிலும் மீண்டும் மீண்டும் படையெடுத்து பயணித்து மாண்டு போகும் மக்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. உத்தரகாண்ட சென்ற பக்தர்கள் திரும்பி விட்டார்கள். ஆனால் சிவன் சிலை மட்டும் வெள்ளத்தில் மூழ்கி மூச்சு திணறுவதை கண்டபிறகாவது எவராவது இருவர் இந்த பயணங்களை தவிர்த்து விட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் இந்தியாவை எவர் ஆட்சி செய்தாலும் இவர்கள் வாழ்க்கை அவதிக்குள்ளாவத தொடர்வதால் கவர்மெண்டை விட்டுவிட்டு கடவுள்களை தேடிச் செல்வது தொடரத்தான் செய்யும். இன்னொன்று அண்டை மாநிலங்களை பிய்த்து எடுத்து ஒட்டுப் போட்ட உத்தரகாண்ட மாநிலம் ஒன்றரை கோடிதானாம் மக்கள் தொகை. இந்த வெள்ளத்தல் இறந்தவர்கள் ஆயிரத்திற்கு மேலாம் . வெள்ளம் சூழ ஆங்காங்கே உணவு கிடைக்காமல் உலக தொடர்பில்லாமல் சுருண்டு கிடப்பவர்கள் பலாயிரம் பேராம். மீண்டும் மழை தொடருமாம் . நிவாரண பணிகளை துவங்கவே முடியவில்லையாம். மாநில அரசு கை பிசைந்து நிற்கிறது. சகஜ வாழ்க்கை துவங்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகுமாம். அரசியல்வாதிகளில் பதவி ஆசைகளால் புது புது மாநிலங்களை உருவாக்குவது என்கிற பெயரில் ஊராய் இருந்ததை தெருவாய் சுருக்கி தெருவில் விட்டு விட்டார்கள். மொழிவழி மாநிலமே சரியானது என்றார்கள் இடதுசாரிகள் . இவர்கள் சொல்வது சரியல்ல என கேலி பேசி சாம்ராஜ்யங்களை உடைத்து பாளையங்களாக்கியதால் பலியானவர்கள் உத்தரகாண்ட் மக்கள்தான். இதை நினைக்கும்போதே மனதுக்குள் ஒன்று குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்னரைகோடி மக்களை சேர்த்து உத்தரகாண் என்றார்கள். ஒரு அடைமழைக்கே உயிர் ஒடுங்கி உதவியை எதிர்பார்த்து கிடக்கிறது. இலங்கைக்குள்ளே ஒரு தனி நாடாம். நினைக்கும்போதே மனசு அதிர்ச்சியில் வேர்த்து போகிறது . என்ன செய்ய மாகாண சுயாட்சி என்றால் நம்மை இனவிரோதி என்பார்கள். அதற்காக கழுத்தை தடவினால் முகத்தை முகர்ந்து பார்க்கும் மாடாய் இருக்க மனம் வரவில்லையே.......
No comments:
Post a Comment