முகநூல் நண்பர்களுடன் எனது துயரத்தையும் ஒரு ஆலோசனையையும் பகிர்ந்து கொள்ள விரும்பி இதை எழுதுகிறேன். எனது அண்ணன் மகள் வனிதாவுக்கு திருமணம் முடிந்து 7 மாதங்கள் கூட முடியாத நிலையில் அவளின் கணவர் இறந்து விட்டார் எனும் செய்தி இடியாய் இரங்க அனைவரும் ஓடினோம்.
உடைந்து நொருங்கிப்போன அண்ணன் , ஆத்திர அவதாரத்துடன் தம்பி அவர்களது குடும்பம் அவர்களுடன் என்ன செய்வது என்றே இலக்கறியாமல் நானும் உடன் சென்றேன். எங்கள் உறவுகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லிடமுடியாது தவித்தோம்.
காரணம் மருத்துவமனையில் இறந்ததாக தகவல் வந்ததால் அவருக்கு எதற்காக வைத்தியம் பார்த்தார்கள் எனத்தெரியாததால் வந்தது இந்த தவிப்பு.
எங்கள் அண்ணன் மகளை அழைத்து துயரங்களுக்கிடையே காரணம் அறிய முயன்றோம். அவளும் தனக்குத் தெரியாது என கை விரித்ததுடன் 'என்னை அம்மா அப்பாவைப் பார்த்து விட்டு வா' என ஊருக்கு அனுப்பிவிட்டு வைத்தியம் பார்க்கப் போனார்கள் என்றும் ஒரு தகவலைச் சொன்னாள்
எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனைவிக்கே தெரியாமல் கணவனுக்குவைத்தியம் நடந்தது என்றால் அவருக்கு என்ன நோய் இருந்தது. குழப்பம் வந்து குவிந்தது. முட்டாளாக்கப்பட்டு விட்டோமோ என்ற அதிர்வில் என்மீது எனக்கே அருவருப்பாய் இருந்தது.
ஆண்கள் போதை அதிகமானால் உண்மையை உளறிவிடுவார்கள் பெண்கள் சோகத்தை வெளியிட்டு அழும்போது உண்மையை வெளியிட்டு விடுவார்கள் என்பதை என்மனைவி வந்து சொன்ன செய்தி உறுதி செய்தது.
வுனிதாவின் கணவரின் உறவுப் பெண்கள் வைத்த ஒப்பாரி அழுகைக்கிடையில் அவருக்கு மது-கஞ்சா அடிமை என்பதும் அவனுக்கு டி.பி இருந்ததும் வெளிப்பட்டதுடன் அவனுக்கு பேரு சொல்லா நோய் இருந்ததாகவும் சந்தேகம் இருந்ததாக அண்டை வீட்டாரும் ஆறுதல் சொன்னார்கள்.
ஊரும் , உறவும் உதிரியாய் சொன்ன தகவல்களில் உண்மையை உரித்தெடுப்பதற்காக தோழர்கள் உதவியுடன் அவனுக்கான மருத்துவ விபரங்களை சேகரித்தேன்.
உண்மை என் முகத்தில் காரித்துப்பியது. நீண்டகால நோயாளியான தன் மகனை காப்பாற்றிட முடியாது எனத் தெரிந்தும் கள்ளியும் கற்றாளையும் போட்டு என் மகைனை புதைக்கக் கூடாது என (திருமணமாகாமல் இறந்தால் சடங்கு ஏதுமின்றி கள்ளி கத்தாளை போட்டுத்தான் புதைப்பார்களாம் ) நோயை மறைத்து அவசரமாய் இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
எனது அண்ணனும் மகளுக்கு 22 வயதாகி விட்டது எப்பத்தான் கல்யாணம் பன்றது வர்ர மாப்பிள்ளைளை எல்லாம் நொட்டை சொல்லாதீங்க-டான்னு என்னையும் , தம்பியையும் அடக்கிவிட்டு அவர்களின் அவசரத்திற்கு இவரும் உதவி செய்தார்.
மணப்பந்தலிலேயே பைக் வைக்கவில்லை என்றும் மகளுக்கான நகையில் 2 பவுன் நகை குறைந்ததற்கும் எனது அண்ணன் பட்ட அவமானம் இதுவரை நாங்கள் சந்திக்காதது.
மகளின் வாழ்க்கையாயிற்றே என்று எங்கள் வீட்டு மனையிடத்தில் ஒரு பகுதியை விற்று சமீபத்தில்தான் பைக் வாங்கிக்கொடுத்த கடனையும் நகையையும் சமாளித்தோம்.
அவமான நெருப்புகளை அள்ளிக் கொட்டியபோதும் மகளின் வாழ்க்கை என வலி சகித்து புன்னகைத்தோம்.
ஆனால் 7மாதம் முடியவில்லை அவளின் மண வாழ்க்கையை முடித்து விட்டார்கள்.
என் மனைவி தொடர்ந்து வற்புறுத்தியும் எங்கள் மகளை நான் இப்போதுவரை நேரில் சந்திக்கவில்லை. அந்த தைரியம் எனக்கு வரவில்லை.
வீடே துயர அமைதியில் ஒவ்வொருவர் மனதிலும் எங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளோம்.
இNது போல ஏராளமான துயரங்கள் நடந்துள்ளது. ஆனால் யாரும் திருந்தவில்லை. ஒரு பெண்ணெனில் அவளுக்கு வாழ்க்கையில் இறுதி இலக்கே திருமணம் தான் எனும் கருத்தை சமூகம் பெற்றவர்களின் பொதுப்புத்தியில் ஏற்றி வைத்துள்ளது.
எனவே தான் குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து வைத்து தங்கள் கடமையை முடித்து விடவேண்டும் என துடிக்கிறார்கள். அந்த அவசரம் அவர்களின் அறிவைத் தின்று விடுகிறது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது , ஆயிரங்காலத்துப் பயிர் என அடைமொழியிட்டு அழைக்கப்பட்ட திருமணம் இன்று பகிரங்கமாய் கொள்ளையடிக்கும் திருட்டுத்தனத்தை அங்கீகரிக்கும் அனுமதிச் சீட்டாய் மாறிவிட்டது.
நமது முன்னோர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தான் சில நடைமுறைகளை சம்பிரதாயமாய் சடங்காய் உருவாக்கியிருந்தனர்.
திருவிழாக்களில், விசேச வீடுகளில் ஒரு பெண்ணைப் பார்த்து அந்தப் பெண் பிடித்துவிட்டால் , அந்த பெண் குறித்து விசாரித்து , அந்த ஊருக்கு அருகிலுள்ள தங்கள் உறவுகள் நண்பர்கள்மூலம் விசாரித்து, பெண்ணுக்கு திருமணம் செய்யும் முடிவில் இருக்கிறார்களா? என அறிந்து கொண்டு பிறகு மாப்பிள்ளையின் நெருங்கிய உறவினர்கள் நேரில் சென்று கலந்து பேசி பிறகு முறைப்படி பெண்பார்க்கும் சம்பிரதாயம் அரங்கேறும்.
பெண் வீட்டார்களும் தங்கள் பங்கிற்க்கு மாப்பிள்ளை விபரங்களை விசாரிப்பார்கள். வீடுபார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, தேதி குறிப்பது எனும் தனிச்சம்பிரதாயங்களே. மாப்பி;ள்ளை அவரது பெற்றோர் குறித்து விபரம் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் ஏற்பாடுகள் தான். ஆனால் இந்த நிகழ்வுகள் குறித்த புரிதல்களற்று போனதால் இது விருந்து வைபவங்களாய் மாறிவிட்டது.
மாப்பிள்ளையின் வீடு பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்களிடம் மாப்பிள்ளை அவர்கள் பெற்றோர் குறித்து விசாரித்தால் நல்ல கவனிப்பு, நல்ல விருந்து, வசதியான வீடு எனவே சிலாகிக்கிறார்கள்.
இதனிடையே திருமண ஏற்பாடுகளும் இன்று தனியார்மயமாகிவிட்டது. கொடுக்கும் கமிசனுக்கு ஏற்ப மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் பெருமைகள் போலியாக கட்டமைக்கப்படுகிறது. நுகர்வு தாக்கங்கள் நிறைந்து போட்டி உலகமாக மாறிப்போன நிலையில் பொருள் சேர்ப்பதிலேயே நேரம் கடந்து விடுவதால் திருமண தகவல் மையங்கள் , கமிசன் தரகர்களையே பிள்ளைகளை பெற்றவர்கள் சார்ந்து நிற்க்க துவங்கினார்கதள். இதற்கு பிறகு தான் ஏமாற்று திருமணங்கள் , போலி திருமணங்கள் , நோய் மறைத்து நடக்கும் திருமணங்கள் அதிகரித்துள்ளது.; இதனால் தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை அதிகரித்து வருகிறது. இது மாற வேண்டும்.
பெண்களும் தங்கள் புகுந்த வீட்டில் நடப்பதை மறைந்து விடுகிறார்கள். குhரணம் கடன்வாங்கி கஷ்டப்பட்டு பெற்றோர் செய்து வைத்த திருமணம் மகள் நல்லமுறையில் வாழ்கிறாள் என சந்தோசப்படட்டும் அதை கெடுக்கக் கூடாது என நினைத்து மறைத்து விடுகிறார்கள்.
அதன் விளைவாய் நிகழும் துயரங்களில் ஒன்றுதான் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்ததும் இது தொடரக்கூடாது.
குடிப்பதையே அடிப்படை உரிமையாய் புரிந்து கொண்டுள்ளவர்க்ள அதிகரித்து போதைச் சமூகமாய் மாறிவரும் சூழலில் தனது பெண்ணை கொடுப்பது என முடிவெடுக்குமுன் தீர்க்கமாக விசாரியுங்கள்.
மருத்துவச் சான்றிதழ் திருமண உறுதிக்கு முன் நிபந்தனையாக்கப்பட வேண்டும்.
இடைத்தரகர்கள் கட்டமைக்கும் பெருமை புதைகுழியில் சிக்காமல் நண்பர்கள் உறவுகள் மூலம் விசாரித்து உறுதி செய்திடல் வேண்டும்.
பெண்களும் சமூகமும் வரதட்சனை கேட்க்கும் மாப்பிள்ளையை போதை அடிமைகளை இழிவு செய்து புறக்கணிப்பதுடன் தங்களை வரதட்சணை மூலம் மதிப்பிள்ளா பண்டமாய் மாற்றுவோரை ஒதுக்கித் தள்ள வேண்டும் .
புகுந்த வீட்டில் உறவுகள் பிரச்சனைகள் குறித்து பெற்றோரிடம் பெண்கள் பேசவேண்டும். தனக்கு எதிரான தவறான எதையும் பொருத்துக் கொள்ளும் பேதமை ஒழிய வேண்டும்.
அப்போதுதான் தறுதலையை பெற்றிருந்தாலும் தாலியறுக்க பெண் தேடும் இரக்கமற்ற நாய்களை அழிக்க முடியும்.

கொடுமையிலும் கொடுமை. மனசாட்சி இல்லாத மிருகங்கள். செத்து புதைக்கும் போது அழகா தெரியணும்ன்னு நினைத்தவர்கள் இன்று இந்த பெண்ணின் அழகு எப்படி இருக்கும் என்று நினைப்பார்களா? இந்த மனிதர்கள் எல்லாம் இருந்தும் இல்லாதவர்கள் தான்.
ReplyDeleteதோழரே, உங்கள் அண்ணன் மகளுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை ஆனால் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறென். இன்றோடு அந்த பெண்ணின் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. சாதிக்க நிறைய இருக்கிறது. எனது ஆழ்ந்த வருத்தங்கள்.
- சிவா (from Mail)