கருக்கரிவாள் கையில் இல்லை
மண்வெட்டி கடப்பாரை
கவனத்திலேயே இல்லை
டிராக்டர் வண்டி
அறுவடை இயந்திரம்
வாங்கி வைக்க வசதி இல்லை
மந்தியான தலைமுறையை
மனிதராக்கிய மந்திரக்கோல்
கையாயுதம் மட்டுமே
கை வசம் உள்ளது - இதில்
கைகளை வைத்து
கையால் வணங்குவதா?
எப்படி கொண்டாட
ஆயுத பூஜையை ....?
No comments:
Post a Comment