Showing posts with label கொரோனா குறித்த கவிதை. Show all posts
Showing posts with label கொரோனா குறித்த கவிதை. Show all posts

Saturday, August 8, 2020

எழவு வீட்டிலும் களவு


எழவு வீட்டிலும் களவு
-----------------------------------------------
குலைக்கும் நாயின் குரல் கேட்டு
நள்ளிரவாயினும்
எட்டிப்பார்த்து கதவ டைக்கும்
வீட்டில் உரிமையாலனாய்
இல்லை நம்மை ஆள்பவர்கள்

உலக நாட்டாமை
டிரம்ப் பை வரவேற்கும்
உற்சாக ஊலைகளின்
ஓங்கார சத்தத்தால்
யுவானின்காது கிழித்த
கோரனாவின் சத்தத்திற்கு
செவி தர மறுத்தார்கள்

தாளிடாமல் கிடந்த
கதவுகளின் ஊடாய்
கோரானா
ஊருக்குள் வந்து
உயிர் கேட்டு நிற்கிறது

நின்று நிதானமாய்
கொன்று தொலைத்த பின்
உள்ளேயே இருங்கள் என
உத்தரவு போட்டு
உபதேசம் செய்கிறது அரசு

எங்கு காணினும்
பயத்தை விட பசியே
பரவியது வேகமாக
ஆள்வோரி டமிருந்து 
அறிவுரைகள் மட்டுமே
அலை அலையாய் வருகிறது

ஊரடங்கில் முடங்கி
உழைப்பை விற்று
உணவு தேட வழி இன்றி
உயிர்நாடி காக்க
மோடியை நாடினோம்

30 சதம் சிலர் ஊதியத்தில்
தொகுதிகளுக்கான பெருநிதி
பஞ்சப்படி ஓய்வூதியம் என 
பல பக்கங்களிலும்
பரிமுதல் செய்தாலும்
ஏந்திய எங்கள் கரங்கள்
வெறும் கைகள் ஆகவே
காத்திருக்கின்றன

 குசேலனுக்கு உதவிய
கண்ணனாய்
நமது நண்பர்களான
வரி கட்டாத வனுக்கும் 
வாங்கியதை கட்டாத வணுக்கும்
கஜானாவை திறந்து விட்டனர்

பசி மக்களின் பக்கம் வந்து
நிற்க வேண்டியவர்கள்
கொலைக்களத்தின் நடுவிலும்
 வேலைவாய்ப்பின்
கதவடைத்து வைக்கவும்
பொதுத்துறையை விற்றிடவும்
புதுய திட்டமென 
சதித் திட்டம் போடுகிரார்கள் 

எழவு வீட்டிலும்
களவு செய்வதுதான்
பாசிசத்தின்
பெரும் குணமோ.....

        மங்கலக்குடி நா. கலையரசன்