Friday, September 25, 2026
Sunday, September 20, 2026
Tuesday, July 21, 2026
கவிதைகள்
கவிதைகள்
திசை ...
__________________
பார்வையற்றவருக்கு பாதையின் திசையை
பரிமாறி கொள்வது எப்படி
பூ ...
செடிகளின் தலையில்
சிரித்த பூ
இப்போதென்
இதயவளின் தலையில்
அதே அழகுடன்...
பலூன் ...
பலூனுடன்
மூச்சுக்காற்றையும்
சேர்த்து விக்கிறார்
வியாபாரி
பலூனுக்கு விலை தந்தோம் மூச்சுக்காற்றுக்கு...
மரம்..
காட்டு மரங்கள்
கட்டை விறகானதும்
ஆறுதல் சொல்ல ஆளின்றி அலைகிறது பறவைகள்....
கண்ணாடி ...
தன் முன்னால் நிற்கும் யாரையும் விலக்கின்றி நிறைந்த அழகு நீ என ஆற்றுப்படுத்தும்
அற்புதக் கல்வி
கோலம்..
மார்கழி மாதத்தின்
பனி மழை நனைந்து
அத்தனை வாசல்களிலும் பூத்திருந்தன
கோலமாய் பூக்கள்
உன் வாசல் வந்து
நீ போட்ட கோலம் மட்டும் போட்டது போல் அல்லாமல் பூத்தது போல....
பணம் ..
உயிர் இல்லாதது பணம்
யார் சொன்னது
ரத்த உறவானாலும்
பெற்ற உறவானாலும்
உறவை உறுதிப்படுத்துவது உயிர்ப்பான பணம் தான்...
மலர்..
வந்தென்னுள் உண்டு
நான் மெய்மறக்கும் நொடி
என் இதழ் விளக்கி
பிரிந்து விடுகிறான்
வல்லுறவு வழக்கில்
விலங்கிட வைக்க
யாரிடம் புகார் செய்யலாம்....
பூப்பூச்சி..
பூக்களோடு உரசி உரசி
அதன் வண்ணம் பெற்றாயா? வண்ணத்துப்பூச்சியே இன்றிலிருந்து உன் பெயர்
பூப்பூச்சியாகட்டும்..
கடன்..
கட்டி முடித்த வீட்டிற்கு முன் நிற்கும்போது வெள்ளமாய் மகிழ்ச்சி இதயம் நிரம்பும் போது கடன் என்ன கடன் கட்டி விடலாம் என தட்டிக் கொடுக்கிறது மனது
இயல்பு ..
காற்று சொல்வதற்கெல்லாம் தலையாட்டாதே.என
குட்டாத குறையாய் சொன்னாலும் கேட்டாயா இப்போது பார் உடைந்து கிடக்கிறாய்
ஏக்கம்..
இடைவிடா மழையில் சைக்கிளில் பறந்து
மழையை குடைந்து செல்ல
துடித்தது மனது
கடந்த வயதில்...
தமிழகத்தின்
தலைசிறந்த பேச்சாளர்கள் மார்க்கெட்டிங் பிரச்சாரகர் ஆகிவிட்டார்கள்
பொருட்களின் விலை ஏழையின் சக்தியை மீறியது ..
தமிழக அறிந்த
பேச்சாளர்கள்
தங்களது பேச்சின் வல்லமையால்
பொருள்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்
நாலாண்டு கழித்து
மகவீன்றவள்
அடுத்த வளை
நடப்புத்திங்களே
பெறவில்லையென
கவிதைகள்
கவிதைகள்
வேறு வீட்டிற்கு
குடி போகிறோம்
அடுத்தவர் குடி வரும் வரை உணவுக்கு என்ன செய்யும் இந்த வீட்டில் உள்ள கொசுக்கள்...
அந்த ஒன்று
உறக்கம் தடுக்க
பதட்டம் குறைய
நேரம் கடக்க
தேனீருக்கு துணையாக கக்காவை வரவேற்க
நட்பை பரிமாற .என
எத்தனை காரணங்களை அடுக்கினாலும்
விரல் இடுக்கில் புகையும்
சிகரெட் புகை நலத்திற்கு
கேடு தானே...
எங்கேயும்
இருக்கத்தான் செய்கிறார்கள் எரிந்தும் ஒளி தரும் விளக்காக
காய்ந்தும் நிழல் தரும்
மரமாக
தோழர் என்ற பெயரோடு...
பேருந்தில் மிதக்கும் தேவதைகளாக
திருநங்கைகள்
எங்களையும்
மனுசியாக பாருங்கள் .என உணர்த்தத்தான் ஒவ்வொருவர் முன்பும்
வந்து நின்று கைதட்டி
கை நீட்டுகிறார்களோ..
மொட்டை மாடி வழி
உலகம் பரவி கிடக்கிறது படர்ந்து கிடக்கும்
பச்சை இலைகளில்
புரண்டு கிடக்கும் பணியை உண்டு மகிழும்
குட்டி குட்டியாய் முயல்கள்
ஒட்டி ஓடிவரும் அவைகளை தொட்டு விளையாடும் கரிச்சான் குருவிகள் முகத்துக்கு நேர் வந்து
முட்டி விளையாடும்
தட்டானை இரண்டு
கால்களில் நின்று எதிர்கொள்ளும்
குட்டி நாய் ஒன்று
மனம் முழுவதும் மயக்கம் நிரப்பும் காலை பொழுதில் நின்று கண்களுக்குள்
நிரப்ப நினைத்த தருணம்
புரடியில்அடித்து
புரட்டிப் போட்டது
கீழிருந்து வந்த வார்த்தைகள் "இன்னும் பால் வாங்கப் போகலையா"...
பிறப்பு இறப்பு
நிலம் நீட்சி துவங்கி
உலக வரலாறு வரை
எல்லா தரவுகளையும்
சின்ன கணினி திரையில் தேடுகிறவர்கள்
மாநிலத்திற்கான
முதல்வரை
பெரிய திரையில் தேடுகிறார்கள்...
தேவைகள் துரத்த
தேடி வாங்கிய கடனுக்கு வட்டியோடு சேர்த்து சுயத்தையும்
ஒப்புக் கொடுக்க வேண்டியுள்ளது...
அவசர அவசரமாய்
ஆறு வழிப் பாதை
வணிக வருவாய் பெருக்கெவன
வாய்ச்சவடால்
தனியார் தடை செய்து
தண்டம் கேட்பது ஏன்
வசதி பெருகவா .அல்லது சிலருக்கு வருமானம் பெருக்கவா.
இறுக்கமாய் நம்மோடு இருந்தவர்களின்
இறப்பை அறியும்போது நாமும் ஒரு வினாடி
இறந்தே பிழைக்கிறோம்....
பால வயதிலேயே
தாயணிந்து அழகு பார்த்த பூவும் பொட்டும்
இடையில் வந்து
தாரமாக்கிக் கொண்டவனுக்காய்
தானம் செய்வதென்ன
சடங்கு.....
வாக்குகளை வாங்கி
வெற்றியைப் பெற்றவன்
வாக்குறுதி செய்வானா கொடுத்த பணத்தை
மீட்க வழி செய்வானா...
வாங்கும் கூலிக்குள்
வாழ முடியவில்லை
ஏங்கும் மனதை
ஈடேற்ற வழி இல்லை
நீர் இலலை நிலம் இல்லை
விலை இல்லா
பொருள் வைத்து
நாளை கடத்திட
ரேஷன் கார்டு இல்லை
ஆதார் ஏதுமில்லை
அரசுக்கும் ஆட்சிக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை
வாழ்க்கையை அடகு வைத்து வாக்கை விற்றவர்கள் திக்கற்று தெருவில்....
மொய் என்பது
வரமா சுமையா
வாங்கும் போது வரம் செய்யும்போது சுமை
துயரச் சந்தோசம்
தங்களை மறந்த
நாய்கள் நான்கு
ஒன்றை ஒன்று சீண்டி
துள்ளி குதித்து விளையாடி மறந்துருந்த நொடி
பாய்ந்து வந்த வாகனத்தின் சக்கரத்தில் மாட்டி
உடல் சிதறி கிடந்தது
மிச்ச நாய்கள்
சிறிது நேரம்
அச்சத்துடன் பார்த்து அதிர்ந்தது
கொஞ்ச நேரத்தில்
தப்பிய நாய்கள் மீண்டும் துள்ளிக்குதித்து
விளையாட துவங்கியது வாழ்க்கையை புரிந்து கொண்ட ஞானிகளாய்...
ஆலயத்தின் வாசலில் அகண்டு விரிந்திருக்கும் மரத்தில் இலைகளாய்
சின்ன சின்னதொட்டில்கள்
பேரு வரம் கேட்டு
கட்டியவர் யாரும்
பூக்காத மரத்தை
கண்டு கொள்ளவே இல்லை மரம் எங்கே போய் தொட்டில் கட்டுவது....
விதிமீறல் என்பது
தடை செய்யப்பட்டுள்ளது இருந்தும்
விதியை சரியாக அமல்படுத்த விதி மீறல் தேவைப்படுகிறது
விதியை விதி மீறலின்றி அமுலாக்க
விதி மீறலையே
விதி ஆக்கி விடக்கூடாது
குறை நல்லது
மாதம்தோறும் நடக்கும்
குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் நெருக்கியபடி ஜனங்கள் எல்லாம் தொடர்ந்து பார்த்த அதே முகங்கள்...
Tuesday, June 16, 2026
கோடுகள்...
கோடுகள் ..
_____________
ஊர்களின் வாசல்களில் பலவண்ணங்களில்
வரைந்து வைத்த
குறுக்குக்கோடுகள்
வாகன ஓட்டுநர்களின்
உறக்கம் கலைக்கவா?
வாகன பாகங்களின்
உறுதி குலைக்கவா...
Subscribe to:
Posts (Atom)