வாக்குறுதி
__________________
வாக்குறுதி என்பது
ஒருவனின்
நேர்மைகுறித்தானது
வறியவனும் கூட
நெறியாய் பேணுவது
வாக்குறுதி காத்தல்.
வாக்குறுதி காக்க
மூன்றாவது அடிவைத்த
வாமனன் பாதத்தை
கிரீடம் தரித்த தலையால்
தாங்கினான்ஒரு மன்னன்
வாக்குறுதி காக்க வென்றே உயிரையே உதிர்த்தான்
தசரதன் என்பர்
வாக்குறுதி காக்க
சதி என்றறிந்தும்
உயிர் கவசத்தை
உரித்தான் கர்ணன்
வாக்குறுதி காக்க
நாட்டை துறந்து
மனைவி மகனை விற்று
தன்னையும் விற்றுக் கொண்டான்
அரிச்சந்திரன்
இந்தப் புராணக் கதைகளை பாராயணம் செய்து
பரப்பியவர் யாரும்
பாதையாக்கிக் கொள்ளவில்லை
இப்போது
வாக்குறுதிஎன்பது
வாக்கினை உறுதிசெய்யும்
வலையானது
வாக்கு மீறல்
நேர்மை மீறலென
சொன்னவனும்
நம்பியவனுமே
ஒப்புவதில்லை
வார்த்தைப்படி
வாழாதார் யாரும் வராதீர்
எம் தேசத்தேர் இழுக்க -என தேசத்தின் கதவடைப்போம்...
_ மங்களக்குடி நா. கலையரசன்_
No comments:
Post a Comment