தனிக்குடித்தனம்..
(சிறுகதை)
_மங்கலக்குடி
நா. கலையரசன்_
1.
பூமிநாதனின் வீடு கால்களில் தீ. பற்றிக் கொண்டது போல் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது ஒவ்வருவரும் ஆளுக்கு ஒரு வேலை என சுறுசுறுப்பாக செய்து கொண்டிருந்தார்கள் பூமிநாதனின் மனைவி பத்மா ரிங்மாஸ்டரைப் போல இயக்கிக்கொண்டிருந்தாள் இத்தனை பரபரப்புக்கிடையே பூமிநாதன்செல்போனை வைத்து டிவி விவாதத்தை கேட்டுக் கொண்டு எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் இருந்ததை பார்க்க பத்மாவிர்க்கு கோபமாக வந்தது "உங்களுக்கு அவசர ஆத்திரம் தெரியாது இன்னைக்கு என்ன நடக்க போகுது அத புரிஞ்சுக்காம நீங்க வழக்கம் போல இப்படி செல்ல.. நோண்டிக்கிட்டு இருக்கிறது என்னவேலை" என்று கணவனை விரட்டினாள் "நீங்க எல்லாறும்தான் வேலை செய்றீங்களே இதுல நான் என்ன செய்யறது" பூமிநாதன் சொன்ன பதிலை கேட்டதும்"அதுக்கு இல்லங்க எத்தனை மணிக்கு வராங்க எத்தனை பேர் வர்றாங்க இதெல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டா சமைப்பதற் கு ஈசியா இருக்கும் இல்லயா ஆளுக கூட வந்துட்டா செஞ்ச பதார்த்தம் போதலைன்னா
செரமம் தானே அத போன் போட்டு கேட்காமல் இப்படி உட்கார்ந்து செல்ல நோண்டிட்டு இருக்கீங்களேஅதான் கேட்டேன்"ஏறிட்டு பார்த்த பூமிநாதன் "ஏற்கனவே சொல்லிட்டேனம்மா. அவங்க கிட்ட கேட்டாச்சு மாப்பிள்ளை உள்பட 11 பேர் வருவாங்கன்னு உங்கிட்டயும் சொல்லியாச்சு மறுபடியும் போன் பண்ணி கேட்கணுமா" சலித்துக் கொண்டார் பூமிநாதன் "அதுக்கு இல்லைங்க ஒரு குறையும் வந்துட கூடாதுன்னு்தான் நான் யோசிக்கிறேன்" செல்போனை மூடி வைத்து விட்டு நன்றாக பத்மாவை பார்த்து"அதெல்லாம் ஒரு குறையும் வராது நீ போய் சமையலறையில் என்ன செய்றாங்க ஏது செய்றாங்கன்னு பாரு".. என்று பூமிநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய மகன் சுந்தர் வந்து சேர்ந்தான் அவனிடம் "தம்பி நம்ம ராமமூர்த்தி அண்ணன் கிட்ட பால் சொல்லி இருக்கேன் அதை போய் நீ வாங்கிட்டு வந்துரு" அருகே வந்து நின்று "எவ்வளவு பால் வாங்கணும்" என்று கேட்டான்"ரெண்டு லிட்டர் சொல்லி இருக்கேன்" இடையில் தலையிட்ட பூமிநாதன் "அதான் பிரிட்ஜில பால் பாக்கெட் இருந்ததே"என்றார் "அது பாக்கெட் பாலுங்க நான் சொல்றது பசுமாட்டுப்பால் செய்றது செய்றோம் உருப்படியா செய்வோமே"என்றதும் "ஏதோ செய்" என செல்போனில்மூழ்கினார். சுந்தர் தனது நண்பனை அழைத்துக் கொண்டு பால் வாங்குவதற்காக சென்றான் அப்போது தோளில் ஹேண்ட் பேக்கோடு வந்த ஹேமாவை பார்த்த பத்மா "வாடிதங்கம் வாடி சீக்கிரம் வா எங்கே லேட்டா வருவியோன்னு படபடப்பா இருந்தேன் போய் டக்குனு பிரஷ்ஷாயிட்டுவா சேலை ஜாக்கெட் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் அதை எடுத்து கட்டிக்கிட்டு ரெடியாகு"" சரி மா" என்றவள் அவளது ரூமுக்குள் சென்றாள் ஹேமாவின் பின்னாலேயே வந்த பத்மா ரூமிற்குள் வந்ததும் "இங்க பாரு இதுவரைக்கும் எத்தனையோ மாப்பிள்ள வந்தாக போனாக ஒன்னும் கை கூடல அதுக்கு காரணம் என்னன்னு தெரியல அது நீ தனியா பேசுனதாகூட இருக்கலாம் அதெல்லாம் போகட்டும் இன்னைக்கும் நான் மாப்பிள்ளையோட தனியா பேசணும் கினியா பேசணும்னு ஏதாவதுசொண்ணேன்னு வையி வந்தவங்க போனதுக்கு பின்னாடி உன்னை கொன்னே போற்றுவேன் மனசுல வச்சுக்க" என்று மகளை எச்சரிப்பது போல் சொன்னாள் ஹேமா சிரித்தபடி "அம்மா நீ ஏன் இப்படி சொல்ற நீ சொன்ன மாதிரியே நீ கொடுக்கிற சேலைய கட்டிக்கிறேன் நீ கொடுக்கிற பூவை வச்சுக்கிறேன் நீ கொடுக்கிற காப்பியை கொண்டுபோய் கொடுத்து நீ சொன்ன மாதிரியே எல்லாரையும் கும்பிட்டுநின்டுறுக்கேன் இது எத்தனை தடவை உனக்கும் தெரியாது எனக்கும் எண்ணிக்கை தெரியாது ஆனா நீ சொன்னதை நான் செஞ்சேனா இல்லையா வாழ போரவ நான் மாப்பிள்ளையோட தனியா பேசணும்னு சொல்றது என்ன தப்பு நாங்க காலம் பூரா வாழப்போரவங்க இல்லையா அவரோட கலந்து பேசி அவரை நான் புரிஞ்சுக்க வேணாமா அதுக்காகத்தான் பேசுறேன் இதை நீ தடுக்காத" என்று அம்மாவின் கன்னங்களை தாங்கி பிடித்து அசைத்தவாறு சொன்னான் "உனக்கு வயசாகிட்டே இருக்குடி வாழையவும் பொண்ணையும் பருவத்திலேயே நட்டுவைக்கணும் .கட்டிவைக்கணும்னு சொல்வாங்க காலத்தில கல்யாணம் பண்ணாம வச்சிருந்தா பின்னாடி மாப்பிள்ளை கிடைக்கிறது ரொம்ப செரமம் டி பொண்ணுங்களுக்கு வருஷம் கடந்துறுச்சின்னா வயசாயிருச்சுன்னு ஒதுக்கி விட்டுருவாங்க அப்புறம் மாப்பிள்ளை கிடைக்காது இப்ப வர்ற மாப்பிள்ளை நல்லா படிச்சவரு கை நிறைய சம்பாதிக்கிறார் நிம்மதியா சந்தோஷமா வாழலாம் அதனால இந்த மாப்பிள்ளைய பார்த்து ஓகே சொல்லீருடி எங்களுக்கும் வயசாகுதா இல்லையா புரிஞ்சுக்கடி அம்மாவ"கெஞ்சுவது போல் பேசிய அம்மாவை பார்த்து
"அம்மா நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுது எனக்கு மட்டும் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை இல்லையா என்ன ஆனாலும் கூட என்னைய புரிஞ்சிக்கிறவரா இருக்கணுமா இல்லையா அதனால நான் சில விஷயங்களை மாப்பிள்ளையோட தனியா பேசுரேங்குறேன் அதை மட்டும் தடுக்காத மற்றபடி நீ சொல்ற எல்லாத்தையும் நான் செய்றேன்" என்று முடித்தாள் "சரி பார்த்துக்கோ நான் சொல்றத சொல்லிட்டேன் சீக்கிரம் ரெடி ஆகு" என்று வேகமாக வெளியேவந்து சமையல் அறைக்கு சென்றுபார்த்தாள் எல்லாம் ரெடி ஆயிடுச்சா என்று விசாரித்தாள் சமையலறையில் பக்கத்து பக்கத்தில் வீட்டுக்காரர்கள்பத்மாவின்
தோழிகள் ஹேமாவின் மீது பிரியமாக இருப்பவர்கள் ஹேமாவை பெண் பார்க்க வரும் போதெல்லாம் சமையலுக்கு வந்து உதவுவது அவர்கள்தான் வழக்கம் போல இன்றும் அதேபோல வந்து பத்மா சொன்னபடி ஸ்வீட் .கார வகைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் "எல்லாம் ரெடி ஆயிடுச்சா"என்று விசாரித்தபடி "சாப்பிட்டு பார்த்திங்களாடி ஏதாவது குறை வந்துவிடப்போறது" என்று படபடப்பாக செய்து வைத்திருந்த ஒவ்வொரு பலகாரத்தையும் சுவைத்துப்பார்த்தால் அத்தனையும் அற்புதமாக இருந்தது அப்போது சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காந்திமதி சொன்னாள் "அக்கா ஹேமாவுக்காகவோ இல்லையோ இந்த ஸ்வீட்டு.காரத்துக்காவது மாப்பிள்ளை இந்த பொண்ண கட்டிக்கிடுவார் பாருங்க" என்று சிரித்தாள் கூட இருந்தவர்களும் சேர்ந்து சிரித்தார்கள் பத்மாவுக்கு பெருமையாக இருந்தது நேசமான தோழிகள் அதுவும் பக்கத்து பக்கத்து வீடுகளில் இருப்பவர்களாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி என்று யோசித்தாள் "சரிடி நீங்க ரெடியா இருங்க மாப்பிள்ளை வீட்டுக்காரர் கள் புறப்டுட்டாகளா.. எத்தன மனிக்கு வருவாக ..என்று விசாரிச்சுட்டு வர்றேன்" என்றபடி பத்மா வெளியே வந்தாள் இதிலே அவளின் தங்கை மகனான மகேந்திரன் நின்று கொண்டிருந்தான் "மகி.. எலை.. வந்திருச்சா பாத்தியா சூரியா கிட்ட சொல்லி இருந்தேன் கொண்டு வந்துட்டாரான்னு பாரு" அவனுக்கு ஒரு வேலையை சொல்லிவிட்டு மீண்டும் கணவன் பூமிநாதன் இருந்த இடத்திற்கு வந்தாள் அவனைப் பார்த்ததும் அவனிடம் அருகில் நின்று ரகசியமாக "இங்க பாருங்க உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசுங்க வழக்கம் போல இந்த மாப்பிள்ளை கிட்டயும் தனியா பேசுறேன்னு சொல்லி ஏதாவது சொதப்பிட போறா நீங்க சொன்னா அவ கேட்பா மாப்பிள்ளையோட எதுவும் பேசவேணாம் எல்லாரும் உக்காந்து பேசுறப்போ ஏதாவது கேட்கணும்னா கேக்கட்டும் மத்தபடி அவ தனியா எல்லாம் கூட்டிட்டு போய் பேச வேணாம்னு நீங்க பேசுஙக" பத்மா சொன்னதை கேட்டதும் மெதுவாக தலையை உயர்த்தி அவள் முகத்தை பார்த்தவர் "ஏன் பத்மா.. வர்ற மாப்பிள்ளையோட ஹேமா பேசுறதுனால உனக்கென்ன பிரச்சனை" என்றார் "அதுக்கில்லைங்க மாப்பிள்ளையோட அவ ஏதோ பேசறா அவங்களுக்கு பிடிக்காத எதையோஇவ பேசரான்னு எனக்கு படுது நல்ல மாப்பிள்ளை நல்ல குணம்னு எல்லாரும் சொல்றாங்க குடும்பமும் நல்ல குடும்பம் எந்தபிக்கல் புடுங்கலும் இல்லாம நம்ம பொண்ண சந்தோஷமா வாழுவா அப்படிப்பட்ட இடம் இதையும் எதையாவது பேசி கெடுத்துருவாளோன்னு பயமா இருக்குங்க நீங்கதான் கொஞ்சம் பேசுங்களேன்" பூமிநாதனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை "பத்மா நீ ஏன் இப்படி பதட்டப்படற இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் விவரமாத்தான் வளர்றாங்க பெத்தவங்க தான் எதை நினைச்சாலும் பயப்படரோம் நீ ஒன்னும் கவலைப்படாத நம்ம பொண்ணு தைரியமானவ விவரமானவ அவ தப்பா எதுவும் பேசமாட்டான்னு நான் நம்புறேன் அதனால நீ ஆக வேண்டியாதப் பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க" பால். எலை எல்லாம் வந்து சேர்ந்தது சமையலும் தயாராகி விட மாப்பிள்ளை வீட்டாரை எதிர்பார்த்து அனைவரின் பார்வையும் வாசலிலேயே மையம் கொண்டு இருந்தது இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல வாசலில் இரண்டு கார்கள் வரிசையாக வந்துநின்றது அதிலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இறங்கி தாம்பூல தட்டுகளுடன் வீட்டிற்குள் நுழைந்தார்கள் அவர்கள் அனைவரையும் வரவேற்று அமர வைத்து சம்பிரதாயபடி ஒவ்வொன்றையும் செய்தார்கள் பெண் பார்க்கும் படலமும் துவங்கியது ஹேமாஇயல்பாகவே கண்களை உறுத்தாத அழகுதான் என்றாலும் இன்று அவளை விசேஷமாக அழகு படுத்த வேண்டும் என்கிற பத்மாவின் அக்கறையால்இளம் சிவப்பு நிறத்தில் பட்டுப் புடவை கட்டி கைகளில் தட்டில் தேநீர் குவளைகளை வைத்து அவளை கொடுக்க வைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் கொடுத்த பிறகு பொதுவாக ஒரு இடத்தில் நின்று அனைவரையும் கைகளை கூப்பி வணங்கினாள் மாப்பிள்ளையின் தகப்பனார் "பரவால்லம்மா நீ உக்காரு" என சோபாவை காட்டினார் ஆனாலும் ஹேமா தனது தந்தைக்குப் பின் நின்று கொண்டிருந்த தாயோடு வந்து சேர்ந்து நின்றாள் வழக்கமான பேச்சுகளுடன் பெண்ணை தங்களுக்கு பிடித்து விட்டது என மாப்பிள்ளை முகிலனோடு வந்த அனைவரும் வழிமொழிந்தார்கள் மாப்பிள்ளையின் தாய் தந்தைக்கும் பிடித்துப் போக "ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சயத்தை வைத்துக்கொள்வோம்" என்று பேசினார்கள் எல்லாம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தபோது இடையில் தலையிட்டு "நீங்க எல்லாரும் புடிச்சி இருக்குன்னு சொல்லிட்டீங்க ஆனா கட்டிக்க போற பொண்ணுக்கு மாப்பிள்ளைய புடிச்சிருக்கான்னு கேக்கலையே முதல்ல பொண்ணு கிட்ட கேளுங்க" என்றார் மாப்பிள்ளையோடு வந்திருந்த உறவினர்களில் ஒருவர் அப்போதுதான் அனைவருக்கும் நினைவு வந்தது போல "ஆமாமாபொண்ணையும் கேக்கணும்ல" என்றனர் அனைவரும் ஹேமாவையே பார்க்க அவள் சிரித்தபடி "என் முடிவ நான் சொல்றதுக்கு முன்னால மாப்பிள்ளையோட தனியா பேசணும்" என்றாள் பத்மாவின் முகத்தில் இருள் கம்மியது பூமிநாதன் லேசாக சிரித்துக்கொண்டார் "ஓரிருவர் தயங்கினாலும் பெரும்பான்மையானவர்கள் தாராளமாக பேசட்டும் என வழிவிட்டார்கள் வழக்கம் போல மாப்பிள்ளை முகிலனுடன் ஹேமா மாடிக்கு போனாள் பூமிநாதனும் பத்மாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் மற்றவர்கள் மாடியில் அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பது பற்றி அவரவர் புரிதலுக்கு ஏற்ப கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் உடன் வந்திருந்த ஒருவர் "அந்த காலத்தில் எல்லாம் நாங்கள் பொண் பார்க்கவே போவதில்லை அம்மா அப்பா பாப்பாங்க அக்கா தங்கச்சிகூட பார்த்திருப்பாங்க மத்தபடி எங்களுக்கு பொண்ணு கருப்பா சிவப்பாங்கரதுகூட கல்யாணத்தன்னைக்கு மணமேடைல பார்த்தால்தான் ஆனா இன்னைக்கு அப்படியா முன்னாடியே பாக்குறது செல்போன் நம்பர் வாங்கிக்கிட்டு விடிய விடிய பேசுறதுன்னு எவ்வளவோ நடக்குது" என பெருமூச்சுவிட்டார் "இதில் என்ன தப்பு இருக்கு காலத்துக்கும்ஒன்னா வாழ போறவங்க கூடி கலந்து பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கரது நல்லது தானே" என்றார் முகிலனின் தந்தை "அதுவும் சரிதான்" என்று பலர் ஆமோதித்தனர் அனைவர் பார்வையும் மாறி மாறி மாடிப் படிகளிலேயே இருந்தது சிறிது நேரத்தில் இருவரும்
மாடியிலிருந்து இறங்கி வந்தார்கள் ஆர்வமாக இருவர் முகத்தையும் பார்த்தவர்கள் ஏதாவது சொல்வார்கள் என எதிர்பார்த்தார்கள் வந்ததும் மாப்பிள்ளை முகிலன் பத்மாவையும் பூமி நாதனையும் பார்த்து கைகூப்பி "உங்களுக்கு நாங்க ஊருக்கு போயிட்டு பதில் சொல்றோம்" என்று சொல்லிவிட்டு தாய், தந்தையை பார்த்தான் அவர்கள் இருவரும் எழ அனைவரும் எழுந்து விட்டார்கள் "சாப்டுட்டு போலாமே" பூமிநாதன்அவர்களை சாப்பிட அழைத்தார் "ஒண்ணும் பிரச்சனை இல்லைசார் ஸ்வீட் காரம் சாப்பிட்டாச்சு காபி குடிச்சாச்சு அடுத்து ஒரு நல்ல செய்தியோடு வந்து லஞ்சே சாப்பிட்டு போகிறோம்" என்று சிரித்தபடி விடை பெற்றார்கள் இரண்டு கார்களும் கண்ணை விட்டு மறைந்ததும் நேராக வந்த பத்மா ஹேமாவை பார்த்து "இதையும் கெடுத்துட்டியாடி அப்படி என்ன தாண்டி பேசுவ ஒவ்வொரு மாப்பிள்ளையும் உன்ன பார்க்கும்போது இருக்கரதுக்கும் தனியா கூட்டிட்டு போய் பேசினதுக்கு பின்னாடி வந்து பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அப்படி என்ன பேசி தொலையுற அதையாவது சொல்லித் தொலை" என்று அடித்தொண்டையில் கத்தினாள் பூமிநாதன் தலையிட்டு "பத்மா ஏன் இப்படி கத்துற அவளுக்கு எல்லாம் தெரியும் இது அவ வாழ்க்கை அவ முடிவு செய்யட்டும் இடையில தேவையில்லாம பேச நாம யாரு வாய மூடிட்டு பேசாம இரு" என்றதும் "என் மேல கோவமா அப்பா" தந்தையை பார்த்தாள் ஹேமா "உன் மேல எப்படிடா கோபப்படுவேன் நீ செய்யறது தான் கரெக்ட் நாங்க பெத்த புள்ளைக்கு கல்யாணம் பண்ணி சீக்கிரம் பேரன் பேத்திகளை பார்க்க ஆசைப்படுவோம் அந்த ஆசையில வர்ற அவசரத்தில தான் என்ன ஏதுன்னு யோசிக்காம யாருக்காவது பிள்ளைகளை கட்டி கொடுத்து காலமெல்லாம் கண்ணீர் விடுற பெத்தவங்களா நாங்க இருக்க விரும்பல எங்களுக்கு எங்க பொண்ணு வாழ்க்கை முக்கியம் அதே நேரம் அந்த வாழ்க்கை அவளுக்கு புடிச்ச வாழ்க்கையா இருந்தா எங்களுக்கு ரொம்ப சந்தோசம் நீ சரியா தான் செய்வே அந்த நம்பிக்கை அப்பாவுக்கு இருக்கு நீ போ" மகளைப் பார்த்து சிரித்தார் ஹேமா தனது அறைக்குள் சென்று உடைகளை மாற்றத் தொடங்கினாள் ..அசையாமல் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டு விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த பத்மாவை பார்த்து ஆதரவாக அவள் தோள்களை தடவியபடி "இங்க பாரு பத்மா__ பிள்ளைகளை பெத்தமா ..வளத்தமா ..படிக்க வெச்ச மா ..ஒரு வேலையை பார்த்து கொடுத்தோமா.. அதோட நம்ம வேலை முடிஞ்சது கல்யாணம் பண்ணி வைக்கிறதும் நம்ம வேலைதான் ஆனா அது கல்யாணம் பண்ணிக்கப் போற வங்களுக்கும் புடிச்சிருக்கணுமுல்ல அத விட்டுட்டு நாம சொல்றவங்களைத்தான் அவங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி பிடிவாதம் புடிக்கிறது சரி இல்லை புரிஞ்சுக்க.. கட்டிக்கிற போற மாப்பிள்ளை கிட்ட அவ எதையோ எதிர்பார்க்கிறா அந்த எதிர்பார்ப்பு கல்யாணம் பண்ணிக்கப்போற அவள பொருத்தவரை கரெக்ட்டு தானே நீ ஏன் கவலைப் படுற நிச்சயமா நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நடக்கும் அதுவும் அவ விருப்பப்படியே நடக்கும் நிம்மதியா போய் தூங்கு" என்றவாறு தனது அறையை நோக்கி நடந்தார் பூமிநாதன் "என்னதான் அப்படி பேசுவா" என யோசித்தபடி இருந்தாள் பத்மா எத்தனை நேரம் அப்படி யோசித்தாலோ தெரியவில்லை அமர்ந்திருந்த சோபாவிலேயே உறங்கி விட்டாள்
2
மறுநாள் அதிகாலை ஐந்தரை மணிக்கு ஹேமா எழுந்து விட்டாள் சிறிது நேரம் அறைக்குள்ளேயே இருந்து வீட்டின் தட்பவெப்ப நிலையை கவனித்தாள் நேற்று நடந்த நிகழ்வுக்கு ஒரு போர்மேகம் சூழ்ந்திருக்கும் என்பதை அறிவாள் இருந்தாலும் அது போராக மாறிவிடாமல் தப்பித்து கரையேறி விட்டால் மாலையில் வந்து தாயை சமாளித்து விடலாம் என்று யோசித்தாள் நேற்று வீட்டில் எந்த சம்பவமும் நடக்காதது போல காட்டிக்கொண்டு காலையில் எழுந்து குளித்து முடித்து அலுவலகத்திற்கு செல்ல ஆயத்தமானால் ஹேமா தனது அறையை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த தந்தையிடம் "குட் மார்னிங் பா".. என்றவள் தந்தையின் புன்னகையை பதிலாக பெற்றுக்கொண்டு "தம்பி எழுந்துட்டானா" விசாரித்தபடி அவன் அறையை எட்டிப் பார்த்தாள் அவனும் புறப்பட்டுக் கொண்டிருந்தான் அவனை துரிதமாக புறப்பட வைத்து இருவரும் சமையல் அறைக்குள் வந்தார்கள் அம்மா இவர்களை கண்டு கொள்ளாமலேயே செய்து தந்த காலை உணவை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கான டிபன் பாக்ஸ்களை எடுத்துக்கொண்டு புறப்படும் முன்பாகஅம்மாவின் அருகில் மெதுவாக சென்றவள் அவள் திரும்புவதற்கு முன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு
டாட்டாம்மா என்றபடி அவள் திட்டுவதை காதில் வாங்காமல் வெளியே ஓடி வந்து விட்டாள் அப்பாவிடமும் சொல்லிக்கொண்டு வாசலுக்கு வந்தவள் தின்னையில் நின்ற ஸ்கூட்டியை தம்பி சுந்தரை இறக்க வைத்து இருவரும் ஸ்கூட்டியில் புறப்பட்டார்கள் சுந்தர் ராமநாதபுரம் நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி மேக்ஸ் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்தம்பியை கல்லூரியில் விட்டு விட்டு அவள் பணியாற்றும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்வதும் மாலை வரும்போது அவனை அழைத்து வருவதுமாக அவள் பணி இருந்தது வண்டியில் செல்லும்போது மனதிற்குள் அம்மா நேற்று பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது பாவம் அவள் தனக்கு திருமணம் செய்து வைத்து பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில் பரிதவிப்பது தெரிகிறது ஆனாலும் தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை அதே சமயம் அம்மாவை பார்க்கவும் பாவமாக இருந்தது மாலையில் வந்து அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்ற முடிவோடு தம்பியை கல்லூரியில் இறக்கிவிட்டு தனது அலுவலகத்திற்கு சென்றாள் இவளது வருகைக்காக அலுவலக வாசலில் உள்ள தேநீர் கடையில் அவருடைய நெருக்கமான தோழி முத்தமிழ் நின்று கொண்டு இருந்தாள் இருவரும் கல்லூரி தோழிகளாக இருந்து இன்று அலுவலகத்திலும் தோழிகளாக தொடர்கிறார்கள் தனது தாய்க்கு அடுத்து சகலத்தையும் பரிமாறி கொள்பவளாக முத்தமிழ் இருந்தாள் ஹேமா அவளை பார்த்ததும் கையசைத்துக் கொண்டு அவளை நெருங்கினாள் அவளை கண்டதும் நெருங்கி வந்து அவளின் கைகளை பற்றி கொண்டு இழுத்துச் சென்று இருக்கைகளில் அமர வைத்த படி "ரெண்டு.. டீ "என்று சொல்லிவிட்டு ஹேமாவின் முகத்தை பார்த்து "நேத்து என்னடி ஆச்சு "ஆர்வமாக கேட்ட முத்தமிழை பார்த்து "நீ நினைக்கிற மாதிரிஒன்னும் ஆகல வழக்கம்போல ஊத்திக்கிச்சு"இது வழக்கமானதுதான் என்றாலும்"என்னடி சொல்ற.
ஏன் மாப்ள உன்ன புடிக்கலைன்னு சொல்லிட்டாரா.. ஏன் .எதுக்கு. எதனால. பதட்டமானால் அவளை ஜாடையாக பார்த்தபடி ஹேமா "இப்படி மொத்தமா கேட்டா எப்படி ஒவ்வொன்னா கேளு" சிரித்தாள் "அது சரி ..என்ன பிரச்சனை" விழிகள் விரிய அவளையே பார்த்தாள் "வழக்கம்போல நான் அவரோடு பேசினேன் அவரு
ஊருக்கு போய் பதில் சொல்றதா சொல்லிட்டு போயிட்டார்" அருகில் இருந்த மரத்தில் கதறிக் கொண்டிருந்த காக்கையை பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் தோள்களை தட்டி "உன்னத்தான்டி கேட்கிறேன் சொல்லு ஏன் உன்னைய பிடிக்கலையாம். அழகு படிப்பு. வேலை .இதுல எதையும் உன்கிட்ட குறை காண முடியாது வசதியில வேணும்னா சொல்லலாம் ஆனா அதையெல்லாம் விசாரிச்சிட்டு தானே பொண்ணே பார்க்க வந்திருப்பாங்க அப்போ அதெல்லாம் காரணம் இல்லைதானே வேற என்ன".. அவளை நிமிர்ந்து பார்த்த ஹேமா"ஒரு வேலை நானவரோடபேசினதுனால கூட இருக்கலாம்"சிரித்த ஹேமாவை எரிச்சலாக பார்த்த முத்தமிழ் "சிரிக்காதடி. பொண்ணு பாக்கவர்ர மாப்பிள்ளைங்க எல்லாம் இப்படி கதறி ஒடர அளவுக்கு என்னதாண்டி பேசரே"... சிரிப்பை நிறுத்திவிட்டு முத்தமிழை பார்த்து"என்னடி சிரிக்கக் கூட விட மாட்டேங்குற இப்ப என்ன நான் மாப்பிள்ளையோட என்ன பேசினேன்னு உனக்கு தெரியனும் அவ்வளவு தானே சொல்றேன் அன்னைக்கு என்ன நடந்ததுன்னா" அவளை ஜாடையாக பார்த்தபடி வானத்தைப் பார்த்தாள்..
3
ஹேமாவும் முகிலனும் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தார்கள் ஆச்சரியப்பட்டான் முகிலன் மாடியில் டெல்டா மாவட்ட பகுதிகளில் கம்பெனி நடவு செய்வார்களே அதுபோல வரிசை வரிசையாக தொட்டிச் செடிகள் வைக்கப்பட்டு பார்க்கவே அழகாக இருந்தது அதிலும் கீரை வகைகளோடு துளசி. கற்பூரவல்லி ஆடாதொடை. என மூலிகை செடிகளும் நிறைந்து இருந்தது ஒரு மாடியில் வந்து நிற்பது போல் இல்லாமல் ஏதோ ஒரு இயற்கை சூழ்ந்த இடத்தில் நிற்பது போல இருந்தது இன்னொரு பக்கம் சிறந்த ஓவியர் வரைந்த நிழல்படம் போல சீராகவும் உயரமாகவும் இருந்த வீடுகள் மேலிருந்து பார்க்கும் போது மனதை ஈர்த்தது அப்படியே நடந்து மாடியின் தடுப்புச் சுவர் அருகே நின்று அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தான் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தது இரவு சூரியனை மறைத்து கொண்டி ருந்த நேரம் என்பதால் வாகனங்களின் ஹெட்லைட்டுகளின்ஒளி வரிசை அணிவகுப்பு போல அழகாக இருந்தது முகிலன் தடுப்புச் சுவரில் சாய்ந்தபடி திரும்பி நின்று ஹேமாவை பார்த்தான் பார்த்தான் என்பதை விட பார்வையாலேயே அவளை விழுங்க முயல்பவனைப் போல பார்த்தான் ஹேமாவுக்கு கோபம் எட்டிப்பார்த்தது "இந்த ஆண்கள் எப்படித்தான் யோசிக்கிறார்களோ.. புதிதாக பார்க்கிற ஒரு பெண்ணை இப்படி கூச்சமே இல்லாமல் மேலிருந்து கீழ் வரை பார்க்கிற இந்த அநாகரிகத்தைத்தான் ஆண்பிள்ளத்தனம் என்கிறார்கள் என்ன அசிங்கம் இது.. இதுபோல ஒரு பெண் பார்க்க முடியுமா பார்த்தால் அவள் ஒரு மாதிரி என வாய் கூசாமல் பேசுவார்கள் சே.." என தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவளை தனது செறுமலால் தன்னை கவனிக்க வைத்து "இந்த மாடி எவ்வளவு நேர்த்தியா அழகா இருக்கு" பாராட்டியதும் "நான் வேலைக்கும் தம்பி காலேஜுக்கும் போனதுக்கப்பரம் என்னோட அப்பா அம்மா சேர்ந்து இப்படி ஒரு தோட்டத்தை மாடியில் உருவாக்கி இருக்காங்க" செடிகளை தடவி கொடுத்தபடி நின்று பேசிய ஹேமாவை பார்க்க ஒரு ஓவியம் போலவே தெரிந்தாள் "அற்புதமா இருக்கு மாடியில கொஞ்ச நேரம் நின்னா மனசு லேசா ஆகிடும் போல இருக்கு" மூச்சை பெரிதாக இழுத்து வெளியில் விட்டபடி "சரி என்னமோ பேசணும்னு சொன்னியே அது என்ன சொல்லு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" அவனைப் பார்த்து சிரித்து விட்டு "அப்படி என்ன சந்தோஷம்" அவளை நேரடியாகப் பார்த்தபடி "எனக்கு பெண் பார்க்கத்துவங்கி பார்த்த முதல் பெண்ணே எனக்கு ரொம்ப பிடித்ததும் பெண்ணுக்கும் என்னை பிடித்ததும் தான்" அத்தனை பற்களும் தெரிய சிரித்தான் முகிலன் அந்த சிரிப்பு அவன் முகத்திற்கு அழகாகவே இருந்தது "நான் புடிச்சிருக்குன்னு இதுவரை சொல்லவே இல்லையே" கேலியாகச் சிரித்தாள் "அதெல்லாம் சொல்லிடுவே" அங்கு கிடந்த சிறு கல்லை எடுத்து தூக்கி போட்டபடி நின்றவனை பார்க்க கோபம் வந்தது "அதெப்படி இந்த ஆண்களுக்கு முதல் முதலாக பார்க்கும் பெண்ணைக்கூட ஒருமையில் பேச முடிகிறது" என மனதிற்குள் கருவிக்கொண்டால் இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல் "அது என் கேள்விகளுக்கு பதில் வருவதிலிருந்து தான் தெரியும்" அவளின் அருகில் வந்து நின்றவன் "சரி சரி கேளு" என்றதும் ஒரு முறை தங்களைச் சுற்றி பார்த்துவிட்டு "எனக்கும் பிடித்து நமக்கு திருமணம் நடந்தால் நான் உங்கள் வீட்டுக்கு வர மாட்டேன்"என்றபடி அவனை கவனித்தால் அவன் பதறியபடி "பின்னே நான் உன் வீட்டுக்கு மாப்பிள்ளையா வரணுமா சே.. சே.. அது முடியாது என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் கேவலமா பேசுவாங்க" என்றபடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டான் "அப்போ நான் உங்க வீட்டுக்கு வர்றது மட்டும் நல்ல விஷயமா என்னோட பிரெண்ட்ஸ் என்ன கேலி செய்ய மாட்டாங்களா" நக்கலாக சிரித்த ஹேமாவை கோபமாக பார்த்தான் "அதுதானே காலங்காலமாக நடக்கிற முறை அதுல என்ன கேவலம் இருக்கு" அவனைப் பார்த்து லேசாக சிரித்தபடி "முறைன்னு சொன்ன பல வழக்கங்கள் கேள்வி கேட்கப்பட்டு மாறி இருக்கு அது மாதிரி இதுவும் மாரணும்னு நான் நினைக்கிறேன்" கொஞ்சம் சிடுசிடுத படி "சரி அடுத்து என்ன சொல்ல வர்ற எல்லாத்தையும் மொத்தமா சொல்லிரு" அவளை நேராக பார்த்தான் அவன் கொஞ்சம் பதட்டத்தில் இருப்பதை உணர்ந்து "சரி சொல்றேன் நான் கல்யாணம் ஆனதும் உங்க வீட்டுக்கு வர மாட்டேன் நீங்களும் எங்க வீட்டுக்கு வர வேண்டாம் தனியா ஒரு வீடு எடுத்து தங்கலாம் உங்க சம்பளத்தை உங்க வீட்டுக்கு செலவு செய்ரத நான் கேட்க மாட்டேன் அதே மாதிரி என் சம்பளத்துல எங்க வீட்டுக்கு நான் செலவு செய்வேன் அதை நீங்க கேள்வி கேட்கக் கூடாது நமக்கு குழந்தைகள்னு வரும்போது ரெண்டு பேரும் சேர்ந்து பாத்துப்போம் இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா கல்யாண தேதிய முடிவு செய்வதில் எனக்கு ஆட்சியபனை இல்லை" நிறுத்தாமல் பேசி முடித்ததும் அவனைப் பார்த்தாள் அவன்
நெற்றி வேர்த்து இருந்தது இப்படி அவள் சொல்வாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை அவள் பேசுவதெல்லாம் புதிதாக தெரிந்தது இவள் நமக்கு ஒத்து வருவாளா என்கிற சந்தேகமும் அவனுள் எழுந்தது இருந்தாலும் அவளுக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என நினைத்து "நானும் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்" என்றவன் அவள் உடன் வருகிறாளா என்று கூட பார்க்காமல் கீழே இறங்கி வந்தான்
4
முத்தமிழ் ஹேமாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் "என்னடி பண்ணி வச்சிருக்கே இதெல்லாம் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா அதோட இதெல்லாம் சரியாவருமாடி" குழப்பமாக பார்த்தாள் "ஏன்முடியாது' ஹேமா பேசி முடிக்கும் முன் தனிக்குடித்தனம். சம்பளம் தர மாட்டேன். என்னோட குடும்பத்துக்கு செலவு செய்வேன்னு பேசுறத யாரு ஏத்துப்பா இது எங்கே நடக்கும்" அப்பாவியாய் கேட்ட முத்தமிழை அருகே இழுத்து உட்கார வைத்துக் கொண்டு "இங்கே பாருடி எங்க அப்பாவும் அம்மாவும் என்னை பெத்து .வளர்த்து .படிக்க வைச்சு. வேலை வாங்கி கொடுத்தா ...நான் சம்பளம் வாங்கினதும்.. இப்ப வந்த புருஷன் கிட்ட குடுத்துட்டு கும்பிடு போடணுமா என்னால முடியாது.. என்னோட படிப்பு வேலைக்குன்னு எங்க அப்பா வாங்கின கடனை அவர் வாங்குற பென்ஷன்லருந்து கட்டிக்கிட்டு வாராரு என் தம்பி இப்ப தான் காலேஜுக்கு போறான் அவன் படிப்ப முடிச்சு வேலை கிடைக்கிற வரை நான் தானே இந்த குடும்பத்தை பார்த்துக்கணும் அதை நான் விட முடியாது பெத்தவங்களை பார்த்துக்கிறது க்கு ஆம்பளப்பிள்ளை எப்படியோ அதே மாதிரி தான் பொம்பளபிள்ளைகளுக்கும் பொறுப்பு இருக்கு நான் அதைத்தானே செய்றேன்" நிதானமாக சொன்னாள்" நீ சொல்றது என்னமோ சரிதான் ஆனா இது சரின்னு வேற யாரும் ஒத்துக்கவா போறாங்க"என்றவளிடம்"ஒத்துக்கிற வரைக்கும் பேசுவோம்" சத்தமாக சிரித்தாள் ஹேமா "என்னடி இப்படி பேசுற தனிக்குடித்தனம்னு வேற சொல்ற" ஹேமாவின் பேச்சை ஜீரணிக்க முடியாமல் பேசினாள் "அதுல நான் உறுதியா இருக்கேன் நான் உங்க வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னதும் அப்போ நான் உங்க வீட்டுக்கு வரணுமா அது அசிங்கம்னு சொல்றான் எத்தனை திமிரு உன் பாட்டி என் பாட்டின்னு காலங்காலமா பொம்பள போயி ஆம்பள வீட்ல வாழ்றோமே அது ஏன் பொம்பளைங்களுக்குஅது அசிங்கமா தெரியாதா.. ஆம்பளைங்கற திமிரு அதுதான் நான் தனி வீடுன்னு சொன்னேன் அதோட என்னோட சம்பளத்துல என்னோட பெத்தவங்களுக்கு செலவு செய்ரதுக்கு அவங்க வீடுன்னா50 பேருக்கிட்ட அனுமதி கேட்க வேண்டி வரும் தனி குடும்பம்னா புருஷன் கிட்ட கேட்டா மட்டும் போதும் அதனாலதான் தனி குடித்தனம்னு நிபந்தனை போட்டேன் நான் பின்னால செய்யப் போறதையும் சொன்னேன் அதுல என்ன தப்பு" அவளைஇடித்தாள் "ஏண்டி அப்ப கல்யாணம் ஆனதும் தனிக்குடுத்தனம்னு புருஷனை இழுத்துகிட்டு போறதை எல்லாம் சரீன்ற மாதிரில்ல சொல்ற" அவள் தோளைத்தட்டி "ஹேமா அவங்க எதுக்காக தனிக்குடித்தனம் போனாங்கன்னு எனக்கு தெரியாது ஒரு செடியை புடுங்கி இன்னொரு இடத்தில் கொண்டு போய் நடும்போதுகூட அந்த செடியிருந்த இடத்து மண்ணையும் கொஞ்சம் வேரோடு சேர்த்து எடுத்துக்கிட்டு போய் நடுவாங்க ஆனா பொம்பளைக்கு அது கூட இல்லையே பிறந்து வளர்ந்த வீட்டை ஒரு கயிற கட்டுன உடனேயே விட்டுட்டு போகணும்னா அதுல என்ன நியாயம் இருக்கு ஆனா ஆம்பளை மட்டும் காலுக்கு கீழே வேரு ஓடி இருக்கிற மாதிரி பொண்டாட்டிக்கு வீட்டுக்கு வர மாட்டாரு அப்படி யாராவது போனா அவரை கேவலமா பேசுவாங்கன்னா இதை சரி செய்ய வேணாமா" வந்து விழும் வார்த்தைகளில் ஹேமாவின் கோபத்தை உணர்ந்த முத்தமிழ் "நீ பேசறது எல்லாம் சரிதான்னு தோணுது ஆனா இது சரின்னு ஏத்துக்கிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்க யார் வருவா" இறங்கி பேசினாள் "நிச்சயம் வருவான் நான் யோசிக்கறதையே தானும் யோசிக்கிற மாதிரி ஒருத்தன் வருவான் தைரியமா இரு... வந்ததும் முதல்ல உனக்குத்தான் சொல்லுவேன்" ஆறுதலாகச் சொன்னாள் "சரி புறப்படலாம்" என எழுந்து நடந்த ஹேமாவுடன் சேர்ந்து நடந்தாள் முத்தமிழ் இப்படி பலமுறை நடந்து சென்றிருந்தாலும் இன்று என்னவோ பெருமிதமாக இருந்தது ஹேமாவை அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி உடன் நடந்தால் முத்தமிழ்...
No comments:
Post a Comment