கலையரசன் போட்டோஸ்
Wednesday, June 15, 2016
Sunday, June 5, 2016
Friday, April 22, 2016
Tuesday, February 2, 2016
தேவாலய தீண்டாமை
ஓரியூர் தேவாலய தீண்டாமை
தீயில் வெந்த புல்லூர் சார்லஸ்
இராமநாதபுரம மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தின் பின்புறம் 30.08.2015 அன்று திருவிழா தொடங்க கொடியேற்றப்பட்ட நிலையில் புல்லூரை சேர்ந்த தலித் கிறிஸ்தவர் சார்லஸ் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி இறந்து போனார். இந்த மர்மமான மரணம் குறித்து தலித் கிறித்தவ மக்கள் மத்தியில் பதற்றம் பற்றிக்கொண்டது. சார்லஸ் சாதாரணமான சராசரி மனிதரல்ல. சிவகங்கை மறைமாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்கள் மீது ஏவப்படும் தீண்டாமை கொடுமைகளை எதிர்த்தும் அதன்விளைவாய் ஒர்pயூர் தேவாலயத்திற்குள்ளும் இருந்த தீண்டாமை மற்றும் குருமார்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றிற்கு எதிராகவும் போராடி வந்தவர்.
இத்தகைய நடவடிக்கைகளால் தேவாலயத்தோடு முரண்பட்டிருந்த நிலையில் தான்; குருப்பட்ட மாணவர் மைக்கேல்ராஜ்-க்கு குருபட்டம் வழங்க மறுக்கும் சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகத்திற்கும் , தலித் கிறிஸ்த்தவ மக்களுக்குமான முரண்பாடு முற்றி போராட்டமாக வெடித்தது. இந்த போராட்டத்தை முன்னெடுத்த தலித் கிறிஸ்த்தவ மக்கள் கூட்டமைப்பில் இணைந்து போராடி வந்தவர் என்பதால் அவர் மரணம் அறிந்து அதிர்ச்சியடைந்த மக்கள் ஓரியூரிலும் அவர் உடலை வைத்திருந்த இராமநாதபுரம் அரசுமருத்துவமனையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இந்த மரணத்திற்கான காரணம் அறிய முறையான விசாரணையை கோரினார்கள். திருச்சபையில் தீண்டாமை நடவடிக்கைகளை எதிர்த்து போராடி வந்ததால் ஓரியூர் தேவாலய நிர்வாகத்திற்கும் இதில் தொடர்பிருக்கும் என மக்கள் நம்பியதால் ஆவேசமடைந்தார்கள். தாமே விசாரணை செய்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து முரண்டுபிடித்தது . எனவே 7.9.15 அன்று அரசு மருத்துவமனையிலிருந்து சார்லஸ் உடலை எடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. சார்லஸ் அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் மாவட்ட காவல்துறை உறுதிகொடுத்த நிலைக்கு மாறாக ஸ்தல காவல்துறை அதிகாரிகள் தவறான தகவல்களை வெளியிட்டுவந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி , தியாகி இமானுவேல் பேரவை, தலித் கிறிஸ்த்தவ மக்கள் கூட்டமைப்பு விடுதலை சிறுத்தைகள் புதிய தமிழகம் உள்ளிட்ட அமைப்புகள் கூடி சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி மனு கொடுத்தும் அதற்கான எந்த ஏற்பாடும் இல்லாத நிலையில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி , தியாகி இமானுவேல் பேரவை சார்பில் வெள்ளயபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்புமுன்னணி பொதுசெயலாளர் கே.சாமுவேல்ராஜ் , தியாகி இமானுவேல் பேரவை தலைவர் பூ.சந்திரபோஸ், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட
செயலாளர் வி.காசிநாததுரை , தாலுகா செயலாளர் கே.குணசேகரன், தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அருள்தாஸ், ஸ்டீபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் வான்தமிழ்இளம்பரிதி, செயலாளர் நா.கலையரசன் திருவாடானை தாலுகா ஒருங்கினைப்பாளர் பூபாலன் ஆகியோர் உரையாற்றினார்கள். இத்தனை போராட்டம், மரணம், பதட்டம் அனைத்தையும் கண்டு சிவகங்கை மறைமாவட்டம் பாவமன்னிப்பு பெற மறுக்கிறது. பேய்,பிசாசு,சாத்தான்கள் கோவில் , தர்கா, ஆலயங்கள் போன்றவற்றின் வாசலை தாண்டாது என சினிமாக்கள் சொல்வதுபோல தேவாலய வாசலுக்குள் நுழைந்து விசாரிக்க தயங்குகிறது அரசும், காவல்துறையும்.
எனவே திருச்சபையால் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராகவும் , குருபட்ட மாணவர் மைக்கேல் ராஜ்-க்கு குருபட்டம் வழங்கவும் சார்லஸ் மர்ம மரணத்தை சி.பி.சி.ஐ.டி மூலம் விசாரணை நடத்துவதை உறுதிசெய்யவும் தலித் அமைப்புகளையும், ஜனநாய சக்திகளையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை தொடர வேண்டியுள்ளது.
நா.கலையரசன்.
Thursday, January 21, 2016
தடுமாற்றம்
சங்க இலக்கிய
சாருபிழிந்து
வகுப்பாசிரியர்கள்
வந்து வலிந்து
ஊட்டிய போதும்
எதிரணிக்கெதிராய்
எதுகை மோனையுடன்
வரிசை கட்டி வார்த்தைகள்
வந்து மோதிய போதும்
கற்றறிந்த அறிஞர்கூடி
கம்பனின்-பாரதியின்
கவிதைகளில்
கலந்துருகி
என்னை கரைத்தபோதும்
முளைப்பாறி விழாக்களில்
இல்லாத மான்தேடி
காயாத கானகத்தே என
கட்டிப்போடும் கானத்திலும்
நிலை கொள்ளாத மனது
வார்த்தை அரும்பிவரும்
பக்கத்து வீட்டு மழலை
மடியமர்ந்து பரிமாறும்
மாமா எனும் வார்த்தை கேட்டு
உறுகி வழிகிறது…
மங்களக்குடி –நா.கலையரசன்
Tuesday, December 22, 2015
மலைவாழ் மக்கள் மாநாடு
அக்டோபர் -3 திருவண்ணாமலை நகரம் தனது ஆதிமக்களை வரவேற்க தயாராய் இருந்தது. நகரம் முழவதும் மாநாட்டு தகவல் தாங்கிய விளம்பர பலகைகள் இன்னும் கூடுதல் எதிர்பார்பை உருவாக்கிட மதியத்திலிருந்தே ஆதிமக்கள் நகரத்தில் வலம வரத் துவங்கினார்கள். மாலை 5 மணிக்கு பழைய அரசு மருத்துவமனை அருகிலிருந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் முன்வரிசையில் பயணிக்க ஆயிரக்கணக்கான பழங்குடி மலை மக்கள் பேரணியாய் அணிவகுத்தனர் . தங்களது பாரம்பரிய உடை, இசை, நடனம் என தங்களது கலாச்சார அடையாளங்களுடன்; பேரணியை பெருமைப்படுத்தினார்கள். திருவண்ணாமலை நகர மக்கள் அட இத்தனை பேரா என வியந்து பார்க்க இளைஞர் இளம்பெண்கள் சிறுவர்கள் முதியோர் என மலை மக்களின் முழு பங்களிப்பாய் பேரணி இருந்தது.
அண்ணாசிலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தோழர்கள் பிருந்தாகாரத் , ஜிஜேந்திர சௌத்ரி, கே.பாலகிருஷ்ணன் , பி.சண்முகம் என பங்கேற்று மலைவாழ் மக்களில் வாழ்வுரிமை போரில் உடனிருக்கும் உறுதியான உறவுகள் நாங்கள் என கூடியிருந்த மக்கள் திரளின் உற்சாக முழக்கங்களிடையே உறுதி தந்தார்கள்.
அக்டோபர் 4,5 தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடாக நடைபெற்றது. கடந்த மாநாட்டிற்கு பிறகு தங்கள் பகுதிகளில் தங்களின் வாழ்வுரிமைக்காக நடத்திய எண்ணற்ற போராட்ட தழும்புகளை தடவி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்துடனும் வரும் காலங்களில் தமது இலக்கினை அடைய தொடர வேண்டிய பாதைக்கான தடயத்தை கண்டறியவும் 284 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் பொதுச்செயலாளர் அறிக்கையும் அதனை மையமாக வைத்து நடந்த பிரதிநிதிகள் விவாதங்களும் தங்கள் வாழ்விடங்களை பாதுகாத்துக் கொள்ளவும் தங்களது குழசமூக அடையாளமான சாதி சான்றிதழ் பெறவும் வனவுரிமைகளை உறுதிசெய்யவும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகளை உறுதிசெய்யவும் தமது சமூக பெண்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைகள் குறித்துமாகவே இருந்தது.
நாடு முழுவதும் உலகமயத்தின் உதவியுடன் கார்பரேட் நிறுவனங்களின் இலாப பசிக்கு இந்த நாட்டின் கனிம வளங்களை இரையாக தரும் இன்றைய ஆட்சியாளர்கள் தற்போது மலைகளையும் தாரைவார்த்து வருகிறார்கள். இதற்கு ஏதுவாக மலைபகுதிகளை தங்கள் வாழ்விடமாக கொண்டிருக்கும் மலை மக்களை வெளியேற்றிட அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிரான மலைமக்களின் போராட்டத்துடன் இடதுசாரிகள் உதவியுடன் இருந்த ஐக்கிய முன்னணி கூட்டணி அரசை நிர்பந்தித்து 2006-ல் வனஉரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு ஓரளவு நிம்மதி என்றாலும் தமிழகத்தில் விலங்குள் பாதுகாப்பு எனும் பெயரில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் வாழ்விடமான வனஉரிமையை தடுத்து நீதிமன்றம் பிறப்பித்த தடையால் தமிழக பழங்குடியின மக்களுக்கு கைக்கு எட்டியது வாய்;க்கு எட்டாத கதையாகிவிட்டது. வனங்கள் விலங்குகளுக்கும் சொந்தம்தான் . வனத்தின் அதிபர்களான பழங்குடியின மக்களுக்கு மட்டும் சொந்தமில்லையா என .. நாங்கள் மலைமக்கள் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் பி.சண்முகத்தோடு பேசிக்கொண்டிருந்தபோது வேலூரை சேர்ந்த ஒரு பெண் பிரதிநிதி பரபரப்பாய் வந்து நான் தலைவரோடு கொஞ்சம் பேசனும் என்றார். எது சம்பந்தமாக என்று கேட்டோம். எங்க மலை சம்பந்தமாக என்றார். சரி தோழரிடம் பேசுங்கள் என்றோம். அந்த பிரதிநிதி படபடப்போடும், பரிதவிப்போடும் சொன்னார். தோழர் நீங்கள் எங்கள் மலைக்கு வரனும் மொதல்ல 2 லாரி நின்னு எதோ மண்ண வெட்டிகிட்டு இருந்தாங்க ஏதோ கிணறு வெட்டுறாங்க என நினச்சோம். ஆனா இப்ப 7,8 லாரிகளா நிக்கிது. ஏதோ மலையெல்லாம் வெட்டுறாங்க இதை உடனே தடுக்கனும் தோழர் , மலையையும் , மரங்களையும் எதையாவது பன்றதுக்குள்ள என்றார். இதை என்னவென்று சொல்வது. இந்த பதட்டம் இதுவரை எந்த அரசாங்கத்திற்காவது , எந்த அதிகாரிக்காவது துளியளவு வந்திருக்குமா? ஏனென்றால் அவர்களுக்கும் மலைகளுக்கும் , காடுகளுக்கும் உறவுமில்லை, தொடர்பும் இல்லை. ஆனால் இந்த மலைமகள் உறவுக்காரியாய் நின்று பதறியதிலிருந்தே தெரியவில்லையா..? மலைகளும் , காடுகளும் அவர்களுக்கு சொந்தமானது. அவற்றின் பிள்ளைகள் மலைமக்கள். ஆனால் கார்பரேட் முதலாளிகளுக்கு நிலப்புரோக்கர்களாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளின் பார்வையில் மலைகளின் உரிமையாளர்களான இந்த பழங்குடியின மக்கள் படவே இல்லை.
மேலும் தமிழகத்திலுள்ள பழங்குடியின மக்களை அரசு ஆய்வு செய்து 36 பழங்குடி சமூகக் குழுக்கள் உள்ளது என அறிவித்துள்ளது. ஆனால் இந்த குழக்களில் சமூக அடையாளமாக கருதப்படும் சாதி குறித்த சான்றிதழ் பெற நீண்ட நெடும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 1992-ல் மலை வாழ் மக்கள் சங்கம் துவங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர் போராட்டங்கள் நடத்தி வந்ததின் பயனாக 7,96,697 பழங்குடியின மக்களில் 2,75,000 பேருக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் ஏற்பட்ட அரசுகள் தந்த நெருக்கடி வாழ்க்கை தேவைகளுக்கான போராட்டங்களில் சமவெளி பகுதிக்கு வந்து வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் தருவதற்கோ சொத்தை காரணங்களாக சொல்லி மறுக்கிறார்கள். இன்னும் ;மலை மக்களுக்கு சான்றிதழ் தர மறுப்பதால் அவர்களின் கல்வி வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது. பழங்குடியின மக்களின் எழுத்தறிவு என அரசே 54 சதம் என அறிவித்திருக்கிறது. மீதம் 45 சதம் படிப்பதற்கு சான்றிதழ் கிடைக்காமல் நடக்கப்போவதில்லை. பழங்குடி மக்களுக்கென உள்ள உண்டுஉறைவிட பள்ளிகளும் கட்டமைப்பு வசதியில்லாமல் போதிய ஆசிரியர்கள் இல்லாமலும் சடங்காய் நடந்து வருகிற சூழலில் பழங்குடியின மக்களுக்கு கல்வி உரிமையை ஈவு இரக்கமின்றி பரிமுதல் செய்கிறார்கள்.
வேலையை பொருத்தவரை தமிழகத்தில் பழங்குடி மக்களுக்கு 1சதவீத இடஒதுக்கீடு இருந்தாலும் டி.பிரிவுகளில் மட்டுமே பணிநியமனம் வழங்கபபடுகிறது. நியாயமாக நிரப்பப்படவேண்டிய காலி பணியிடங்கள் நிரப்படாமலேயே உள்ளது. சாதி சான்றிதழ் வழங்கப்படாதது என்பது அவர்களுக்கான கல்வி, வேலை, சமூக நலத்திட்ட உதவிகளை பெறுவதைதடுக்கும் செயலாகும். இது அவர்களுக்கான சமூக நீதி மறுக்கபபடுவதையே உணர்த்துகிறது. ஏற்கனவே தலித்துக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை வெளியிடக்கோரி தலித் அமைப்புகள் போராடிவரும் சூழலில் பழங்குடி மக்களுக்கும் இந்த பிரச்சனை கடுமையாக உள்ளது விவாதங்களில் வெளிப்பட்டது.
இந்த மக்களின் மேம்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட பழங்குடியின நலத்துறை அவர்களின்; நலன் குறித்தோ வாழ்வாதரங்கள் மேம்படுவதை குறித்தோ, அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் முறையாக செலவிடப்படுகிறதா ? அவை அந்த மக்களுக்கு பய்னபடுகிறதா? அவர்களுக்கான குடியிருப்புகள் குடிதண்ணீர் , ஆரம்பப்பள்ளி , சுகாதாரநிலையம் தெருவிளக்கு, போன்ற தேவைகள் உள்ளதா? என்று கண்காணித்து போதுமான நிதியை அரசுகளிடம் பெற்று அவற்றை நிறைவேற்றி தரும் நிலையில் பழங்குடியின நலத்துறை இல்லை. காரணம் மேலிருந்து கீழ்வரை பொருத்தமான தேவையான அதிகாரிகளை நியமிக்கவோ அதற்கான அலுவலகங்களோ , ஊழியர்களோ நியமிக்கப்படாத நிலையில் ஆவணங்களாக மட்டுமே அவர்களுக்கான நலத்துறை செயல்படுவது அவமானமாகும்.
அத்துடன் வாச்சாத்தி கொடுமைகளை மலைவாழ் மக்கள் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கொண்டு மக்களை திரட்டி போராடியதுடன் சட்டரீதயாகவும் போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ள நிலையில் சூடுகண்ட பூனைகளாய் பழங்குடியின மக்கள் மற்றும் பெண்களிடம் கடந்த காலத்தை போல அத்துமீரல்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது என்றாலும் பழங்குடியின மக்கள்தானே என்ன செய்துவிடுவார்கள் என்ற தைரியத்தில் பழங்குடியின பெண்களிடம் சிலர் அத்துமீறுவதும் தொடர்கிறது. அதற்கெதிரான போராட்டங்களின் மூலம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வைத்துள்ளதையும் மாநாடு கவனப்படுத்தியது.
ஆக 2 நாள் பிரதிநிதிகள் மாநாட்டில் மேற்கண்ட பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வை நோக்கி ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்கவும் பழங்குடியின மக்கள் மத்தியில் செயல்படும் இதர அமைப்புகளை இணைத்துகொண்டு செயல்படவும் உறுதியெடுத்தது.
இந்திய சாதி சமூகத்தில் சமூக பொருளாதார நிலையில், அரசியல் அதிகாரத்தில்;;;;, தமக்கான பங்கினைப்பெறவும், சாதி அடுக்குகளில் கீழே தள்ளி ஒடுக்கப்பட்டதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் ஒவ்வொரு சாதிசமூக பிரிவுகளும் போராடியே வந்துள்ளது. உயர் சாதியிடமிருந்து பிற்ப்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரிமிருந்து தலித்துகள், இவர்களோடு , இதற்கும் கீழாய் விளிம்பு நிலையில் வாழும் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடமான, வாழ்வாதாரமாக விளங்கும் மலைப்பகுதியை விட்டு விரட்டிவிட நினைக்கும் சதியை எதிர்த்தும், தங்கள் மீது அரசுகளால் ஏவப்படும் அடக்குமறைகளை எதிர்த்தும், போராடிவரும் பழங்குடி மக்களுடன் இரண்டரக்கலந்து நின்று போராடி வருகிறது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் தோழர் பிருந்தாகாரத் பேசினாh.” ஏ… ஆட்சியாளர்களே, அதிகாரிகளே இனிமேல் எங்கள் மலைமக்களின் மண்மீதோ, எங்கள் பெண் மீதோ கைவைக்க வேண்டுமென்று கனவிலும் எண்ணாதீர்கள். “ ஏனெனில் அங்கு நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு பலமூட்டும் செங்கொடி இருக்கிறது என எச்சரித்தார்”; அந்த வார்த்தைகளின் நம்பிக்கை முகத்தில் மிளிர மலை மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும்; ஒருவரை தங்கள் அமைப்பில் உறுப்பினராக்குவது என்ற மாநாட்டு இலக்கை மனதில் ஏந்தி தங்களின் இல்லங்களை நோக்கி மலையேறினார்கள். அதே நம்பிக்கையோடு நாமும் விடைபெற்றோம்.

Tuesday, December 16, 2014
“நாடோடி வாழ்க்கையை வேறோடு களைவோம்
- நா.கலையரசன் -
இராமநாதபுரம் மாவட்டம் மானாவாரி மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் பிரதானமான தொழில் விவசாயம். இங்கு 1.30 லட்சம் nஉறக்டேரில் விவசாயம் நடைபெறுகிறது. அடுத்தது கடல் தொழில் , அதை அடுத்து கட்டுமானம் , சுமைப்பணி என முறைசாரா தொழில்கள் தான் உள்ளது. இ;ந்த மாவட்டத்தில் வாழும் 1337560 பேர் மக்கள் தொகையில், விவசாயிகள் 179562 இலட்சம் . விவசாய தொழிலாளர்கள் 124483 பேராம். (இந்த கணக்குகள் கேள்விக்குறிதான் ஏனெனில் 2011-ல் மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி 2001-முதல் 2011 வரையான காலத்தில் விவசாய தொழிலாளர் எண்ணிக்கை 9லட்சத்து 70,000 கூடுதலாகியுள்ளது என்பதிலிருந்து சிறு விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து கூலிகளாகிவிட்டனர். இந்த விபரங்களின்படி விவசாய தொழிலாளர் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்) அந்த வகையில் இந்த மாவட்ட விவசாய தொழிலாளர் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்தை தாண்டிவிடும். (அதுமட்டுமல்ல 2011 கணக்கெடுப்பில் தமிழகத்தில் 317 கிராமங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளனர் ) இவர்களுக்கான வாழ்வாதாரம் விவசாயத்தைச் சார்ந்தே உள்ளது. விவசாயத்தில் இயந்திரங்கள் ஈடுபட்ட பிறகு ஒரு ஆண்டில் குறைந்தது 40 முதல் 50 நாட்கள் இருந்த விவசாய வேலைகள் குறைந்து போனது. மேலும் அடுத்தடுத்த வறட்சிகள் இந்த கூலித்தொழிலாளர்களை கட்டுமான தொழிலுக்கும், சுமைபணி தொழிலுக்கும் விரட்டியது. அந்த பணிகள்தான் வறட்சியான காலங்களில் குறைந்த பட்சம் வறுமையிலிருந்து தப்பித்து கொள்ள பயன்பட்டது. இன்று அதிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. மிகக் குறைந்த கூலிக்கு வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளை போல் கொண்டுவந்து இந்த தொழில்களில் ஈடுபடுத்துவதால் ( அவர்களும் தொழிலாளர்கள்தான் . இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேலைசெய்வதற்கு உரிமை உள்ளது என்பதும் உண்மைதான் ஆனால் அவர்களுக்கு குறைந்த கூலி என்பதால் ) இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலை குறைந்துள்ளது. மேற்கண்ட தொழிலிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வெளி மாவட்டம் , மாநிலம் என இந்த தொழிலாளர்கள் வாழ்க்கை நாடோடிகளை போல் மாறிவிட்டது. இவர்களுக்கான வாழ்க்கை பாதுகாப்பு ஏதும் இல்லை. சமூக பாதுகாப்பு திட்டங்களும் இல்லை. இந்த ஏதுமற்ற மக்கள் குறித்து எந்த அரசும், அரசியல் கட்சிகளில் இடதுசாரிகளை தவிர எவரும் கண்டுகொள்ளவில்லை. இந்த கட்சிகளின் ஒவ்வொரு தேர்தலிலும் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் கூட ( சம்பிரதாயத்திற்குத்தான் வெளியிடுகிறார்கள் என்றாலும் கூட ) இந்த ஏதுமற்ற தொழிலாளர்களுக்கு என எதையுமே வாக்குறுதியாய் தருவதில்லை. அதிகாரிகளும் இவர்களை அடிமைகளைப்போலவே நடத்தி பழக்கப்பட்டு போனார்கள். எனவே இவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு கவலை ஒன்றும் இல்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களுக்காக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி இவர்களுக்கான வேலை, கூலி, வீடு சமூக பாதுகாப்பு தி;ட்டங்கள் கோரி தொடர்ந்து போராடி 2011-ம் வருடம் இவர்களுக்கான சமூக பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் வந்தது. இது எந்த உரிமையும் இல்லாமல் இருந்த விவசாய தொழிலாளிகளுக்கு முகவரி தந்தது. சமூகப் பாதுகாப்பெனும் நம்பிக்கை கிடைத்தது. மேலும் இடதுசாரிகள் ஆதரவுடன் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -1 ஆட்சியில் இடதுசாரிகளுடைய தொடர் நெருக்கடியால் 2006 பிப்ரவரி 2-ல் 200மாவட்டங்களிலும் இன்றைக்கு அத்தனை ஊராட்சிகளிலும் அமுலாக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச்சட்டம் விவசாயத் தொழிலாளர்களின் நாடோடி வாழ்க்கைக்கு முடிவு கட்டியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாலும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க போராட்டங்களாலும் அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் சமூக நலச்சட்டங்கள் தந்த நம்பிக்கையாலும், இராமநாதபுரம் மாவட்டத்திலும் இத்தொழிலாளர்களை ஒன்றினைக்கும் பணியில் கட்சி ஈடுபட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் விவசாய தொழிலாளர்களில் சரிபாதிக்கு மேல் தலித்துகளாக உள்ளனர். இவர்களுக்கான கோரிக்கை இன்னும் விரிவடைகிறது. குடிமனை , குடிதண்ணீர், சாலைவசதி, இவர்கள் மீது ஏவப்படும் சாதி ஒடுக்குமுறை போன்ற பிரச்சனைகளிலும் தலையிட வேண்டியதிருக்கிறது. இதில் அரசால் தலித் மக்களுக்கு கட்டித்தரப்பட்ட காலனிவீடுகள் குறிப்பாக அருந்ததிய மக்களுக்கான வீடுகள் காலாவதியாகி இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதை மராமத்து அல்லது புதுப்பிப்பதற்கான கோரிக்கையோடு மாவட்ட நிர்வாகத்தை அணுகினால் கைவிரிக்கும் நிலைதான் தொடர்ச்சியாக உள்ளது. அதற்கான நிதி என்று தனியாய் கோரவேண்டும் என்கிறார்கள் . இந்த தீராத பிரச்சனைக்கு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் விடைகான வேண்டியுள்ளது.
விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் திரண்ட வீட்டுமனை கோரிய 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் , காத்திருக்கும் போராட்டம், 100 நாள் வேலைதிட்ட முறைகேடுகளை கண்டித்து முறைப்படுத்துவதற்கான போராட்டங்கள் என தொடர்ந்து போராட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் அணி திரண்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த அன்றாடங்காச்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிகாட்டாத அரசு நிர்வாகம் பணம் கொடுத்து பதவி பெறலாம் என்ற மெதப்பில் ஆட்சியாளர்கள் , இவர்களால் மக்கள் போராடிப் பெற்ற சமூக நலத்திட்ட உதவிகளைக் கூட லஞ்சத்திற்காக விற்பதும் பொருத்தமற்ற காரணங்களை கூறி நிறுத்துவது என அந்த திட்டங்களை சீர்குலைக்கும் வேலைகளை செய்து வருகிறார்கள் அதிகாரிகள்.
வீ;;ட்டுமனை கேட்டு இந்த மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட 5000 மனுக்களுக்கு பதில் என்ன , முதியோர் பென்சன், விதவை பென்சன், திருமண உதவி பிரசவநிதி, கல்வி நிதி என சகலத்தையும் சீரழிக்கிறார்கள். வராது வந்த மாமனியார் இந்த தொழிலாளர்களுக்கு கிடைத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை எப்படி அமுலாக்குவது என்ற எந்த சட்ட விதிகளையும் கடைபிடிக்காமல் இந்த தி;ட்டத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சீரழிக்கிறது. இந்த மாவட்டத்தில் 100 நாள் வேலையின் பணிகள் கிராம சபைகளில் தேர்வு செய்வதில்லை . வேலைக்கான அளவு, அளந்து எடுக்கும் முறை வேலை வாங்கும் ஏற்பாடு –எதுவும் கடைபிடிக்காததுடன் வேலைத்தளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பெயர் பட்டியல் தகவல் பலகை வைப்பது , குடிதண்ணீர் வைப்பது, முதலுதவி பெட்டி வைப்பது என்ற எந்த சட்ட சலுகைகளும் செய்யப்படவில்லை. “ யாரும் வேலை பார்க்கவில்லை” என போகிற போக்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் அவதூறு செய்துவிட்டு முறைகேடு செய்யும் ஊராட்சித் தலைவர்களோடு கூட்டணி அமைத்து கொள்கிறார்கள். மேற்கண்ட பலகீனங்களால் நடைபெறும் பணிக்குரிய பயனை ஊராட்சிகளால் பெறமுடியவில்லை. இந்த குறைபாடுகளை களைய விவசாய தொழிலாளர்களே போராடுவது என களத்திற்கு வந்தால் மாவட்ட நிர்வாகங்கள் ஜனநாயகரீதியான போராட்ங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்.
நடைபெறும் பணிகளை கொண்டு ஊராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்வது என்கிற எந்த இலக்கும் இல்லாமல் இந்த திட்டத்தை முடக்கிப் போட முயற்சிக்கிறார்கள். ஊராட்சி தலைவர் துவங்கி மாவட்ட நிர்வாகம் வரை இந்த திட்டத்தை சீரழிப்பதை மறைத்து தொழிலாளர்களின் பணியின்மையே காரணம் என திசைதிருப்பி வருகிறார்கள். மத்தியில் இருக்கும் பி.ஜே.பி அரசும் இந்த திட்டத்தை நிறுத்திவிட முயற்சிக்கிறது.
இந்தியாவில் உள்ள 2.65 லட்சம் ஊராட்சிகளில் 2000 ஊராட்சிகளில் மட்டும் இத்திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக அமுல்படுத்தப்படும் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்களில் 98 ஒன்றியங்களில் மட்டுமே அமுலாகும் என்கிறார்கள். இது மீண்டும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை உருவாக்கும்.
2013 –ல் மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் அது 14,927 பேர் என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது இந்தியாவினுடைய கிராமப்புற பொருளாதாரம் சீரழிந்து கிடப்பதை உணர்த்துகிறது. வளர்ச்சி என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கடந்த கால காங்கிரஸ் ஆட்சி போலவே பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டு கம்பளம் விரிப்பதும் சாதாரணமான மக்களை பட்டிணி போட்டு கொல்வதுமான கொள்கையையே கொண்டிருக்கிறார்கள். எனவே நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து போராடி விவசாய தொழிலாளர்களுக்கு என பெற்ற சமூக நலத்தி;ட்டங்களையும் , மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் போன்றவற்றை பறிக்க பி.ஜே.பி அரசு செய்யும் சதியை முறியடிக்க மிகப் பெரும் போராட்டங்களை கட்டமைக்க வேண்டியுள்ளது. விவசாய தொழிலாளிகளை ஒன்று திரட்டுவோம். கோரிக்கைகளை வென்று காட்டுவோம்.

Subscribe to:
Posts (Atom)