சிறுகதை
________________
மூளைச்சாவு...
மங்களக்குடி நா. கலையரசன்
அவரு பேரு மாடசாமி ஆனால் அவரை எல்லாரும் மாடான்னு தான் கூப்பிடுவாங்க பின்னே அவரை போய் யாரு சாமின்னு கூப்பிடுவா மத்தவங்கள சாமின்னு கூப்பிடுற சாதியில் பிறந்துட்டு பேர மட்டும் சாமின்னு சேர்த்து வச்சிகிட்டா கூப்ட்ரு வாங்களா அதனாலதான் சாமிய கட் பண்ணிட்டு மாடன்னு சாட் பண்ணிட்டாங்க அது மட்டும் இல்ல இந்தப் பேர வைச்ச அவங்க ஆத்தா அப்பனே கூட அப்படி கூப்பிடுவது இல்லை தெரியுமா ஆனால் மாடு மேய்க்கிற மாடன் னு கேட்டுப் பாருங்க எட்டு ஊருக்கும் தெரியும் அப்படி ஒரு பேமஸ் பொண்டாட்டி எழுவக்கா மகன் மருமகள்
பேர ன்னு சொல்லி அளவான குடும்பம் விவசாய கூலி வேலை பார்த்துகிட்டு இருந்த மாடசாமியை கூப்பிட்டு ஊர்க்காரங்க இனிமே ஊர் மாடெல்லாம் நீ தான் மேய் க்கணும் அப்படின்னு உத்தரவு போட்டார்கள் ஏற்கனவே இருந்த பிச்சைமுத்து ஏதோ பிரச்சனை பண்ணி விட்டார் என்று சொல்லி அவரை விரட்டி விட்டுட்டாங்க அதனால ஊரு மனமுவந்து தந்த இந்த வேலையை தட்டாம இவர் ஏற்றுக்கொண்டார் காலையில் எட்டு மணிக்கு வீட்டுக்கு வீடு நின்னு ஆடு மாடை அவுத்து விடுங்கம்மோ.. என்று கத்துவார் எல்லாம் அவுத்து கொண்டு வந்து அம்மன் கோவில் திடலில் விட்டுடுவாங்க அங்கிருந்து இவரு வெரட்டிக்கிட்டு போயி காடு மேடெல்லாம் மேச்சு நாலு மணிக்கு கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிலேயும் விடுவார் அப்புறம் ராத்திரி ஏழு மணிக்கு ஆரம்பிச்சு வீட்டுக்கு வீடு போய் நின்னு சோறு வாங்கிட்டு வருவாரு அதையெல்லாம் சாப்பிட்டுட்டு தூங்குறதுக்கு ராத்திரி பதினோரு மணி ஆயிடும் அதற்கு பிறகு மறுநாள் காலையில் இதே மாதிரி எட்டு மணிக்கு கிளம்பி ஆட்ட மாட்ட அவுத்து விடுங்க தாயினு ஆரம்பிச்சுருவாரு இதுதான் அவருடைய அன்றாட பணி இதுக்கு மாச சம்பளம் எல்லாம் நிர்ணயம் கிடையாது ஆடு மாடு எண்ணிக்கை அவங்களோட வசதியைப் பொருத்து மாதாமாதம் 50 .100 கொடுப்பாங்க அவங்கவங்க வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா கொஞ்சம் கூட காசு தருவாங்க அவங்க உடுத்தி கிழச்ச துணிகளை தருவாங்க மாடன் குடும்பம் அதைத்தான் உடுத்திக் கொள்ளும் அவர் மனைவியும் பள்ளிக்கூட விடுமுறை அன்னைக்கி பேரனும் மாடு மேய்க்க உதவிக்கு அழைச்சிட்டு போறது உண்டு ஊர்ல யாரையாவது பொறுப்பற்றவர் என்று சொல்வதற்காக நீங்களெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொல்வதை கேட்டிருப்போம் மாடு மேய்க்கும் வேலைசாதாரண வேலை இல்லைங்க.. ஏப்ப சாப்பே ஆளுக ஆடுமாடு மேய்ச்சு கரை சேர முடியாது இறை எடுக்க வேண்டிய நேரத்துல மேய விடனும் தண்ணி காட்ட வேண்டிய நேரத்துல தண்ணிகாட்டனும் அடுத்த வீட்டு வைக்கோல் போர் வயக்காட்டுல மேயாம பாத்துக்கணும் ஒவ்வொருவீட்டு மாடுகளுக்கும் ஒரு அடையாளத்தை வைத்து கண்காணிக்கனும் சில மாடுகள் கிடேரிகலோட உரசிக்கிட்டே மேயாது அதுகள தனியா பிரிச்சு மேய விடனும் ஆடு மாடுகள் காட்டுமாடு ஆடுகளோடு சேர்ந்து விலகிப் போகிறாம கண் கொத்தி பாம்பாக கவனிக்கணும் எவனாவது சரக்கு வாங்கி வந்து வயக்காட்டுல உட்கார்ந்து குடிச்சிடடு போடுற பிளாஸ்டிக்கை தின்னுறுச்சின்னா வாய்க்குள்ள கையவிட்டு உள்நாக்க கிளறிவிட்டு கக்க வைக்கணும் இல்லைன்னா மாடு செத்துப் போயிடும் இதுதான் மாடு மேய்க்கிறது ன்னு சொல்றது இதுல சில பேரு வயக்காட்டுக்கு போறப்போ மாடுகள் மேய்க்கிற இடத்துக்கு வந்து கண்காணிப்பார்கள் அதனால ஊருக்கு முக்கியஸ்தர்கள் வீட்டு ஆடுமாடுகள் மேல தனி அக்கறை செலுத்தனும் இப்படி அக்கறையா ஆடுமாடுகளை பார்த்துக்கொள்ரதுநாள சில பேரு காசுகளையும் கூடுதலாக கொடுப்பாங்க காலையில ஆடு மாடுகளை காட்டுல விட்டதும் தொரட்டி கம் போட போயி எல தளைகளை வெட்டிப்போட்டு ஊர் தலைவர். பிரசிடெண்ட் என்று ஊர் பிரமுகர்கள் வீட்டு ஆடுு மாடுகளுக்கடுகளுக்கும் போட்டு கண்ணும் கருத்துமா பார்த்துக்கொள்வார் ஊருக்குள்ள யாராவது குறை சொன்னால் இவங்கள வைத்துத்தானே எதிர்கொள்ளனு ம் அதனாலதான் இந்த விசேஷ கவனம் இந்த கவனிப்பு எல்லாமே
__ மாடசாமி தனது பேரன் மாயழகுவுடன் ஒவ்வொரு வீடாக நின்று குரல் கொடுத்தபடி ஊர் நடுவில் இருந்த பங்களா வடிவத்தில் கட்டப்பட்டு இருந்த வீட்டின் முன்பு வந்து நின்று குரல் கொடுத்தார் அப்போது நடுத்தர வயதில் முகம் மறைத்து மீசையுடன் வெளியே வந்தவர்தான் அந்த ஊரின் தலைவரும் அந்த சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் அவரின் சாதிக்கும் தலைவராக உள்ள கார்மேகம் வெளியில் வந்த அவர் மாடசாமியை பார்த்ததும்" என்னமாடா இன்னிக்கு பேரனோட வந்து இருக்கே" என்று
மாய ழகை ஜாடையாக பார்த்தபடி கேட்டார் "இன்னைக்கு ஸ்கூல் லீவு அவனும் வர்றேன்னு பிடிவாதம் அதான் கூட்டி வந்தேன் "பின் தலையை சொரிந்தவாறு அடக்கமாக பதில் சொன்னார் "மாடசாமி அவன் சரியாத்தான் யோசிச்சி இருக்கான் இதயும் தெரிஞ்சு வெச்சுகிட்டா உனக்குப் பிறகு அவனுக்கு இது பயன்படும் இல்ல" என சிரித்தவாறு வீட்டிற்கு உள்ளே பார்த்தார் சின்னதா புசுபுசுன்னு கருப்பு வெள்ளை நிறம் கலந்த ஒரு வெள்ளாட்டுக் குட்டியை கார்மேகம் பேத்தி பூவழகி இழுத்துக்கண்டு வெளியே வந்தாள் அவளோடு வந்த கார்மேகத்தின் மனைவி அழகு நாச்சியார்
"பாத்து டி ..பார்த்து .."என்றபடி ஆட்டை கிட்டத்தட்ட தள்ளிக் கொண்டு வந்தார் வீட்டிற்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்த மாயழகு ஆச்சரியப்பட்டான் அந்த ஆட்டுக்கு கழுத்தில் அழகான கழுத்து பட்டையில் இணைந்த சலங்கை கிடந்தது நெற்றியில் அழகான ஒரு பொட்டு வைக்கப்பட்டிருந்தது இந்த ஆட்டை கட்டியிருந்த கயிறு இளம் சிவப்பு நிறத்தில் விலை உயர்ந்த கயிறு போல் தெரிந்தது ஒரு ஆட்டுக்குட்டிக்கு இப்படி அலங்காரம் செய்து இதுவரைபார்க்காததால் அதை ஆர்வமாக பார்த்தான் வெளியே இழுத்து வந்த ஆட்டைப்பார்து "பேராண்டி அந்த ஆட்டுக்குட்டியைப் பிடிச்சுக்கிட்டு வா "என்று சொன்னதும் "இந்த பாருங்க அது ஆடு இல்லை திரிஷா அப்படி தான் கூப்பிடனும்" என கார்மேகத்தின் பேத்தி கோபப்பட்டாள் "ஆமாம்பா இது ஆடு இல்லை அவலோட தங்கச்சியாம் பார்த்து புடிச்சிகிட்டு போ பத்தரமா பாத்துக்க புது குட்டி அது" என்றாள் அழகு நாச்சியார் வர மறுத்த ஆட்டை இழுத்தபடி மாடசாமி பேரனுடன் அம்மன் கோவிலுக்கு வந்தார் அங்கு ஏராளமான ஆடுகளும் மாடுகளும் நின்றது மாடசாமியை கண்டதும் மாடுகளை ஒப்படைத்துவிட்டு "ஜாக்கிரதை மாடா "பத்திரமா டா "கவனமாக "என ஆளுக்கு ஆள் எச்சரித்துவிட்டு சென்றனர் மாயழகு தனது கையில் பிடித்திருந்த ஆட்டை கவனித்தான் வயசு பொண்ணுக்கு அலங்காரம் பண்ற மாதிரி சோ வடிச்சிருக்காங்கன்னு கண்ணுல ஆச போங்க ஆட்டையை பார்த்தபடி வந்தவன் மாடசாமி அருகே வந்ததும்" எனக்கும் ஒரு ஆடு வாங்கி தருவியா தாத்தா நானும் அத இத மாதிரி வழக்கணும்னு ஆசையா இருக்கு தாத்தா "என கெஞ்சினான் பேரன்ஆசையை புரிந்து கொண்டு "இந்த மாச காசு வாங்கினதும் சந்தையில போய் வாங்குவோம் "என்று பேரனை சமாதானப்படுத்தினார் அவன் அதில் திருப்தி ஆகி அந்த ஆட்டோட விளையாட ஆரம்பித்தான் மாடசாமி ஆடு வாங்க என்ன செய்யலாம் என யோசிக்கத் தொடங்கினார் "சரி ராத்திரி சோறு வாங்க போகும்போது மாச பணத்தை சீக்கிரம் வாங்கணும் ஒத்த பேரன் ஆசைப்படுகிறான் என அவரே பேசிக் கொண்டார்" மாடசாமி யோசித்தது போலவே அன்று இரவு ராச்சோரு வாங்க புறப்படும்போதே பேரனின் ஆசையை எப்படியும் நிறைவேற்றி விட வேண்டும் ஊர் பெரிய மனுஷங்க உதவினால் கூட போதும் ஆடுகளையெல்லாம் இப்ப ஆன விலை விக்குது சின்ன குட்டி வாங்கினா கூட 5000 ஆயிரம் வரும் எப்பவும் கொடுக்கிறதோட 5 .10 சேர்த்துக் கொடுத்தால் கூட இருக்கிற கைக்காசை போட்டு வாங்கி விடலாம் என யோசித்தபடி மருமகள் தந்த பெரிய பொ ட்டி சின்ன பாத்திரம் என வாங்கிக் கொண்டு தெருவுக்குள் நுழைந்தார் முதலில் காரைவிட்டு கணபதி வீட்டு முன் நின்று" அம்மா மாடன் வந்திருக்கேம்மா "என குரல் கொடுத்தார் இவனை எதிர்பார்த்தது போல அந்த வீட்டுப் பெண் பாத்திரங்களுடன்வந்துசோற்றை
பொட்டி யிலும் குழம்பை பாத்திரத்திலும் ஊற்றினாள் "அம்மா அய்யா இருக்காகளா" என்றார் "இப்பதான் வந்து முகம் களுவுறாக வந்துருவாங்க ஏப்பா "என்றாள" இல்லம்மா ஒரு சோலியா பார்க்கணும்" நெளிந்தார் மாடசாமி" நீ வேற எதுக்கு பாக்க போற பணம் கேட்க தானே வருவார் பாரு "என உள்ளே போனாள் மாடசாமி காத்திருந்தார் .......
வயல்களுக்கு இடையேயும் வரப்பிலும் காட்டிலுமாக நீண்டு கிடந்த நடைபாதையில் மாடசாமியும் அவரது பேரன் மாயழகும் உற்சாகமாக பேசியபடி தங்களிடம் உள்ள பணத்தை எண்ணியபடி சந்தையை வந்தடைந்தார்கள் மாயழகு கண்களில் அத்தனை பிரகாசம் ஆடு வாங்குவதற்கு முன்பே அதற்கு கயிறு. சங்கு .மணி என சகலமும் வாங்கிட மாடசாமி இடம் கோரிக்கை வைத்தபடி வந்தான் வாங்குவோம் என்ற படி நடந்து கொண்டே இருந்தனர் பல வகையான ஆடுகள் மாடுகள் அதற்கான பொருள்கள் என சந்தை கலகலத்து கொண்டிருந்தது நடந்து கொண்டே இருந்த தாத்தாவை நிறுத்தி "தாத்தா நீ இப்போ ஆடு வாங்கித் தருவதற்கு வந்தியா இல்ல ஆடுகளை எனக்கு காட்டிட்டு போக கூட்டிட்டு வந்தியா "என சினுங்கினான் "டேய் இன்னிக்கு நாம ஆடு வாங்கணும் ஆனா விலை கம்மியா வாங்கணும் அதுக்காகத்தான் ஆட விக்க வந்திருக்கிறது அதோட சொந்தக்காரனா இல்ல சொந்தக்காரங்க கிட்ட வாங்கிக்கிட்டு வந்து விக்கிற வியாபாரியா என்பதை முதலில் கண்டுபிடிக்கணும் இல்லைன்னா நம்ம பணத்தை கூட வாங்கி தின்னு விடுவாங்க அதனாலதான் பாத்துக்கிட்டே வர்ரேன் நம்ம பார்க்கிறது ஆட்ட இல்ல அதுக்கு பக்கத்துல நிக்கிறவன புரிஞ்சுக்கோ" என்ற தாத்தாவைப் பார்த்து "பக்கத்துல இருக்குற ஆள வைத்தே கண்டுபிடித்து விடுவியா தாத்தா எப்படி" என்றான் ஆச்சரியமாக "கண்டிப்பா தெரியும் என்னதான் ஆட்ட விக்கணும் என்று முடிவு எடுத்திருந்தாலும் ஆசையாய் வளர்த்த ஆட்டை விக்க போறோமேன்னு ஆட்டுக்குசொந்தக்காரருக்கு முகத்துல ஒரு கவலை தெரியும்ஆனால் ஆட்டை வாங்கி வந்து விக்கிறவியாபாரி வர்ற ஆளுங்களை ஏற இறங்க பார்த்து இவங்க கிட்ட ஆயிரம் கூட வாங்கலாமா 2000 கூட வாங்கலாமாங்குற பேராசை கண்களில் தெரியும் அதிலேயே தெரிஞ்சுக்கலாம் அதனால நாம அதோட சொந்தக்காரன் கிட்ட தான் வாங்கணும் "என பேரனை பார்த்தார்" சூப்பர் தாத்தா "என சிரித்தான் இப்படி பேசியபடி ஆட்டின் சொந்தக்காரர் என சோதித்துப் பார்த்து ஒரு ஆட்டை விலைபேசி 4700 ரூபாய்க்கு வாங்கினார்கள் பணத்தை வாங்கிக்கொண்டு கழுத்துக் கயிறு மாற்றி மாடசாமி இடம் கொடுத்துவிட்டு அதை ஆசையாக தடவியபடிஆட்டை வி ற்றவர் சொன்னார் "ஆட்ட பத்திரமா பாத்துக்கங்க கண்டதையும் திங்கவிட்டுறாதீங்க எங்கே பார்த்தாலும் பிளாஸ்டிக்காயிருக்கு கவனம் "என்றவரை மாடசாமி" சரிங்க "என்று சொல்லிவிட்டு பேரனை ஜாடையாக பார்த்தார் அவன் முகம் மலர தலையசைத்தான்
இவர் வியாபாரி இல்லை அவர் ஆட்டை வளர்த்தவர் என்பதை அவர் காட்டிய இந்த அக்கறை வெளிப்படுத்தியது ஆடு வாங்கியதில் இருந்து மாயழகு ஆளே மாறிப் போனான் ஆட்டுக்கு என்ன பெயர் வைக்கலாம் என பலரிடம் பேசிய பிறகு சிம்பு என பெயர் வைத்தான் இது என்ன பெயர்... என்ற தாத்தாவை புழுவாக பார்த்தான் சிம்பு தெரியாதா நீ வேஸ்ட் தாத்தா என்றான் சந்தையில் வாங்கிய கயிற்றால் சங்கையும் மணியையும் சேர்த்து கழுத்தில் கட்டி ஊர்முழுக்க இழுத்துச் சென்று காட்டினார் ஸ்கூல் நேரம் போக மற்ற நேரம் அதோடு தான் அவன் நேரம் போனது விடுமுறை நாட்களில் தாத்தாவுடன் மாடு மேய்க்க போனாலும் இவன் ஆட்டுக்கு மட்டும் தொரட்டி மூலமாக கருவை காய் வாகை க்காய் .இலை தழை என ஒடித்துப் போடுவான் இப்படியே தொடர்ந்தது இந்த செல்ல குடும்பத்திற்குள் திரிஷாவும் வந்து சேர்ந்தாள் அதுதாங்க ஊர் தலைவர் கார்மேகம் பேத்தி பூவழகி வளர்க்கும் திரிஷா ஆடு தான் அது காடு முழுவதும் இவர்கள் ராஜ்ஜியம்தான் மாயழகு தொ ரட்டி யுடன் கிளம்பினால் சிம்பு திரிஷா அதோடு இன்னும் சிலர் என ஒரே கலகலப்பு தான் அதிலும் திரிஷா சிம்புவுடன் ஒட்டிக்கொண்டு கட்டிப்பரண்டு விளையாடியது மாலையில் வீட்டுக்கு போக மறுத்து சிம்புவுடன் செல்ல முயல்வதும் வம்பாய் கார்மேகம் பேத்தி
இலுத்துச் செல்வதும் வாடிக்கையாகிப் போனது ஆனாலும் சிம்பு வின் தலை மறையும் வரை திரிஷாவின் கதறல் கேட்டுக்கொண்டே இருக்கும் ஆடு மாடுகள் பகல் முழுவதும் கூட்டமாய் திரிந்துவிட்டுமாலை பிரிகிறது ஒரு மாதிரி இருக்கும் தானே என கார் மேகம் மனைவி அழகுநாச்சி அவளே சொல்லி கொள்வாள் இருந்தாலும சிம்புவை விட்டு திரிஷா பிரிய மாட்டேன் என்கிறாளே என கார்மேகத்தின் நண்பர்கள் கேலி செய்து சிரிப்பார்கள் இப்படியே நாட்கள் ஓடியது வழக்கம் போல காலையில் மாட்டை அவிழ்த்து விடச் சொல்லி கார்மேகம் வீட்டின் முன் வந்து குரல் கொடுத்தார் மாடசாமி அப்போது ஏதோ ஒரு பிரச்சனையை காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள் அவரோடு ரைஸ்மில் தங்கராசு காரைவிட்டு மகாலிங்கம் போலீஸ் வேலை பார்க்கிற ஊர் பிரசிடெண்ட் மூர்த்தி ஆகியோரும் பேசிக்கொண்டிருந்தனர் ஆடு மாட்டை எல்லாம் கார்மேகம் வீட்டு பண்ணைக்காரன் அவிழ்த்துவிட திரிஷாவை மட்டும் வீட்டிற்கு உள்ளிருந்து பேத்தி பூவழகி பிடித்து வர அழகு நாச்சியார் உடன் வந்தார் வெளியில் மாடசாமி உடன் சிம்பு நிற்பதை பார்த்து கை
கயி ரை உருவிக்கொண்டு திரிஷா பாய்ந்து வந்து சிம்புவுடன் விளையாட தொடங்கியது இதைப் பார்த்ததும் அழகுநாச்சிபதறிப் போனவளாக ஏய் மாடா..அதை பிடிப்பா செனையா இருக்கிற ஆடு இப்படி குதிக்கக்கூடாது திரிஷா... திரிஷா... என பின்னால் ஓடி வந்தவள் கயிற்றைப் பிடி ..என பதறினாள் ஆட்டை பிடித்து நிறுத்தியதும் கவனம் பா எப்ப வேணாலும் குட்டி போடுற பக்குவத்துல இருக்கு பத்தரமா பாத்துக்க என்றாள் மாடசாமியும் முகமெல்லாம் பூத்தபடி "விடுங்க தாயே நான் பார்த்துக்கிறேன்.. திரிஷா செனை புடித்ததிலிருந்து நான் பொண்ணு மாதிரி கவனிச்சு பார்த்துட்டு வர்றேன் அதுஈனுர வரைக்கும் நான் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்கிறேன் "என்றபடி ஆடு மாடுகளை விரட்டிச் சென்றான் அழகு நாச்சியார் வீட்டிற்கு செல்வதை பார்த்த படி "இந்த பொம்பளைங்களுக்குத் தான் எத்தனை பாசம் வீட்டு ஆடு மாடு எது செனை ஆனாலும் ஏதோ வீட்டு பொண்ணுக்கு குழந்தை பிறக்கப் போற மாதிரி தான் சந்தோஷப்படுவாங்க" என்றார் பிரசிடெண்ட் மூர்த்தி "அவங்களுக்கு என்ன வீட்ல இருக்கிற எல்லாரும் நல்லா இருக்கணும்னு அக்கறை இருக்கும் ஆனா வெளியில போற வர்ற ஆம்பளைங்களுக்கு தானே எதையும் ஆராய்ந்து பாக்குற அறிவு இருக்கும்".. என சீரியஸாக பேசினார் தங்கராசு" நீ என்ன ஆராஞ்சு கண்டுபிடிச்சது என்ன அதை சொல்லு முதல்ல" என்று கேலியாக கேட்டான் சந்திரன் "அதுவா ...அதுவா.". என தங்கராசு இழுக்க.. அனைவரும் அவனையே ஆர்வமாக பார்த்தார்கள் "என்னதான்னு சொல்லுப்பா"என ஆளாளுக்கு கெஞ்ச "சொல்லுகிறேன்பா ஒரு ஆண்ட சாதியோடு ஆகப்பெரும் தலைவர் ஒரு மாடு மேய்க்கிற மாடனுக்கு சம்பந்தி ஆயிட்டாரு சம்மந்தியாகி சமத்துவவாதிஆகீட்டார்
எனக்கூறி கெக்கலி கட்டி சிரித்தான் அதிர்ந்துபோன கார்மேகம் "என்னப்பா சொல்ற "என படபடத்தார் "இன்னும் உங்க வீட்டு த்ரிஷா மேடம் மாடன் பேரன் வளக்குற சிம்புவோட சேர்ந்துதானே செனை ஆயிருக்கு அப்படின்னா மாடன் உனக்கு சம்பந்தி தானே" சிரிப்பை நிறுத்தாமல் தங்கராசு பேச பேச கார்மேகம் ரண கொடூரமானார் "ஏப்பா என்னோட ஆடு எந்த ஆட்டுக்குசெனை ஆச்சுன்னு பின்னாடியே திரிஞ்சு கண்டுபிடிச்சியாக்கும்"என்றார் கார்மேகம் சலிப்பாக "இதைக் கண்டுபிடிக்க சி ஐடியா போடணும் மேற்கு காட்டுப்பகுதியில் தான மாடன் ஆடு மாடுகளை மேய்க்கிறான் அந்தப் பக்கம் தான் என்னோட கொய்யாத்தோப்பு... அப்ப பலமுறை நான் பார்த்திருக்கேன் மாடன் ஓட பேரன் வளக்குற சிம்பு ங்குற ஆட்டோ தான் ஆடு எப்பவும் சுத்தம் நான் அதை பலமுறை பார்த்திருக்கேன் அதையெல்லாம் விடுங்க... சாயங்காலம் கொண்டு வந்து வீட்டில் விடும் போது எத்தனை முறை திரிஷா அந்த சிம்புவோட போறதை போராடி உன் பணக்காரன் இழுத்துட்டு போய் இருக்கான் அதை நீயே எத்தனை முறை பார்த்து இருக்கே... பின்ன இப்படி பேசுற" என தூண்டினார் தங்கராசு அதற்குத் தாளம் இட்டனர் சந்திரனும் மகாலிங்கமும் கார்மேகத்திற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை "சரி விடுப்பா இதைப் போய் பெருசா பேசுறே" என தூண்டினான் சந்திரன் "எதை விட சொல்ற இது நம்ம பெருமையை காப்பாத்துற விஷயம்தான் ஆண்டசாதிபெருமை ஆணு பொண்ணுங்கள்ல மட்டும் இல்ல நாம வங்கி சொந்தமாக்கிக் கிட்ட மண்ணு மரத்துல கூட இருக்கு நாம அதை விட்டு கொடுக்கக்கூடாது புரிஞ்சுக்கோ" பொரிந்து தள்ளினான் தங்கராஜ் "ஏம்பா ஒரு ஆடு ..அது செனயானதுலயா நம்ம பெருமையும் கௌரவமும் இருக்கு" தலையிட்டார் பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி அவர் முடிக்கும் முன்னே தலையிட்ட தங்கராசு "அது வெறும் ஆடு தான் அது எப்போ நாம அதை வாங்கி நம்ம வீட்ல கட்டுவதற்கு முன்னால கொண்டுவந்து கட்டியாச்சுன்னா அது கார் மேகத்தோடு ஆடு நம்ம ஊர் தலைவர் மனைவி மக்களை எப்படி தலைவரோட இணைத்து சொல்கிறார்களோ அதுமதிரி ஆடும் சேர்ந்திடும் அப்படி பாரு அப்படின்னா அதுவும் நம்ம பெருமையோட... கௌரவத்தோடு சம்பந்தப்பட்டது இப்ப புரியுதா உனக்கு" என முடித்தவன் கார்மேகத்தின் முக உணர்வுகளை கவனித்தான் அது கழுத்து இறுகி இருந்தது தமது பேச்சு வேலை செய்வதை உணர்ந்தான் பிறகு தொடர்ந்தான்" இன்னிக்கு இது ஆட்டுக்கு ஆடு தானே விட்டால் நாளைக்கு நம்ம வீட்டு பொண்ணுகள தொடுர தைரியத்தை இது உண்டாக்கும் இல்ல எனக்கு நினைக்கவே கூசுதுப்பா அவருக்கு எப்படி இருக்கும் நான் கிளம்பறேன்பா" என கார்மேகத்தை ஜாடை காட்டி எல்லோரிடமும் விடைபெற்று வெளியேறினான் தங்கராசு பிறகு அங்கிருந்து ஒவ்வொருவராக வெளியேறினார்கள் கார்மேகம் அப்படியே அமர்ந்திருந்தார் அவரது மூளைக்குள் தங்கராஜ் சொன்னது ஓடிக்கொண்டே இருந்தது என்னைக்கு ஆடு கார்மேகத் தோட வீட்டுக்குவந்ததோ அன்னைக்கே இது கார்மேகத்தோட மனைவி இதுகாரு இது அவரோட மகள் இது அவரோடகாடு இது அவரோட ஆடு இப்படித்தானே ஊர் பேசும்" கண்களை மூடி பற்களை நறநறவென்று கடித்தார் கருமேகம்
காலை 8 மணிக்கு வழக்கம் போல மாடசாமி மாடு மேய்க்க தயாரானார் அன்றைக்கு பள்ளி விடுமுறை என்பதால் பேரன் மாழகும் அவர்கள் வளர்க்கும் சிம்புவும் மாடசாமி உடன் வந்தார்கள் ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் நின்று ஆடு மாடுகளை அவுத்து விடுங்கம்மா.. என குரல் எழுப்பியபடி கார்மேகம் வீட்டு வாசலில் வந்து நின்று குரல் கொடுத்துவிட்டு திண்ணையில் இருந்த கார்மேகத்தை பார்த்து "கும்புடுறேன் ஐயா" என்றார் கார்மேகம்என்றைக்கும் உள்ளது போல் இல்லாமல் ஏதோ கோபமாக இருப்பது போல் தெரிந்தது மாடசாமி வணக்கம் சொன்னது கூட அவன் தன்னை கேலி செய்வதுபோல உணர்ந்தார் "உன்னோட வம்சம் என் வீட்டில் வளருதடி ..".என்று கிண்டல் செய்வது போல் இருந்தது என்ன செய்வது என தெரியாமல் அவனை முறைத்தபடி இருந்தார் மாடசாமிக்கு ஒன்றும் புரியவில்லை இவர் எதுக்கு நம்மளை இப்படி முறைக்கிராறு என புரியலையே என குழம்பினார் நேரம் கடந்தது "ஐயா இன்னும் ஆடு மாடு வரலையே" என இழுத்தார் கோபமாக பார்த்த கார்மேகம் "அதெல்லாம் ஒண்ணும் வராது நீ மத்த விட்டு மாடுகளை ஓட்டிக்கிட்டு போ" என முகத்தைத் திருப்பிக் கொண்டார் மாடசாமிக்கு ஏதோ நெருடியது "ஐயா நம்ம வீட்டு ஆடுமடுகள் எதுவும் வரலையே அதான் கேட்டேன்" என்று இழுக்க "அதான் சொன்னேனே கிளம்பு இந்த வீட்டு ஆடு மாடு இனிமே வராது இங்கே வந்து நின்னு இப்படி கூச்சல் போடாத முதல்ல போ "என்றதும் மாடசாமி பதறிப்போனார் "ஐயா என்ன ஆச்சு ஏன் வராதுன்னு சொல்றீங்க நம்ம வீட்டு ஆடுமடுகளை வித்துட்டீங்களா" எனக் கேட்டதும் "ஏன் உன்கிட்ட சொல்லாம எதுவும் பண்ணக்கூடாதா" என்று எரிச்சலாக பதில் சொன்னார் "அது இல்லீங்க ஆடு மாடு வராது ன்னு சொன்னதும் ஒரு பதட்டமா இருக்குங்க ஏன் என்ன ஆச்சு நான் எதுவும் சரியா மேய்க்கலைன்னு நினைக்கிறீர்களா ஐயா நான் நம்ம வீட்டு ஆடு மாட்டுக்கு என தொரட்டி வைத்துஇலைதலைகளை எல்லாம் ஓடித்து போட்டு பார்த்துகிட்டேன் ஐயா இடதுபக்க வயித்துக்கு எரை வலது பக்க வயிற்றுக்கு தண்ணீர் அப்படின்னு வச்சுவயிறு நிறைந்த பின்னாலதான் நான் வீட்டுக்கு கொண்டு வருவேன் அதுல ஏதாவது குறை இருந்தால் கூட சொல்லுங்கய்யா நான் சரி பண்ணிக்கறேன்" என்று கெஞ்சினாள "டேய் சொன்னா போக மாட்டியா" வரும் கோபத்தை அடக்கினார் கார்மேகம் ஆனாலும் மாடசாமி விடுவதாக இல்லை "ஏதாவது சொல்லுங்க ஐயா எனக்கு சங்கடமா இருக்கு" என மீண்டும் மீண்டும் கேட்டவுடன் கார்மேகம்" ஆட்டத் தானே பாக்கணும் பின்னால போய் பாரு" என்றார் ஆவேசமாக இப்படி சொன்னதும் பேரனுடன் பின்பக்கம் ஓடினார பின்னால் ஓடி மாட்டுத்தொழுவத்தில் பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார் உடலெல்லாம் வேர்த்தது கால்கள் நடுங்கியது அப்படியே தொழுவத்தின் தூணில் சாய்ந்து உட்கார்ந்தார் தொண்டை வறணடு பேச முடியாமல் எழுந்து திண்ணை பக்கம் வந்தார் ஆக்ரோசமக அமர்ந்திருந்த கார்மேகம் முன்னால் கண்களில் நீர் முட்ட வார்த்தைகள் நடுங்க "என்னய்யாஇப்படி பண்ணிட்டீங்களே" என வார்த்தையை முடிக்க தைரியம் இல்லாமல் அவரையே பார்த்தார் "உன்னைய அந்த ஆடு மாதிரி தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தோலை உரிக்காமல் உன்னை இப்படி நிறுத்திவைத்து பேசிகிட்டு இருக்கேன் பாரு அதுதான்டா எனக்கு இப்ப அசிங்கமா இருக்கு" வெறுப்பை கொட்டினார் கார்மேகம் "நான் தப்பு பண்ணி இருந்தா என்னைய திட்டி இருக்கலாம் அடிச்சுக்கூட இருக்கலாம் வாயும் வயிறுமாய் இருந்த ரெண்டு உசுர இப்படி கொன்னுட்டீங்கலே ஐயா " கதறி அழுதார் மாடசாமி" என்ன செய்கிறது மாடா வாயையும் வயிறையும் யார் மூலமா நெரைப்புறதுன்னு ஒரு வரைமுறை இருக்குல்ல அதை மீறினால் இப்படித்தான் செத்துப்போகணும் பொண்ணா இருந்தாலும் பொருளா இருந்தாலும் இதுதான் இந்த வீட்டில நிலைமை பேசாம போயிரு" என விரட்டினாள் அழகு நாச்சியார் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று குழப்பமாக பார்த்தார் மாடசாமி "என்னோட ஆட்ட உன்கிட்ட விட்டு அதை மேட்ச்சிட்டு வாடான்னு சொன்னா நீ கருவைக்காயை கொடுக்கிறேன் இலை தளையவெட்டி போடுறேன்னு என்னோட ஆட்டை ஏமாத்தி கூட்டிப் போய் உன்னோட கிடாரியோட பழக்கி நாசம் பண்ணி இன்னைக்கு அது குட்டி போடுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டே நியாயமா பார்த்தா இதற்கெல்லாம் காரணமான ஒன்னதான் தலைகீழாக கட்டி தொங்க வச்சிருக்கணும் நான் செய்யல இன்னும் கொஞ்ச நேரம் நின்ன.. நான் அதை செஞ்சிரவேன் ஓடிப் போயிரு "மாடன் குழம்பிப் போனார் என்ன சொல்றாங்க இவங்க இவர் வீட்டு ஆடு என்னோட ஆடு கூட இணைந்து செனையானதுக்காகவா வயித்து பிள்ளையாய் இருந்த ஆட்ட கொலை பண்ணி இருக்காங்க இது என்ன கொடுமை மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட மன நிலையாக இருக்கே எவ்வளவு அன்பாக பராமரித்த ஆடு எத்தனை பிரியமா என்னோட வந்துச்சு அந்த உயிரை அதுவும் ஒரு தாயை கொலை செய்ர அளவுக்கு கொடூரம் நிறைந்ததா இந்த சமூகம் ஆற்றாமையால் புலம்பினார் மாடசாமி தயக்கத்துடன் கார்மேகத்தை நிமிர்ந்து மீண்டும் பார்த்து "சாதாரண ஒரு ஆட்டு பிரச்சனைய இப்படஆக்கீட்டீங்களே
ஐயா" என மாடன் முடிக்கும் முன் "சாதாரண ஆடா எதுடா இந்த ஆட்டையா சொல்ற தொலைச்சிடுவேன் தாயோலி அது எங்கேயோ இருந்த போது நீ சொன்னது சரி அது எப்போ என்னோட வீட்டுக்கு வந்ததோ அன்னைக்கே என்னோட ஆடு எட்டுத்திக்கையும் கட்டி ஆண்ட பெரும்சாதி யோட தலைவர் கார் மேகத்தோடு ஆடு அதோட கூடுவதற்கும் பழகுரதுக்கும் ஒரு தகுதி வேண்டாமா கீழ்சாதி நாயே போயிரு உன்மேல கொலைவெறி யில இருக்கேன் "கறுவினார் கார்மேகம் மாடனுக்கு மனசு வலித்தது கார்மேகம் பேசுவது அதைவிட வலித்தது பொறுமையிழந்து ஆட்டில் கூட சாதி பார்க்க ஆரம்பிச்சுட்டோமா ஐயா கேவி அழுதான் "மாடசாமி "ஆடு மட்டும் இல்லடா ஆண்ட சாதிக்காரன் அக்குள் மயிரைசெரைக்கிற கத்திக்குக்கூட தகுதி வேணும்டா புரிஞ்சுதா கொன்று புதைத்து விடுவேன்" ஆவேசமாக கத்தினார் கார்மேகம் வேறு என்ன பேசுவது எனறு மாடசாமிக்கு புரியவில்லை கால்களின் நடுக்கத்தால் நிற்கவும் முடியவில்லை மேலும் நடப்பதை பார்த்து பயந்து தனது கையை கெட்டியாகப் பிடித்தபடி நின்ற பேரனை அழைத்துக்கொண்டு மௌனமாக நடந்தார் மாயழகுவின் கையில் இருந்த சிம்பு திரும்பி திரும்பி அந்த வீட்டின் கொல்லை புறத்தைப் பார்த்தபடி பின்னால் நடந்து வந்தது சிறிது நேர மௌனத்திற்கு பிறகு " தாத்தா தாத்தா அந்த ஆட்டை அதான் நம்ம திரிஷாவை எதுக்கு கொன்னாகலாம் "என்று கேட்டான் விரக்தியாக சிரித்தபடி "அந்த ஆடு நம்ம ஆட்டோட சேர்ந்து குட்டி போட போகுது இல்லையா அதனாலயாம்" என்றபடி மீண்டும் மௌனமாகி நடந்தார் "ஏன் தாத்தா ஆடு ஆட்டோட சேர்ந்து தானே குட்டி போடும் அதுல என்ன தப்பு இருக்கு" என்றவனை பார்த்து எதுவும் சொல்லாமல் திரும்பி கார்மேகத்தின் வீட்டை பார்த்து ஏளனமாய் சிரித்தபடி பேரனை இழுத்துக் கொண்டு நடந்தார் மாடசாமி........ சிம்பு இன்னும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே மாடசாமி பின்னால் வந்தது..