மன்னியுங்கள் மருத்துவரே
---------------------------------------------
இருமலும் தும்மலும்
இல்லாத பிணம்
நோய் பரப்பும் எனச்சொல்லி
கூடி கல்லெறிந்த
கூதரைகூட்டத்தை
அறிவுச் சமூகம் என
அறிவு ஏற்க மறுக்கிறது
பகுத்தறிவு பெரு நதியாய்
புத்துயிர் த தமிழகத்தை
மூடர் கூட்டத்தல இடமாய்
மாற்றிட முயல்வோரை
மன்னியுங்கள் மருத்துவரே
பெரியார் எனும் பெரு நெருப்பால்
பேரொளி பெற்றவர்கள்
அதிகாரம் பறிக்க
அறிவை தொலைத்து
காரிருளின்கால் இடையே
கவிழ்ந்துகிடைப்பதற்காக
மன்னியுங்கள் மருத்துவரே
இறை வைப்பவனே
இறைவனாகக் கொள்கிறது
விலங்குகள்
பல உயிர்களை காப்பதற்காக
உயிர் தந்த உம்மை
உதறித் தள்ளிய தற்காக
மன்னியுங்கள் மருத்துவரே
இருள் அகற்றி ஒளி தர
தன்னுயிர் தந்து மரணிக்கும்
தீக்குச்சி போல
பலருக்கு உயிர் தந்து
உயிர் நீத்தீர்
மாமனிதர் நீர
பகுத்தறிவு பயிரை
பாதுகாக்கும்
நல்லவர் உலகம் தம்
நினைவில் என்றும்வைத்திருக்கும்
நீடுவாழ் வீர் சென்று வாருங்கள்
சைமன் மருத்துவரே.
...மங்கலக்குடி நா.கலையரசன்