Thursday, January 21, 2016

தடுமாற்றம்


சங்க இலக்கிய
சாருபிழிந்து
வகுப்பாசிரியர்கள்
வந்து வலிந்து
ஊட்டிய போதும்

எதிரணிக்கெதிராய்
எதுகை மோனையுடன்
வரிசை கட்டி வார்த்தைகள்
வந்து மோதிய போதும்

கற்றறிந்த அறிஞர்கூடி
கம்பனின்-பாரதியின்
கவிதைகளில்
கலந்துருகி
என்னை கரைத்தபோதும்

முளைப்பாறி விழாக்களில்
இல்லாத மான்தேடி
காயாத கானகத்தே என
கட்டிப்போடும் கானத்திலும்
நிலை கொள்ளா- மனது



வார்த்தை அரும்பிவரும்
பக்கத்து வீட்டு மழலை
மடியமர்ந்து பரிமாறும்
மாமா எனும் வார்த்தை கேட்டு
உறுகி வழிகிறது மனசு…

               மங்களக்குடி –நா.கலையரசன்