அக்டோபர் -3 திருவண்ணாமலை நகரம் தனது ஆதிமக்களை வரவேற்க தயாராய் இருந்தது. நகரம் முழவதும் மாநாட்டு தகவல் தாங்கிய விளம்பர பலகைகள் இன்னும் கூடுதல் எதிர்பார்பை உருவாக்கிட மதியத்திலிருந்தே ஆதிமக்கள் நகரத்தில் வலம வரத் துவங்கினார்கள். மாலை 5 மணிக்கு பழைய அரசு மருத்துவமனை அருகிலிருந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் முன்வரிசையில் பயணிக்க ஆயிரக்கணக்கான பழங்குடி மலை மக்கள் பேரணியாய் அணிவகுத்தனர் . தங்களது பாரம்பரிய உடை, இசை, நடனம் என தங்களது கலாச்சார அடையாளங்களுடன்; பேரணியை பெருமைப்படுத்தினார்கள். திருவண்ணாமலை நகர மக்கள் அட இத்தனை பேரா என வியந்து பார்க்க இளைஞர் இளம்பெண்கள் சிறுவர்கள் முதியோர் என மலை மக்களின் முழு பங்களிப்பாய் பேரணி இருந்தது.
அண்ணாசிலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தோழர்கள் பிருந்தாகாரத் , ஜிஜேந்திர சௌத்ரி, கே.பாலகிருஷ்ணன் , பி.சண்முகம் என பங்கேற்று மலைவாழ் மக்களில் வாழ்வுரிமை போரில் உடனிருக்கும் உறுதியான உறவுகள் நாங்கள் என கூடியிருந்த மக்கள் திரளின் உற்சாக முழக்கங்களிடையே உறுதி தந்தார்கள்.
அக்டோபர் 4,5 தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடாக நடைபெற்றது. கடந்த மாநாட்டிற்கு பிறகு தங்கள் பகுதிகளில் தங்களின் வாழ்வுரிமைக்காக நடத்திய எண்ணற்ற போராட்ட தழும்புகளை தடவி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்துடனும் வரும் காலங்களில் தமது இலக்கினை அடைய தொடர வேண்டிய பாதைக்கான தடயத்தை கண்டறியவும் 284 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் பொதுச்செயலாளர் அறிக்கையும் அதனை மையமாக வைத்து நடந்த பிரதிநிதிகள் விவாதங்களும் தங்கள் வாழ்விடங்களை பாதுகாத்துக் கொள்ளவும் தங்களது குழசமூக அடையாளமான சாதி சான்றிதழ் பெறவும் வனவுரிமைகளை உறுதிசெய்யவும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகளை உறுதிசெய்யவும் தமது சமூக பெண்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைகள் குறித்துமாகவே இருந்தது.
நாடு முழுவதும் உலகமயத்தின் உதவியுடன் கார்பரேட் நிறுவனங்களின் இலாப பசிக்கு இந்த நாட்டின் கனிம வளங்களை இரையாக தரும் இன்றைய ஆட்சியாளர்கள் தற்போது மலைகளையும் தாரைவார்த்து வருகிறார்கள். இதற்கு ஏதுவாக மலைபகுதிகளை தங்கள் வாழ்விடமாக கொண்டிருக்கும் மலை மக்களை வெளியேற்றிட அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிரான மலைமக்களின் போராட்டத்துடன் இடதுசாரிகள் உதவியுடன் இருந்த ஐக்கிய முன்னணி கூட்டணி அரசை நிர்பந்தித்து 2006-ல் வனஉரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு ஓரளவு நிம்மதி என்றாலும் தமிழகத்தில் விலங்குள் பாதுகாப்பு எனும் பெயரில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் வாழ்விடமான வனஉரிமையை தடுத்து நீதிமன்றம் பிறப்பித்த தடையால் தமிழக பழங்குடியின மக்களுக்கு கைக்கு எட்டியது வாய்;க்கு எட்டாத கதையாகிவிட்டது. வனங்கள் விலங்குகளுக்கும் சொந்தம்தான் . வனத்தின் அதிபர்களான பழங்குடியின மக்களுக்கு மட்டும் சொந்தமில்லையா என .. நாங்கள் மலைமக்கள் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் பி.சண்முகத்தோடு பேசிக்கொண்டிருந்தபோது வேலூரை சேர்ந்த ஒரு பெண் பிரதிநிதி பரபரப்பாய் வந்து நான் தலைவரோடு கொஞ்சம் பேசனும் என்றார். எது சம்பந்தமாக என்று கேட்டோம். எங்க மலை சம்பந்தமாக என்றார். சரி தோழரிடம் பேசுங்கள் என்றோம். அந்த பிரதிநிதி படபடப்போடும், பரிதவிப்போடும் சொன்னார். தோழர் நீங்கள் எங்கள் மலைக்கு வரனும் மொதல்ல 2 லாரி நின்னு எதோ மண்ண வெட்டிகிட்டு இருந்தாங்க ஏதோ கிணறு வெட்டுறாங்க என நினச்சோம். ஆனா இப்ப 7,8 லாரிகளா நிக்கிது. ஏதோ மலையெல்லாம் வெட்டுறாங்க இதை உடனே தடுக்கனும் தோழர் , மலையையும் , மரங்களையும் எதையாவது பன்றதுக்குள்ள என்றார். இதை என்னவென்று சொல்வது. இந்த பதட்டம் இதுவரை எந்த அரசாங்கத்திற்காவது , எந்த அதிகாரிக்காவது துளியளவு வந்திருக்குமா? ஏனென்றால் அவர்களுக்கும் மலைகளுக்கும் , காடுகளுக்கும் உறவுமில்லை, தொடர்பும் இல்லை. ஆனால் இந்த மலைமகள் உறவுக்காரியாய் நின்று பதறியதிலிருந்தே தெரியவில்லையா..? மலைகளும் , காடுகளும் அவர்களுக்கு சொந்தமானது. அவற்றின் பிள்ளைகள் மலைமக்கள். ஆனால் கார்பரேட் முதலாளிகளுக்கு நிலப்புரோக்கர்களாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளின் பார்வையில் மலைகளின் உரிமையாளர்களான இந்த பழங்குடியின மக்கள் படவே இல்லை.
மேலும் தமிழகத்திலுள்ள பழங்குடியின மக்களை அரசு ஆய்வு செய்து 36 பழங்குடி சமூகக் குழுக்கள் உள்ளது என அறிவித்துள்ளது. ஆனால் இந்த குழக்களில் சமூக அடையாளமாக கருதப்படும் சாதி குறித்த சான்றிதழ் பெற நீண்ட நெடும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 1992-ல் மலை வாழ் மக்கள் சங்கம் துவங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர் போராட்டங்கள் நடத்தி வந்ததின் பயனாக 7,96,697 பழங்குடியின மக்களில் 2,75,000 பேருக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் ஏற்பட்ட அரசுகள் தந்த நெருக்கடி வாழ்க்கை தேவைகளுக்கான போராட்டங்களில் சமவெளி பகுதிக்கு வந்து வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் தருவதற்கோ சொத்தை காரணங்களாக சொல்லி மறுக்கிறார்கள். இன்னும் ;மலை மக்களுக்கு சான்றிதழ் தர மறுப்பதால் அவர்களின் கல்வி வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது. பழங்குடியின மக்களின் எழுத்தறிவு என அரசே 54 சதம் என அறிவித்திருக்கிறது. மீதம் 45 சதம் படிப்பதற்கு சான்றிதழ் கிடைக்காமல் நடக்கப்போவதில்லை. பழங்குடி மக்களுக்கென உள்ள உண்டுஉறைவிட பள்ளிகளும் கட்டமைப்பு வசதியில்லாமல் போதிய ஆசிரியர்கள் இல்லாமலும் சடங்காய் நடந்து வருகிற சூழலில் பழங்குடியின மக்களுக்கு கல்வி உரிமையை ஈவு இரக்கமின்றி பரிமுதல் செய்கிறார்கள்.
வேலையை பொருத்தவரை தமிழகத்தில் பழங்குடி மக்களுக்கு 1சதவீத இடஒதுக்கீடு இருந்தாலும் டி.பிரிவுகளில் மட்டுமே பணிநியமனம் வழங்கபபடுகிறது. நியாயமாக நிரப்பப்படவேண்டிய காலி பணியிடங்கள் நிரப்படாமலேயே உள்ளது. சாதி சான்றிதழ் வழங்கப்படாதது என்பது அவர்களுக்கான கல்வி, வேலை, சமூக நலத்திட்ட உதவிகளை பெறுவதைதடுக்கும் செயலாகும். இது அவர்களுக்கான சமூக நீதி மறுக்கபபடுவதையே உணர்த்துகிறது. ஏற்கனவே தலித்துக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை வெளியிடக்கோரி தலித் அமைப்புகள் போராடிவரும் சூழலில் பழங்குடி மக்களுக்கும் இந்த பிரச்சனை கடுமையாக உள்ளது விவாதங்களில் வெளிப்பட்டது.
இந்த மக்களின் மேம்பாட்டுக்கென உருவாக்கப்பட்ட பழங்குடியின நலத்துறை அவர்களின்; நலன் குறித்தோ வாழ்வாதரங்கள் மேம்படுவதை குறித்தோ, அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் முறையாக செலவிடப்படுகிறதா ? அவை அந்த மக்களுக்கு பய்னபடுகிறதா? அவர்களுக்கான குடியிருப்புகள் குடிதண்ணீர் , ஆரம்பப்பள்ளி , சுகாதாரநிலையம் தெருவிளக்கு, போன்ற தேவைகள் உள்ளதா? என்று கண்காணித்து போதுமான நிதியை அரசுகளிடம் பெற்று அவற்றை நிறைவேற்றி தரும் நிலையில் பழங்குடியின நலத்துறை இல்லை. காரணம் மேலிருந்து கீழ்வரை பொருத்தமான தேவையான அதிகாரிகளை நியமிக்கவோ அதற்கான அலுவலகங்களோ , ஊழியர்களோ நியமிக்கப்படாத நிலையில் ஆவணங்களாக மட்டுமே அவர்களுக்கான நலத்துறை செயல்படுவது அவமானமாகும்.
அத்துடன் வாச்சாத்தி கொடுமைகளை மலைவாழ் மக்கள் சங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கொண்டு மக்களை திரட்டி போராடியதுடன் சட்டரீதயாகவும் போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ள நிலையில் சூடுகண்ட பூனைகளாய் பழங்குடியின மக்கள் மற்றும் பெண்களிடம் கடந்த காலத்தை போல அத்துமீரல்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது என்றாலும் பழங்குடியின மக்கள்தானே என்ன செய்துவிடுவார்கள் என்ற தைரியத்தில் பழங்குடியின பெண்களிடம் சிலர் அத்துமீறுவதும் தொடர்கிறது. அதற்கெதிரான போராட்டங்களின் மூலம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வைத்துள்ளதையும் மாநாடு கவனப்படுத்தியது.
ஆக 2 நாள் பிரதிநிதிகள் மாநாட்டில் மேற்கண்ட பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வை நோக்கி ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்கவும் பழங்குடியின மக்கள் மத்தியில் செயல்படும் இதர அமைப்புகளை இணைத்துகொண்டு செயல்படவும் உறுதியெடுத்தது.
இந்திய சாதி சமூகத்தில் சமூக பொருளாதார நிலையில், அரசியல் அதிகாரத்தில்;;;;, தமக்கான பங்கினைப்பெறவும், சாதி அடுக்குகளில் கீழே தள்ளி ஒடுக்கப்பட்டதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் ஒவ்வொரு சாதிசமூக பிரிவுகளும் போராடியே வந்துள்ளது. உயர் சாதியிடமிருந்து பிற்ப்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரிமிருந்து தலித்துகள், இவர்களோடு , இதற்கும் கீழாய் விளிம்பு நிலையில் வாழும் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடமான, வாழ்வாதாரமாக விளங்கும் மலைப்பகுதியை விட்டு விரட்டிவிட நினைக்கும் சதியை எதிர்த்தும், தங்கள் மீது அரசுகளால் ஏவப்படும் அடக்குமறைகளை எதிர்த்தும், போராடிவரும் பழங்குடி மக்களுடன் இரண்டரக்கலந்து நின்று போராடி வருகிறது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் தோழர் பிருந்தாகாரத் பேசினாh.” ஏ… ஆட்சியாளர்களே, அதிகாரிகளே இனிமேல் எங்கள் மலைமக்களின் மண்மீதோ, எங்கள் பெண் மீதோ கைவைக்க வேண்டுமென்று கனவிலும் எண்ணாதீர்கள். “ ஏனெனில் அங்கு நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு பலமூட்டும் செங்கொடி இருக்கிறது என எச்சரித்தார்”; அந்த வார்த்தைகளின் நம்பிக்கை முகத்தில் மிளிர மலை மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும்; ஒருவரை தங்கள் அமைப்பில் உறுப்பினராக்குவது என்ற மாநாட்டு இலக்கை மனதில் ஏந்தி தங்களின் இல்லங்களை நோக்கி மலையேறினார்கள். அதே நம்பிக்கையோடு நாமும் விடைபெற்றோம்.