- நா.கலையரசன் -
இராமநாதபுரம் மாவட்டம் மானாவாரி மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் பிரதானமான தொழில் விவசாயம். இங்கு 1.30 லட்சம் nஉறக்டேரில் விவசாயம் நடைபெறுகிறது. அடுத்தது கடல் தொழில் , அதை அடுத்து கட்டுமானம் , சுமைப்பணி என முறைசாரா தொழில்கள் தான் உள்ளது. இ;ந்த மாவட்டத்தில் வாழும் 1337560 பேர் மக்கள் தொகையில், விவசாயிகள் 179562 இலட்சம் . விவசாய தொழிலாளர்கள் 124483 பேராம். (இந்த கணக்குகள் கேள்விக்குறிதான் ஏனெனில் 2011-ல் மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி 2001-முதல் 2011 வரையான காலத்தில் விவசாய தொழிலாளர் எண்ணிக்கை 9லட்சத்து 70,000 கூடுதலாகியுள்ளது என்பதிலிருந்து சிறு விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து கூலிகளாகிவிட்டனர். இந்த விபரங்களின்படி விவசாய தொழிலாளர் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்) அந்த வகையில் இந்த மாவட்ட விவசாய தொழிலாளர் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்தை தாண்டிவிடும். (அதுமட்டுமல்ல 2011 கணக்கெடுப்பில் தமிழகத்தில் 317 கிராமங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளனர் ) இவர்களுக்கான வாழ்வாதாரம் விவசாயத்தைச் சார்ந்தே உள்ளது. விவசாயத்தில் இயந்திரங்கள் ஈடுபட்ட பிறகு ஒரு ஆண்டில் குறைந்தது 40 முதல் 50 நாட்கள் இருந்த விவசாய வேலைகள் குறைந்து போனது. மேலும் அடுத்தடுத்த வறட்சிகள் இந்த கூலித்தொழிலாளர்களை கட்டுமான தொழிலுக்கும், சுமைபணி தொழிலுக்கும் விரட்டியது. அந்த பணிகள்தான் வறட்சியான காலங்களில் குறைந்த பட்சம் வறுமையிலிருந்து தப்பித்து கொள்ள பயன்பட்டது. இன்று அதிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. மிகக் குறைந்த கூலிக்கு வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளை போல் கொண்டுவந்து இந்த தொழில்களில் ஈடுபடுத்துவதால் ( அவர்களும் தொழிலாளர்கள்தான் . இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேலைசெய்வதற்கு உரிமை உள்ளது என்பதும் உண்மைதான் ஆனால் அவர்களுக்கு குறைந்த கூலி என்பதால் ) இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலை குறைந்துள்ளது. மேற்கண்ட தொழிலிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வெளி மாவட்டம் , மாநிலம் என இந்த தொழிலாளர்கள் வாழ்க்கை நாடோடிகளை போல் மாறிவிட்டது. இவர்களுக்கான வாழ்க்கை பாதுகாப்பு ஏதும் இல்லை. சமூக பாதுகாப்பு திட்டங்களும் இல்லை. இந்த ஏதுமற்ற மக்கள் குறித்து எந்த அரசும், அரசியல் கட்சிகளில் இடதுசாரிகளை தவிர எவரும் கண்டுகொள்ளவில்லை. இந்த கட்சிகளின் ஒவ்வொரு தேர்தலிலும் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் கூட ( சம்பிரதாயத்திற்குத்தான் வெளியிடுகிறார்கள் என்றாலும் கூட ) இந்த ஏதுமற்ற தொழிலாளர்களுக்கு என எதையுமே வாக்குறுதியாய் தருவதில்லை. அதிகாரிகளும் இவர்களை அடிமைகளைப்போலவே நடத்தி பழக்கப்பட்டு போனார்கள். எனவே இவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு கவலை ஒன்றும் இல்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களுக்காக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி இவர்களுக்கான வேலை, கூலி, வீடு சமூக பாதுகாப்பு தி;ட்டங்கள் கோரி தொடர்ந்து போராடி 2011-ம் வருடம் இவர்களுக்கான சமூக பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் வந்தது. இது எந்த உரிமையும் இல்லாமல் இருந்த விவசாய தொழிலாளிகளுக்கு முகவரி தந்தது. சமூகப் பாதுகாப்பெனும் நம்பிக்கை கிடைத்தது. மேலும் இடதுசாரிகள் ஆதரவுடன் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -1 ஆட்சியில் இடதுசாரிகளுடைய தொடர் நெருக்கடியால் 2006 பிப்ரவரி 2-ல் 200மாவட்டங்களிலும் இன்றைக்கு அத்தனை ஊராட்சிகளிலும் அமுலாக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச்சட்டம் விவசாயத் தொழிலாளர்களின் நாடோடி வாழ்க்கைக்கு முடிவு கட்டியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாலும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க போராட்டங்களாலும் அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் சமூக நலச்சட்டங்கள் தந்த நம்பிக்கையாலும், இராமநாதபுரம் மாவட்டத்திலும் இத்தொழிலாளர்களை ஒன்றினைக்கும் பணியில் கட்சி ஈடுபட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் விவசாய தொழிலாளர்களில் சரிபாதிக்கு மேல் தலித்துகளாக உள்ளனர். இவர்களுக்கான கோரிக்கை இன்னும் விரிவடைகிறது. குடிமனை , குடிதண்ணீர், சாலைவசதி, இவர்கள் மீது ஏவப்படும் சாதி ஒடுக்குமுறை போன்ற பிரச்சனைகளிலும் தலையிட வேண்டியதிருக்கிறது. இதில் அரசால் தலித் மக்களுக்கு கட்டித்தரப்பட்ட காலனிவீடுகள் குறிப்பாக அருந்ததிய மக்களுக்கான வீடுகள் காலாவதியாகி இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதை மராமத்து அல்லது புதுப்பிப்பதற்கான கோரிக்கையோடு மாவட்ட நிர்வாகத்தை அணுகினால் கைவிரிக்கும் நிலைதான் தொடர்ச்சியாக உள்ளது. அதற்கான நிதி என்று தனியாய் கோரவேண்டும் என்கிறார்கள் . இந்த தீராத பிரச்சனைக்கு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் விடைகான வேண்டியுள்ளது.
விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் திரண்ட வீட்டுமனை கோரிய 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் , காத்திருக்கும் போராட்டம், 100 நாள் வேலைதிட்ட முறைகேடுகளை கண்டித்து முறைப்படுத்துவதற்கான போராட்டங்கள் என தொடர்ந்து போராட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் அணி திரண்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த அன்றாடங்காச்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிகாட்டாத அரசு நிர்வாகம் பணம் கொடுத்து பதவி பெறலாம் என்ற மெதப்பில் ஆட்சியாளர்கள் , இவர்களால் மக்கள் போராடிப் பெற்ற சமூக நலத்திட்ட உதவிகளைக் கூட லஞ்சத்திற்காக விற்பதும் பொருத்தமற்ற காரணங்களை கூறி நிறுத்துவது என அந்த திட்டங்களை சீர்குலைக்கும் வேலைகளை செய்து வருகிறார்கள் அதிகாரிகள்.
வீ;;ட்டுமனை கேட்டு இந்த மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட 5000 மனுக்களுக்கு பதில் என்ன , முதியோர் பென்சன், விதவை பென்சன், திருமண உதவி பிரசவநிதி, கல்வி நிதி என சகலத்தையும் சீரழிக்கிறார்கள். வராது வந்த மாமனியார் இந்த தொழிலாளர்களுக்கு கிடைத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை எப்படி அமுலாக்குவது என்ற எந்த சட்ட விதிகளையும் கடைபிடிக்காமல் இந்த தி;ட்டத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சீரழிக்கிறது. இந்த மாவட்டத்தில் 100 நாள் வேலையின் பணிகள் கிராம சபைகளில் தேர்வு செய்வதில்லை . வேலைக்கான அளவு, அளந்து எடுக்கும் முறை வேலை வாங்கும் ஏற்பாடு –எதுவும் கடைபிடிக்காததுடன் வேலைத்தளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பெயர் பட்டியல் தகவல் பலகை வைப்பது , குடிதண்ணீர் வைப்பது, முதலுதவி பெட்டி வைப்பது என்ற எந்த சட்ட சலுகைகளும் செய்யப்படவில்லை. “ யாரும் வேலை பார்க்கவில்லை” என போகிற போக்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் அவதூறு செய்துவிட்டு முறைகேடு செய்யும் ஊராட்சித் தலைவர்களோடு கூட்டணி அமைத்து கொள்கிறார்கள். மேற்கண்ட பலகீனங்களால் நடைபெறும் பணிக்குரிய பயனை ஊராட்சிகளால் பெறமுடியவில்லை. இந்த குறைபாடுகளை களைய விவசாய தொழிலாளர்களே போராடுவது என களத்திற்கு வந்தால் மாவட்ட நிர்வாகங்கள் ஜனநாயகரீதியான போராட்ங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்.
நடைபெறும் பணிகளை கொண்டு ஊராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்வது என்கிற எந்த இலக்கும் இல்லாமல் இந்த திட்டத்தை முடக்கிப் போட முயற்சிக்கிறார்கள். ஊராட்சி தலைவர் துவங்கி மாவட்ட நிர்வாகம் வரை இந்த திட்டத்தை சீரழிப்பதை மறைத்து தொழிலாளர்களின் பணியின்மையே காரணம் என திசைதிருப்பி வருகிறார்கள். மத்தியில் இருக்கும் பி.ஜே.பி அரசும் இந்த திட்டத்தை நிறுத்திவிட முயற்சிக்கிறது.
இந்தியாவில் உள்ள 2.65 லட்சம் ஊராட்சிகளில் 2000 ஊராட்சிகளில் மட்டும் இத்திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக அமுல்படுத்தப்படும் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்களில் 98 ஒன்றியங்களில் மட்டுமே அமுலாகும் என்கிறார்கள். இது மீண்டும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை உருவாக்கும்.
2013 –ல் மட்டும் 1,34,799 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் அது 14,927 பேர் என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது இந்தியாவினுடைய கிராமப்புற பொருளாதாரம் சீரழிந்து கிடப்பதை உணர்த்துகிறது. வளர்ச்சி என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கடந்த கால காங்கிரஸ் ஆட்சி போலவே பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டு கம்பளம் விரிப்பதும் சாதாரணமான மக்களை பட்டிணி போட்டு கொல்வதுமான கொள்கையையே கொண்டிருக்கிறார்கள். எனவே நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து போராடி விவசாய தொழிலாளர்களுக்கு என பெற்ற சமூக நலத்தி;ட்டங்களையும் , மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் போன்றவற்றை பறிக்க பி.ஜே.பி அரசு செய்யும் சதியை முறியடிக்க மிகப் பெரும் போராட்டங்களை கட்டமைக்க வேண்டியுள்ளது. விவசாய தொழிலாளிகளை ஒன்று திரட்டுவோம். கோரிக்கைகளை வென்று காட்டுவோம்.